Ariviyalmalar | கொசு ஒழிப்பில், 'ட்ரோன்கள்!'| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கொசு ஒழிப்பில், 'ட்ரோன்கள்!'

Added : டிச 21, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கொசு ஒழிப்பில், 'ட்ரோன்கள்!'

டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு, ஆளின்றிப் பறக்கும் சிறு வாகனங்களான, 'ட்ரோன்'களை பயன்படுத்த, கோல்கட்டா முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான வெள்ளோட்டமாக, அண்மையில் ஒரு ட்ரோனை வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளனர். தேங்கி நிற்கும் தண்ணீர் தான், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ் எஜிப்தி' வகை கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடம். தரையில் தண்ணீர் தேங்கி இருந்தால், அதை முனிசிபல் பணியாளர்கள் பார்த்து, அக்கம் பக்கத்தினரை எச்சரிக்க முடியும். ஆனால், அடுக்குமாடி கட்டடங்களின் மொட்டை மாடியில், மழைநீர் அல்லது நீர்த்தொட்டிகள் நிரம்பி வெளியேறும் நீர் தேங்கியிருந்தால், அதை சோதனை இடுவது கடினம். எனவே, ஒளிப்படக் கருவி பொருத்திய ட்ரோன்களை, கட்டடங்களின் மேல் பறக்க விட்டு சோதித்து, நீர் தேங்கியிருந்தால், அதை வெளியேற்றும்படி, கட்டடத்தில் வசிப்போரை எச்சரிக்கலாம். ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டம் நல்ல பலனளிப்பதாக வெள்ளோட்டத்தில் தெரிய வந்ததால், 2018 மார்ச் முதல், கொசு ஒழிப்பில் மேலும் பல ட்ரோன்களை பயன்படுத்த, கோல்கட்டா முனிசிபாலிட்டி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். குஜராத்திலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Prakasam - Chennai,இந்தியா
25-டிச-201708:09:11 IST Report Abuse
Siva Prakasam கொசு இனப்பெருக்கத்தை தடுக்க வழியை எடுக்காமல், மற்றவற்றில் மட்டுமே நாட்டம் கொள்வது ஏனோ?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-டிச-201704:06:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்த பொம்மையை வாங்குறதுக்கு இது ஒரு சாக்கு. இதை வைத்து விளையாட போவது நகர கமிஷனரின் பிள்ளைகளாக தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை