Ariviyalmalar | மூளை வளர்ச்சியை பாதிக்கும் காற்று மாசு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூளை வளர்ச்சியை பாதிக்கும் காற்று மாசு!

Added : டிச 16, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மூளை வளர்ச்சியை பாதிக்கும் காற்று மாசு!. Ariviyalmalar


பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு உலகெங்கும் காற்றில் இருக்கும் மாசுகளின் அளவு அபாயகரமாக அதிகரித்திருப்பதாக, 'யுனிசெப்' எச்சரித்துள்ளது
சர்வதேச உச்சவரம்புக்கு அதிகமான அசுத்தங்கள் காற்றில் இருக்கும் பகுதிகளில், வசிக்க நேரிடும், 1.7 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவர் என யுனிசெப் கவலை தெரிவித்து
இருக்கிறது. வாகனப் புகை, ஆலைப் புகை, புழுதி போன்றவை நுண்ணிய திவலைகளாக மாறி, காற்றில் பரவுகின்றன. இந்தத் திவலைகளை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுவாசிக்கும்போது, அவர்களது மூளைத் திசுக்களை சேதமாக்குகிறது. இதனால், அக்குழந்தைகளது அறிவுத் திறனும் பாதிக்கப்படுகிறது என 'காற்றில் உள்ள பேராபத்து' என்ற உலக நாடுகளுக்கான யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த இரு பாதிப்புகளும், குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுவதும் பின்னடைவுகளை ஏற்படுத்த வல்லவை எனவும், அந்த அறிக்கை சொல்கிறது. தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் ஆகிய பகுதிகளில் இருக்கும் நாடுகளின் குழந்தைகள் கூடுதல் ஆபத்தில் உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை