குஜராத்தில் கடும் போட்டி: பா.ஜ.,வுக்கு சவால் விடும் காங்.,| Dinamalar

குஜராத்தில் கடும் போட்டி: பா.ஜ.,வுக்கு சவால் விடும் காங்.,

Added : டிச 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குஜராத் தேர்தல்,Gujarat polls, பா.ஜ., BJP, காங்கிரஸ்,Congress,  சட்டசபை தேர்தல், assembly election,ஓட்டு எண்ணிக்கை,vote count, முதல்வர் விஜய் ரூபானி,  chief minister Vijay Rupani, துணை முதல்வர் நிதின் பட்டேல் , deputy chief minister Nitin Patel,ராஜ்கோட்,Rajkot,  மெஹ்சானா , Mehsana,

ஆமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலில் 1998 க்கு பிறகு பா.ஜ., அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது. இதுவரை நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளின் போது தொடர்ந்து பா.ஜ.,வே முன்னிலையில் இருந்துள்ளது. இது பா.ஜ.,வின் மிகப் பெரிய வரலாற்று சாதனையாகவே கருதப்படுகிறது.

ஆனால் இம்முறை குஜராத்தில் இந்த சாதனை சரித்திரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் குஜராத் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முதல் முறையாக காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 2012 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்., 20 தொகுதிகளை பா.ஜ.,விடம் இருந்து தட்டி பறித்து, முன்னிலையில் இருந்து வருகிறது.

இருப்பினும் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜ., - காங்., இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்ட சுற்றிலும் நிலைமை மாற்றி வருகிறது. ராஜ்கோட் தொகுதியில் முதல்வர் விஜய் ரூபானிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மெஹ்சானா தொகுதியில் துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலையில் உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Chennai,இந்தியா
18-டிச-201710:18:49 IST Report Abuse
Endless பிஜேபிக்கு இனி தான் "சாம தான பேத தண்டம்" புரிய துவங்கும் ...... நடப்பது நன்மைக்கே ...... வாழும் நம் பரதம்... வளரும் நம் பாரத பாரம்பர்யம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X