Ariviyalmalar | மூன்று ஆட்டங்களில் கில்லாடியான செயற்கை நுண்ணறிவு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூன்று ஆட்டங்களில் கில்லாடியான செயற்கை நுண்ணறிவு!

Added : டிச 16, 2017
Advertisement
கில்லாடியான செயற்கை நுண்ணறிவு!

கூகுளின் தாய் நிறுவனமான, 'ஆல்பபெட்', தன், 'டீப்மைண்ட்' என்ற செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் சாதனைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் சதுரங்கம், சீனாவின், 'கோ', சீட்டுக் கட்டு போன்ற விளையாட்டுகளில் உலக சாதனையாளர்களை அழைத்து, தனது டீப்மைண்ட் உருவாக்கிய, 'ஆல்பா' வரிசை செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களுடன் ஆடவைத்தது டீப்மைண்ட். இந்த மூன்று போட்டிகளிலும் உலக சாம்பியன்களை, ஆல்பா வரிசை மென்பொருள்கள் தோற்கடித்துவிட்டன.
அண்மையில், டீப்மைண்ட், 'ஆல்பா ஜீரோ' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அசத்தலான ஆல்பா ஜீரோ, சதுரங்கம், கோ மற்றும் ஜப்பானிய சதுரங்கமான, 'ஷோகி' ஆகிய மூன்று விளையாட்டுக்களின், கோடிக் கணக்கான நெளிவு சுளிவுகளையும் மிகக் குறுகிய காலத்தில் யாரும் சொல்லித்தராமல், தானே கற்றுத் தேறும் திறன் கொண்டது.
அது மூன்று விளையாட்டுக்களையும் தனித்தனியாகவே கற்றுக்கொள்ளும். தனித் தனியாகவே இந்த ஆட்டங்களை ஆடும். ஆனால், அந்தந்த ஆட்டங்களுக்குத் தேவையான உலகத் திறமை இதற்கு உண்டு என்கிறது, டீப்மைண்ட்.
மனித மூளைக்கே சவாலான விளையாட்டுக்களை ஏன் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களுக்கு ஏன் ஆடத்
தருகின்றனர்? செயற்கை நுண்ணறிவு நிரல்களை எழுதும் மென்பொருளாளர்கள், தங்கள் நிரலின் திறமையை சோதித்துப் பார்க்கவேண்டியுள்ளது.
அதற்கு ஏராளமான தகவல் தரவுகளைத் தரவேண்டும். நிஜ உலக பிரச்னைகளைத் தருவதற்கு முன் சதுரங்கம் போன்ற பலகோடி காய் நகர்த்தல்களைக் கொண்ட ஆட்டங்களை நிரலுடன் ஆட வைப்பது அதற்கு நல்ல சோதனையாக அமைகிறது.
தவிர, மனித மூளையில் கோடிக் கணக்கில் இருக்கும் 'நியூரான்' செல்கள் இயங்கும் விதத்தை முன்மாதிரியாக வைத்து தான், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் நிரல்கள் அமைக்கப்படுகின்றன.
எனவே மனித மூளையுடன் மோதினால், மென்பொருள்களின் வேகம், தகவல்களை அலசி, விடை காணும் திறன்களை சோதிக்க முடியும். மேலும், இத்தகைய மென்பொருள்களை உருவாக்கும் வல்லமை தங்களிடம் இருப்பதை உலகுக்கு அறிவிக்கவும் இதுபோன்ற முயற்சிகளை, கூகுள், ஐ.பி.எம் போன்றவை மேற்கொள்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை