குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி Dinamalar
பதிவு செய்த நாள் :

ஆமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,18) எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும் இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டலில் அமர்கிறது.

குஜராத் சட்டசபை தேர்தல்,Gujarat assembly election,  பா.ஜ.,BJP, காங்கிரஸ், Congress,ஓட்டுக்கள்,voting,  பா.ஜ ஆட்சி , BJP rule, குஜராத், Gujarat,


ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரம்பா.ஜ., - காங், இடையே கடும் போட்டி நிலவியது. சற்று நேரம் பா.ஜ., பின்னடைவை சந்தித்தாலும், சிறிது நேரத்திலேயே மீண்டும் முன்னிலைக்கு திரும்பியது பா.ஜ.,


குஜராத்தில் மொத்தமுள்ள 182இடங்களில் பெரும்பான்மையை பெற 92 இடங்கள் தேவை. அந்த வகையில் பா.ஜ., 95 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வே ஆட்சி செய்து வருகிறது. இந்த வரலாற்று சாதனை மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சிஅமைக்கிறது.
இமாச்சல பிரதேசம்
இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பெரும்பான்மை பெற 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது பா.ஜ., 40 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பா.ஜ., ஆட்சி உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.


எடுபடாத சாதி கூட்டணி


இந்த தேர்தலில் பட்டேல் சமூகத்தினருடனான காங்கிரசின் கூட்டணி குஜராத்தில் எடுபடவில்லை.

Advertisementபிரிவினைவாதம், தோற்கடிப்பு: அமித்ஷா
குஜராத் உள்ளிட்ட தேர்தல் குறித்து நிருபர்களிடம் பா.ஜ., அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறியதாவது: கடந்த1990 முதல் குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. தற்போது கிடைத்துள்ள ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. மோடியின் அரசியல் கொள்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும். சாதி, பிரிவினைவாத, வாரிசு அரசியல் அடிப்படையிலான கொள்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஓட்டு சதம் கூடியுள்ளது. குஜராத், இமாச்சல மக்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல் மாநில அரசுக்கே வெற்றி கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்புக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இது போன்ற வெற்றி வரும் தேர்தலிலும் தொடரும். இரு மாநில முதல்வர்கள் யார் என்பதை பா.ஜ., பார்லி., குழு தேர்வு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி


குஜராத்தில் கடந்த 2012 ல் நடந்த தேர்தல் முடிவில் பா.ஜ., 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது .Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (368)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
20-டிச-201700:33:26 IST Report Abuse

K.   Shanmugasundararajசாதி மதம் இல்லாது ஆர் எஸ் எஸ், பி ஜெ பி கும்பலால் இருக்க முடியாது.

Rate this:
spr - chennai,இந்தியா
19-டிச-201717:08:11 IST Report Abuse

spr"குஜராத்தில் கடந்த 2012 ல் நடந்த தேர்தல் முடிவில் பா.ஜ., 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது ." பாஜக தலைவர்களுக்குத் தெரியும் இது இன்னமும் திரு மோடி சாதிப்பாரென்று நம்பும் குஜராத் மக்கள் தங்களுக்கு கொடுத்த மதிப்பான எச்சரிக்கையென்று பண மதிப்பிழப்பு GST மற்றும் வங்கிகள் நிர்வாக சீரமைப்பு ஆதார் செயலாக்கம் இவையெல்லாம் நெடுநாள் பயனளிக்கும் ஒன்று என்றாலும் அதிரடியாக தங்கள் மீது அவை திணிக்கப்படுவதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

Rate this:
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
19-டிச-201702:18:03 IST Report Abuse

Nagan Srinivasanகான்கிராஸ் still alive ?

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-டிச-201710:27:00 IST Report Abuse

Agni Shivaஉண்மை தான். அதற்கு அடிமைகள் ஏராளம் இருக்கிறார்கள். மூர்க்கம் பிறந்ததே கரையான் புற்றை பரப்ப தான்....

Rate this:
19-டிச-201702:13:56 IST Report Abuse

ஜெயா.ஆஸ்டின்பாஜக குஜராத்தில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம்.வெற்றியை போராடிதான் பெற்றுளார்கள்

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
19-டிச-201709:00:51 IST Report Abuse

Tamil Selvanஆமாம்... குஜராத்தில் பாஜக போராடித்தான் வெற்றி பெற்றுள்ளது... இது ஒன்னும் கான் கிராஸ் கட்சியின் தலைவர் பதவி அல்ல... போட்டியே இல்லாமல் ராகுல் தலைவராக வெற்றி பெறுவது போல், அவ்வளவு சுலபம் அல்ல?......

