பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நாகர்கோவில் : ஒக்கி புயல் தாக்குதலில் பலியான மீனவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மீனவர் குடும்பம், Fisherman family,முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, நிவாரணம்,Relief, ஒக்கி புயல், Oki Storm, கன்னியாகுமரி,Oki Storm,   மீனவர்கள், Fishermen, ஹெலிகாப்டர்தளம், Helicopter site, மத்திய அரசு,Central Government, அமைச்சர் ஜெயக்குமார், Minister Jayakumar, அமைச்சர்உதயகுமார், Minister Uthayakumar,


ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்பிற்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கணக்கான மீனவர்கள் கடலில் காணாமல் போயினர். இதே புயலில் பலியான கேரளா மீனவர் குடும்பத்துக்கு அம்மாநில அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்தது.

இதனால் அதே போல் நிவாரணம், இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்பதுட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் ரயில் மறியல், உட்பட பல்வேறு தொடர் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று முதல்வர் பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.

வெள்ளிமலை கல்படி பகுதியில் புயலில் சாய்ந்த வாழைமரங்களை பார்வையிட்ட அவர், பின்னர் தூத்துார் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர்களின் கை பிடித்து ஆறுதல் கூறிய பின்னர் துாத்துார் கல்லுாரியில், பங்கு தந்தையர், மீனவ அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கருத்துக்களை கேட்டறிந்தார்.


Advertisement

பின்னர் முதல்வர் பழனிசாமி பேசுகையில்: ஒக்கி புயலில் இறந்தவர்கள் மீனவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் என்பதற்கு பதிலாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இறந்த மீனவர்கள் குடும்பத்தில் உள்ள வாரிசு ஒருவருக்குகல்வித்தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

காணாமல் போன மீனவர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவி தொகை மாதம் 2500 ரூபாய் என்பது 5 ஆயிரம் ரூபாய் என அதிகரித்து வழங்கப்படும்.

கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும். 400 நாட்டிக்கல் தொலைவிலும் தகவல் கிடைக்கும் அளவு 250 அடி உயர கோபுரம் நிறுவப்பட்டு தகவல் தொடர்பு மேம்படுத்தப்படும்.

குளச்சல் அல்லது கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர்தளம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். மீனவர்கள் குடும்ப துக்கத்தில் தானும் பங்கேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோரும் வந்தனர். மீனவர்கள் போராட்டத்தால் முதல்வர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem - chennai,இந்தியா
13-டிச-201718:38:21 IST Report Abuse

PremGood act by the government for the welfare of tamilnadu

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-டிச-201717:57:53 IST Report Abuse

pradeesh parthasarathyஇறந்து போனவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அவர்களை கண்டுபிடிக்க அவர்களை கண்டறிய ஆதார் அட்டையில் பதிவு செய்த ரேகைகள் போதுமானது .... இங்கு பாதிக்கப்பட்டுள் அனைவரும் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை சார்ந்தவர்கள்

Rate this:
Vaishalee - bangalore,இந்தியா
13-டிச-201717:26:14 IST Report Abuse

Vaishaleeமுதல்வர் அவர்களே, விஷமிகளை புறம் தள்ளுங்கள். ஓட்டளித்த மக்களின் நினைப்பு தங்களுக்கு இருந்து ஆவண செய்தாலே போதும். புதிய தலைவர்களை தமிழ் மக்கள் தேட அவசியம் இல்லை.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X