Ariviyalmalar | 'செல்பி' பிரியர்களுக்கு கூகுளின் பரிசு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'செல்பி' பிரியர்களுக்கு கூகுளின் பரிசு!

Added : டிச 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'செல்பி' பிரியர்களுக்கு கூகுளின் பரிசு!

கூகுள் புதிதாக இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகெங்கும், இன்று, 2 பில்லியனுக்கும் மேற்பட்ட திறன்பேசி பயனாளிகள் இருக்கின்றனர். இத்தனை பேரின் திறன்பேசிகளிலும் சக்திவாய்ந்த கேமராக்கள் இருக்கின்றன. ஆனால், அதை வைத்து அவர்கள் எடுக்கும் படங்கள், மிக சாதாரணமாக இருப்பதாக, கூகுள் கருதுகிறது. எனவே ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கென, 'செல்பிசிமோ' மற்றும் 'ஸ்டோரிபோர்டு' ஆகிய, இரு இலவச செயலிகளை கூகுள் வெளியிட்டுள்ளது.

ஸ்டோரிபோர்டுவீடியோக்களை மனம் போல எடுங்கள். எடுத்தபின், அதை இந்த செயலியிடம் கொடுங்கள். உடனே செயற்கை நுண்ணறிவு படைத்த இந்த செயலி, அந்த வீடியோவில் உள்ள சுவையான காட்சிகளை தேர்ந்தெடுத்து, ஒரு பக்க 'காமிக்ஸ்' போல மாற்றித் தரும். ஆறுவித பாணிகளில் இந்த படக் கதையை நீங்களே வடிவமைக்கலாம். உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை, ஒரு பக்க படக்கதையாக மாற்றும் சக்தி இப்போது உங்கள் கைகளில்!



செல்பிசிமோஇந்த செயலியை திறந்து, மொபைல் திரையை தட்டினால், நீங்கள் தலையை, உடலை அசைப்பதை நிறுத்தி, 'போஸ்' கொடுக்கும் போதெல்லாம் கேமரா உங்களை செல்பி எடுக்கும். லேசாக அசைந்து கொண்டே இருந்தால், படமெடுக்காது. திரையை மீண்டும் தட்டினால், செயலி படமெடுப்பதை நிறுத்திக் கொள்ளும். கறுப்பு வெள்ளையில், அந்தக் கால ஒளிப்பட, 'கான்டாக்ட் ஷீட்' போல படங்களை அடுக்கித் தருகிறது செல்பிசிமோ. அதில் உங்களுக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து, சேமித்து வைத்துக் கொள்ளலாம்.



Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை