வலியில்லா ஊசி| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வலியில்லா ஊசி

Added : டிச 16, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வலியில்லா ஊசி

ஊசி போட்டுக்கொள்வதை வெறுப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தி. ஊசி ஏதும் இல்லாமல், மருந்துகளை உடலுக்குள் செலுத்த பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில் ஒன்று, அடுத்த ஆண்டு சந்தைக்கு வரலாம். ஜப்பானிய மருந்து நிறுவனமான, டகேடா, 'பிரைம்' என்ற வலியில்லாமல் மருந்தை செலுத்தும் முறையை சந்தைப்படுத்த இருக்கிறது.
இந்த புதிய முறைப்படி, மருந்தினை ஒரு சிறப்பு குப்பியில் அடைத்து, மின்சார சவரக் கருவி போல இருக்கும், பிரைம் கருவியில் பொருத்தவேண்டும். அடுத்து பிரைம் கருவியை நோயாளியின் உடல் மீது வைத்து பொத்தானை அழுத்தியதும், மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் தோல் அடுக்கைத் தாண்டி, தசைத் திசுவைத் தாண்டி ரத்த நாளத்திற்குள் மருந்து சென்று விடுகிறது. திரவம் செல்லும் அகலம் தலைமுடியைவிடக் குறைவுதான். அரை வினாடிக்குள், ஒரு மில்லி மருந்தை, உடலில் செலுத்த முடியும். கூர்மையான ஊசி மூலம் மருந்தை செலுத்த, 10-15 வினாடிகள் ஆகலாம். ஆனால் பிரைம் கருவி மருந்தை துளியும் வலியில்லாமல் உடனே செலுத்தி விடுகிறது.
அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி., ஆராய்ச்சி நிலையம் பிரைம் மருந்து செலுத்தும் கருவியை பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கி, ஜப்பானிய டகேடாவிடம் விற்பனைக்குக் கொடுத்துள்ளது. தினமும், 'இன்சுலின்' போடவேண்டிய நீரிழிவு நோயாளிகள் முதல், தடுப்பூசி போட மருகும் சிறுவர்கள் வரை, பலருக்கும் இந்த வலியில்லா ஊசி பிடிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை