Ariviyalmalar | உடை வடிவில் ஒரு பேட்டரி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உடை வடிவில் ஒரு பேட்டரி!

Added : டிச 16, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 உடை வடிவில் ஒரு பேட்டரி!

மனித வியர்வையில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் அமெரிக்காவிலுள்ள பர்மிங்ஹாம்டன் பல்கலை ஆராய்ச்சியாளர், சியோகியுன் சோய்.
இவர் ஏற்கனவே உருவாக்கிய நுண்ணுயிரி எரிபொருள் கலன் தொழில்நுட்பம், பாக்டீரியாக்களால் முடுக்கப்படும் வேதியியல் மாற்றம் மூலம் மின் உற்பத்தியை செய்யக்கூடியது. இப்போது அதே தொழில்நுட்பத்தை நுாலிழைகள் வடிவில் உடையாக நெய்து காட்டியிருக்கிறார். இந்த உடையை அணிபவரின் வியர்வையில் உள்ள பாக்டீரியாக்கள், அந்த உடையிலுள்ள, நுண்ணுயிரி எரிபொருள் கலனில் மின் உற்பத்தியை துாண்டும். அதாவது உடை வடிவிலான பேட்டரி இது!
ஒரு உடையில், 35 உயிரி பேட்டரிகளை வைத்துத் தைக்க முடியும் என்கிறார் சோய். இதனால், இந்த வகை மின்சார பேட்டரி உடையை, நெசவு ஆலைகளில் பெரிய அளவில் தயாரிக்க முடியும் என்றும் சோய் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை