Ariviyalmalar | 'மின்சார மீன்' தந்த கண்டுபிடிப்பு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'மின்சார மீன்' தந்த கண்டுபிடிப்பு!

Added : டிச 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'மின்சார மீன்' தந்த கண்டுபிடிப்பு!

அதிசய மீனான ஈல், எப்படி உடலில் மின்சாரத்தை தயாரிக்கிறது... அது போல செயற்கையாக மின்சாரத்தை தயாரிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு, பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா, மிச்சிகன் மற்றும் பிரைபோர்க் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 'செயற்கை மின் உறுப்பு' ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஈல் மீன் 600 வோல்ட்டுகள் வரை மின்சாரத்தை உடலில் உற்பத்தி செய்ய உதவும், அதே முறையை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கூடத்தில் உருவாக்க முயன்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஈல் மீனின் உடலில் உள்ள, 'எலக்ட்ரோசைட்'கள் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. எலக்ட்ரோசைட்டில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அயனிகள் வினை புரிவதால், மின்சாரம் உற்பத்தியாகிறது. எனவே, விஞ்ஞானிகள் ஒரு பிளாஸ்டிக் தாளில் ஹைட்ரோ ஜெல் குமிழிகளில் உப்புநீர் மற்றும் சாதாரண நீரை மாற்றி மாற்றி ஒட்டவைத்தனர்.

அவற்றை சவ்வுகளால் பிரித்தும் வைத்தனர். இந்த குமிழ்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டபோது, மின் வேதி வினையால், 100 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தியானது.இது, ஈல் தயாரிக்கும் மின்சாரத்தை விட மிகவும் குறைவு தான். ஆனால் விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ச்சி செய்தால், மின் உற்பத்தி அளவை அதிகரிக்க முடியும் என, 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால், இதய துடிப்புக் கருவி, கருவிழி மேல் பொருத்தும் மெய்நிகர் திரை, செயற்கை கை, கால் போன்ற உறுப்புகள் போன்றவற்றை இயக்க உதவும் மின்கலன்களை தயாரிக்க உதவும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-டிச-201702:52:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காதலியை தொட்டால் காதலனுக்கு ஷாக் அடிக்குமாமே? போலீசை பார்த்தால் திருடனுக்கு வருமே, அந்த ஷாக். 180 கோடி பணத்தை தஞ்சாவூர்லேருந்து கொண்டாந்து பிரிச்சி கொடுக்கமுடியலேன்னு தினகரனுக்கு ஷாக்காமே, அதிலிருந்து எல்லாம் மின்சாரம் எடுக்க முடியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை