பிற ஜாதியினருக்கும் பதவி பா.ம.க., புது உத்தி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிற ஜாதியினருக்கும் பதவி பா.ம.க., புது உத்தி

Added : டிச 16, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பா.ம.க.,வில், அனைத்து சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அக்கட்சியின், மாநில துணைத் தலைவர் பதவிக்கு, பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த, திருத்துறைப்பூண்டி சுப்ரமணி அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.பா.ம.க.,வுக்கு, வன்னியர் கட்சி என்ற முத்திரை உண்டு. இதனால், மற்ற சமுதாய மக்களின் ஓட்டுகள், அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு சரிவர கிடைக்காமல் இருப்பதால், அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டும், பா.ம.க.,வால் வெற்றி பெற முடியவில்லை. 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு, மூன்று தொகுதிகளில் மட்டுமே, வெற்றி பெற முடிந்தது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி யில், தர்மபுரியில், அன்பு மணி மட்டும் வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, தொடர் தோல்விக்கு என்ன காரணம் என, பா.ம.க., நடத்திய ஆய்வில், குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டும் வேட்பாளர்களாக தேர்வு செய்வது, மற்ற சமுதாயத்தினருக்கு, முக்கிய பதவிகளை வழங்காமல் இருப்பது போன்ற காரணங்கள் தெரிய வந்தன.எனவே, கட்சியில் முக்கிய பதவிகளுக்கு, பிற சமுதாயத்தினருக்கும், முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநில துணைத் தலைவர் பதவிக்கு, பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த, திருத்துறைப்பூண்டி, சுப்ரமணி அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் பதவிக்கு, சீனிவாச அய்யங்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் முதலியார், ரெட்டியார் போன்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மாநில, மாவட்ட அளவில் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இது குறித்து, சுப்ரமணி அய்யர் கூறுகையில், ''பா.ம.க.,வை, ஜாதிக்கட்சி என, கூறுவது தவறு. ராமதாஸ், ஜாதிக்கு அப்பாற்பட்ட தலைவராக திகழ்கிறார். ''தமிழ்மொழிக்கும், கலாசாரத்திற்கும், தமிழக நலன் சார்ந்த கொள்கைக்காக, அவர் பாடுபட்டு வருகிறார். என்னை போன்றவரை, மாநில துணைத் தலைவராக நியமித்ததிலிருந்து, ராமதாஸ், ஜாதி பாகுபாடு பார்க்கவில்லை என்பது, நிரூபணமாகிஉள்ளது,'' என்றார்.-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
17-டிச-201712:19:52 IST Report Abuse
Harinathan Krishnanandam திருமா மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளும் ப்ராம்மணர்களை கட்சியில் துணை தலைவர் பதவியில் அமர்த்த உள்ளதாய் கூறப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-டிச-201712:04:57 IST Report Abuse
adalarasan மத்த விஷயங்களாய் பற்றி கூற விரும்பவில்லை ஆனால் மக்கள் ஊடகம், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், இறையாண்மைக்கும், ஜாதி வித்தியாசமில்லாமல், நிறைய வாய்ப்புக்களையும், ஆரோக்கியமான தகவல்களையும் கொடுப்பது உண்மைதான், ஒரு குடும்பத்தை சேர்ந்த மற்றொரு, சுமார், 30 சேனல்களிலும், சினிமா பாட்டு ஆபாச நாடகங்கள், சுய விளம்பரம்கள், காட்சிகளுக்குத்தான், முக்கியத்துவம் என்பதை கண் கூட பார்க்கிறோம்,
Rate this:
Share this comment
Cancel
S.Sankar - chennai,இந்தியா
17-டிச-201709:35:40 IST Report Abuse
S.Sankar காலத்தின் மாற்றம்தான் என்னே?முன்னொரு காலத்தில் வன்னியர் சங்கமாக இருந்து தேர்தல் பரப்புரையாக தொலைக்காட்சியில் ராமதாஸ் அவர்கள் அப்போது முன் வைத்த கொள்கை-"எங்கள் ஆட்சியில் ஒவ்வொரு வருடமும் சுழற்சி முறையில் ஒவ்வொரு சாதியை சேர்ந்த முதல்வர் இருப்பார்.ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அதில் இடம் கிடையாது."
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X