Ariviyalmalar | வாயு துரப்பணத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வாயு துரப்பணத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து!

Added : டிச 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 வாயு துரப்பணத்தால்  குழந்தைகளுக்கு ஆபத்து!

நிலத்தடியில் இருந்து, வாயு துரப்பணம் செய்யும் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாகவும், ஆரோக்கியக் குறைவாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக, 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியாகி உள்ள ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பகுதியில், 2004 முதல் 2013 வரை, வாயு துரப்பணம் செய்யப்பட்ட பகுதியில் பிறந்த, 11 லட்சம் குழந்தைகளின் விபரங்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், இது தெரிய வந்துள்ளது.

ஆய்வாளர்கள் கருத்துப்படி, வாயு துரப்பணம் நடக்கும் பகுதியில் இருந்து, 1 கி.மீ., தொலைவுக்குள் வசித்த கர்ப்பிணிகளுக்கு, 2.5 கிலோவுக்கும் குறைவான எடையுடன் குழந்தை பிறக்க, 25 சதவீதம் வாய்ப்புள்ளது. ஆனால், 3 கி.மீ., தொலைவுக்கு அப்பால் இருந்த கர்ப்பிணிகளிடம் இத்தகைய பாதிப்பு இல்லை எனவும், ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாயு துரப்பணம் நடக்குமிடத்தில் வேதிப் பொருட்களால் காற்று மாசுபாடு, கனரக வாகனங்களின் போக்குவரத்து போன்றவற்றால், இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என, ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிற்பி - Ahmadabad,இந்தியா
25-டிச-201701:21:14 IST Report Abuse
சிற்பி முன்பெல்லாம் கட்டை அடுப்பில் சமையல் செய்தார்கள். அப்போது பலவிதமான கட்டைகளை சாணவிரட்டி உருண்டை போன்றவைகளை அடுப்பில் இட்டு எரித்து சமையல் செய்தார்கள். கட்டை அடுப்பு உடலுக்கு நல்லதல்ல என்று பிறகு விறகு கரி அடுப்பு வந்தது. கரி அடுப்பு என்பது வேகமாக சமையல் செய்ய வேண்டும். இதை அதிகமாக மக்கள் பயன்படுத்தவில்லை டீ கடை தவிர. பிறகு மையல் எரிவாயுவுக்கு மாறுங்கள் என்று விளம்பரப்படுத்தினர், கூடவே சமையல் குக்கரும் விளம்பர படுத்த பட்டது. அப்போது ஆச்சு போச்சு உடல் நலம் போச்சு, சோற்றில் வாசனை இல்லை, சமையல் எரிவாயு நாற்றம் அடிக்கிறது, ரப்பர் நாற்றம் அடிக்கிறது என்று எழுதினர். அப்புறம் அது பழகிவிட்டது. இப்போது காஸ் எடுப்பது மூச்சு முட்டும் என்கின்றனர். நம்மை சுற்றி இது மட்டும் இல்லை... பலவிதமான பொருட்களை நாம் பயன்படுத்துகிறோமே அவை எல்லாமே நம் எதிரிகள் தான். பலவிதமான கிருமி நாசினகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதும் மனித இனத்தை நாசம் செய்வதே. பல விதமான சோப்பு, ஷாம்பு, பற்பசை, சமையல் எண்ணெய், துணிமணியில் உள்ள சாயம், மொபைல் போன், லப் டாப், டிவி, என்று எல்லாமே நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை அழிப்பவை. பத்தோடு பதினொன்று... அத்தோடு இது ஒன்று. ஆம்பூர் பகுதிகளில் உள்ள தோல் பட்டறைகள், திருப்பூர் பகுதியில் உள்ள ஆயத்த ஆடைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகள், ஏன் ரோடு, பாலம், மின் வசதி என்று எல்லாமே நம் அழிவுக்கானவை தான். ஒன்றே ஒன்று மட்டும் புரிகிறது... அரசின் திட்டங்களை ஊதி பெரியதாக்குவதே முக்கியமாக போய் விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X