chennai | சென்னையில் திருவையாறு...| Dinamalar

சென்னையில் திருவையாறு...

Updated : டிச 19, 2017 | Added : டிச 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


சென்னையில் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே சாஸ்திரிய சங்கீத விழாக்களுக்கு பஞ்சமேயில்லை

டிசம்பர் மாதம் என்றால் நாங்களும் வருவோம் என்று கடந்த இரண்டு வருடங்களாக வந்த வெள்ளம்,புயல் காரணமாக சங்கீத விழாக்களின் முக்கியத்துவம் குறைந்திருந்தது.

இந்த வருடம் இயற்கையின் கோபப்பார்வை எதுவும் இல்லாத காரணத்தால் இசை விழா களைகட்டிவருகிறது.

இதில் லஷ்மன் சுருதியின் சென்னையில் திருவையாறு 13வது வருடமாக இந்த வருடம் காமராஜர் அரங்கத்தில் நடந்துவருகிறது.

பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் முதல் நாள் விழா துவங்கியது.மிருதங்க வித்வான உமையாள்புரம் சிவராமனுக்கு இசை ஆழ்வார் பட்டம் வழங்கப்பட்டது.82 வயதான எனக்கு இசையில் 73 வருட அனுபவம் இருக்கிறது என்றார்.

இசை அமைப்பாளர் தேவா,பத்மா சுப்பிரமணியம் உள்பட நிறைய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் ராம்-லஷ்மன் சகோதரர்கள் பெரிய பெரிய மாலை அணிவித்து கவுரவித்தனர், பாராட்டி பேசவந்த பாங்க் அதிகாரி ஒருவர் என்னை விட மாலை பெரிதாக இருக்கிறது என்று சொல்லவும் செய்தார்.

பாலமுரளி கிருஷ்ணாவின் மெழுகு சிலை ஒன்றும் திறக்கப்பட்டது.துவக்கவிழா சடங்குகள் எல்லாம் முடிந்த மஹதி குழுவினரின் வாய்ப்பாட்டு முதல் நிகழ்வாக நடந்தது.அமுதே தமிழே அழகே எங்கள் உயிரே என்பது போன்ற தமிழ் பாடல்கள் பாடி பாராட்டுக்களை அள்ளினார்.

அடுத்ததாக ராஜேஷ் வைத்யாவின் வீணை கச்சேரி.வாழ்த்த வந்த கவிஞர் பா.விஜய்,வைத்யாவின் விரல்கள் எல்லாமே வீணைதான் என்று கவித்துமாக சொல்லி கைதட்டலை பெற்றார்.

காய்கறிகளால் ஏற்ப்படுத்தப்பட்ட தேசியக்கொடி உணவு திருவிழா முதியோருக்கு இலவச பஸ் சாப்பாடு என்று ராம்-லஷ்மன் சகோதரர்கள் சென்னையில் திருவையாறு நிகழ்வை வெற்றிகரமாக்க நிறைய பாடுபடுகின்றனர் அவர்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalr.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X