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-டிச-201710:31:29 IST Report Abuse

Agni Shiva.50 ,000 கோடி அளவிற்கு கடன் தள்ளுபடிகள் மற்றும் இலவச அறிவிப்புகள், ஜாதிய பிரிவினைவாதிகளின் கூட்டுகள், பக்கி சீனி அதிகாரிகளின் ஆலோசனைகள், மூன்று ஆண்டுகால நீண்ட திட்டங்கள், மூன்று மாத தொடர் பிரச்சாரங்கள், கோவில் தரிசனங்கள் என்று அனைத்தையும் தவிடு பொடி ஆகி 25 ஆண்டுகால தொடர் ஆட்சியை தொடர்வது சாதனை. சாதாரணமானது இல்லை..அசாதாரணமானது....

Rate this:
kandhan. - chennai,இந்தியா
20-டிச-201711:26:23 IST Report Abuse

kandhan.25 ஆண்டு கால பி ஜே பி ஆட்சியில் மக்களின் கல்வி அறிவு எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை வெளியிடுவார்களா ?/கல்வியை கொடுத்தால் மக்கள் நிச்சியம் வோட்டு போடமாட்டார்கள் மக்களும் தெளிவு பெறுவார்கள் மேலும் கல்வி அறிவில் பின் தங்கிய மாநிலமாகத்தான் இன்னமும் இருக்கிறது இதை முதலில் சரி செய்யுங்கள்...

Rate this:
Ram KV - Bangalore,இந்தியா
18-டிச-201723:47:13 IST Report Abuse

Ram KVI am just wondering of some people's pain. If a party is winning an election 6 times in a row which 27 years holding a state continuously it is to be appreciated.We can vote our rights while election is happening in our state as well as center. I am not understanding if a party has got majority it will be ruling the state for next 5 years in India and it does not matter on how many extra number of MLA or MP they have got.Only one state is ruled by one party more than 6 times is WB (CPI/M).If you are not CPI/M, as it is like military rule, and ruling a prosperous state it is very great thing. No government in the world has won the election after GST implementation in state /federal election due to the change/reform...As BJP has won these elections after GST as well as Demonitization as well, it is great thing...

Rate this:
Selvan - NY,யூ.எஸ்.ஏ
18-டிச-201723:22:51 IST Report Abuse

Selvanகுஜராத் தேர்தலில் வேண்டாது மோடியும் ஹர்திக் படேலும் தான். காங்கிரஸ் கூட்டணியில் 25 பேர்ஹர்திக் அமைப்பின் ஆட்கள். ஹர்திக்கின் ஜாதி வெறி அரசியல் குஜராத்தை பின்னோக்கியே செல்ல வைக்கும். ஹர்திக் இன்னொரு முலாயம் லாலு போல் பிற்காலத்தில் வர வாய்ப்புள்ளது. ஹர்திக் வென்ற சில இடங்களை காங்கிரஸ் தனது என்று நிதைது கொள்வது ராஜ்ய சபா தேர்தல் வரும் பொது தெரியும்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
19-டிச-201710:37:21 IST Report Abuse

Agni Shivaஇது தான் உண்மை. முதலில் 30 சீட்டுகளை கேட்டு முடிவில் 25 சீட்டுகளை கொடுத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டு கொண்டது கரையான் புற்று . எந்த ஜாதியை வைத்து பிஜேபி கட்சியின் ஆட்சியை மாற்றி விடலாம் என்று திட்டமிட்டதோ அதே கரையான்புற்று, தற்போது எறும்பு தின்னியுடன் மாட்டி கொண்டது. இந்த 25 ஆட்களை வைத்து கொண்டு கரையான் புற்றை இனிமேல் ஆட்டுவித்தல் நடைபெறும். இந்த 25 எம் எல் ஏக்களின் மூலம் கரையான்புற்றிடம் இருந்து கறக்கவேண்டிய அனைத்தும் கறந்து கொண்டிருப்பது நடந்து கொண்டு இருக்கும். நாள் சொல்வது அடுத்த 6 மாதத்தில் குஜராத் கரையான்புற்று பிளவு படும் என்பது தான்....

Rate this:
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
18-டிச-201722:21:06 IST Report Abuse

Krishnan (Sarvam Krishnaarpanam....)வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இனி பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள். வேலைவாய்ப்பு, நதிநீர் இணைப்பு, பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். பாகிஸ்தானுக்கு சென்று, பிஜேபி யை கவிழ்க்க உதவுங்கள் என்று கூறிய மணி ஷங்கர், சீன தூதருடன் ரகசியமாக சந்தித்த ராகுல், கோவாவிற்கு சென்று உல்லாசமாக இருந்து ஆட்சியை கோட்டை விட்ட திக்விஜய் என்று காங்கிரசின் அழிவை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நாட்டை மேம்படுத்த பிஜேபி அதிக கவனம் செலுத்தினாலே அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
18-டிச-201720:49:27 IST Report Abuse

jaganமணி ஷங்கர் "அய்யர்" சரியான சமயத்தில் கொளுத்தி போட்டுவிட்டார்...நமக்கு தெரியும் "அவாள்" எப்பவுமே நம்ம கட்சி தான் (மாற்று கட்சில இருந்தா கூட ....)

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
18-டிச-201721:09:15 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு ஜெகன் அவர்களே..... புத்தி இருக்கிறதா..... இங்கே எதற்கு அப்பா குறிப்பிட்ட ஜாதியை கிண்டல் செய்ய தோன்றுகிறது. மணி ஷங்கர் அயோக்கியந்தான். அவாள் இவாள் என்று பேசி எழுதி.....தினவை தீர்க்க வேண்டிய அவசியம் இப்பொஅ என்ன. நீ என்ன ஜாதி. சொல்ல நா கூசுகிறதா...... இனி கண்ணியமாக கருத்து எழுத கற்று கொள்ளவும். திருந்த முயற்சி செய்யுங்கள். சாக்கடை குடிமகன்களாக வாழ்வதை மாற்றிக்கொள்ளுங்கள். முடியவில்லையா கம்முனு கடங்க......

Rate this:
jagan - Chennai,இந்தியா
19-டிச-201700:18:51 IST Report Abuse

jaganஏன்யா இப்பிடி எல்லாத்துக்கும் ஜாதி ஜாதி என்று சொல்றே ...திருந்தவே மாட்டிங்களா ?...

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
19-டிச-201708:57:17 IST Report Abuse

Sitaramen Varadarajanஉங்களுக்கு கொடுத்த பதிலை உருப்படியாக படியுங்கள். திருந்த வேண்டியது உம்மைப் போன்ற மனிதர்கள்தான். திருடன் திருடி விட்டு.. அதோ பார் ஓடறான் ஓடறான் திருடன் ஓடறான் என்று கூவுவது போல் உள்ளது உமது பதில்......

Rate this:
Krish Srinivas - chennai,இந்தியா
19-டிச-201710:06:18 IST Report Abuse

Krish Srinivas யாரோ பூந்துட்டானா....

Rate this:
jagan - Chennai,இந்தியா
20-டிச-201700:07:15 IST Report Abuse

jaganஜாதி வன்மத்தை விடுங்கள், உங்களுக்கு BP குறையும்..இனிமேலாவது திருந்தி வாழுங்கள் ப்ளீஸ்....

Rate this:
Htanirdab S K - Hyderabad,இந்தியா
20-டிச-201712:50:27 IST Report Abuse

Htanirdab S K"அவாள்" னு போட்டு ஜாதியை சொன்னவனே நீ தான் .. ஜாதி வன்மத்தை விடுங்கள்ன்னு நீயே சொல்லி ...நீ மனுஷ ஜாதி இல்லேனு நிரூபித்து விட்டாய் உன்னையெல்லாம் என்ன பண்ணறது ......

Rate this:
yila - Nellai,இந்தியா
18-டிச-201720:39:28 IST Report Abuse

yilaபோலி வளர்ச்சிக்கு கிடைத்த தளர்ந்து போன ஆதரவு..... கழுதை தேய்ந்து......

Rate this:
Krish Srinivas - chennai,இந்தியா
19-டிச-201710:08:12 IST Report Abuse

Krish Srinivas இந்த 5 வருடமும் சேர்த்தால் 27 வருடம். அதற்குள் ஜாதி கட்சி போனால் Rahul நாட்டை விட்டேபோயிடுவாரு...

Rate this:
உங்கள் நண்பன் - Chennai,இந்தியா
18-டிச-201720:08:11 IST Report Abuse

உங்கள் நண்பன் ஏன்டா பெயில் ஆன? வாத்தியாருக்கு என்ன பிடிக்காது அப்பா பிராக்டிகல் மார்க் குறைச்சுட்டார் வினா தாள் ரொம்ப கஷ்டம் answer எழுத டைம் இல்ல அவுட் ஆப் சிலபஸ் கடைசி வரைக்கும் படிக்கலன்னு சொல்லவே மாட்டான் நம்ம ஆளு.......

Rate this:
மேலும் 346 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement