Ariviyalmalar | முப்பரிமாண அச்சு நொடிகளில் ரெடி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முப்பரிமாண அச்சு நொடிகளில் ரெடி!

Added : டிச 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முப்பரிமாண அச்சு நொடிகளில் ரெடி!

முப்பரிமாண அச்சுத் துறையில் தொடர்ந்து பல புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அண்மையில், 'வால்யுமெட்ரிக்' முப்பரிமாண அச்சு முறையை, 'சயன்ஸ் அட்வான்சஸ்' இதழ் வெளியிட்டு உள்ளது. இந்த முறை மூலம் சில நொடிகளில், ஒரு முழு முப்பரிமாணப் பொருளை அச்சிட முடியும். வழக்கமான முப்பரிமாண அச்சு இயந்திரங்கள், ஒரு பொருளை அடுக்கடுக்காகவே அச்சிடும். இதற்கு அச்சிடும் பொருளின் சிக்கலைப் பொறுத்து சில மணி நேரங்கள் முதல் ஓரிரு நாட்கள்கூட ஆகும். ஆனால், வால்யுமெட்ரிக், 3டி பிரின்டிங் இயந்திரம், ஒரு பொருளை சில நொடிகளில் முழுமையாக அச்சிட்டுக்கொடுத்துவிடும். முப்பரிமாண உருவத்தை லேசர் ஒளிக்கதிர் மூலம் உருவாக்கும், 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம்தான் இந்த வேகமான அச்சுக்குக் காரணம். ஒரு தொட்டியில் திரவ பிசினை ஊற்றி, அதன் மீது லேசர் ஹோலோகிராமை விஞ்ஞானிகள் செலுத்துகின்றனர். திரவத்தினுள் குறிப்பிட்ட தொலைவு செல்லும் லேசர் குவியமடைந்து, குறிப்பிட்ட புள்ளியை பொசுக்கி, திரவத்தை அந்த இடத்தில் கெட்டியான திடப்பொருளாக்குகிறது. இதே பாணியில், உருவாக்கப்படவேண்டிய பொருளின் முழு ஹோலோகிராம் உருவமும் திரவத்தினுள் பாய்ந்து பொசுக்குவதால், சில நொடிகளுள், அச்சிடப்படவேண்டிய பொருள், பிசின் திரவத்தில் உருவாக்கப்பட்டுவிடும்.
அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம், கலிபோர்னிய பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளின் விஞ்ஞானிகள் கூட்டாக வால்யுமெட்ரிக் முப்பரிமாண அச்சு முறையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த முறையில், எவ்வளவு சிக்கலான அமைப்பைக் கொண்ட பொருளையும், சில நொடிகளில் அச்சிட்டு எடுக்கலாம் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை