பாதிரியார் கொலை வழக்கில் போதகர் கைது : ஓராண்டுக்குப்பின் துப்பு துலங்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிரியார் கொலை வழக்கில் போதகர் கைது : ஓராண்டுக்குப்பின் துப்பு துலங்கியது

Added : டிச 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தூத்துக்குடி: துாத்துக்குடியில் பாதிரியார் கொலை வழக்கில் அதே சபையைச் சேர்ந்த போதகரை போலீசார் கைது செய்தனர்.
கொலையை மாரடைப்பு என போலி சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை, பெரம்பூர், மங்களபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ்,73. இவர் 1960ல் இருந்து துாத்துக்குடி பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ அமைப்பில் பாதிரியாராக இருந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை. துாத்துக்குடி மில்லர்
புரத்தில் உள்ள பெந்தேகொஸ்தே மிஷன் கட்டட மாடியில் தங்கியிருந்தார்.
2016 அக்.,5ம் தேதி இரவில் நடந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டுவிட்டு படுக்கைக்கு சென்றார்.
மறுநாள் படுக்கையில் இறந்துகிடந்தார்.
அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறி அவரது உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயற்சித்தனர்.
ஆனால் கனகராஜின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர் சென்னையை சேர்ந்த சுதர்சனன் துாத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. எனவே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மதுரை, தடயவியல் ஆய்வக சோதனையில் பாதிரியார் கனகராஜ் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமானது.
இருப்பினும் சிப்காட் போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் காட்டிவந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கனகராஜின் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போதகர் சிக்கினார்
கன்னியாகுமரி மாவட்டம் வாத்தியார்விளையை சேர்ந்தவர் டைட்டஸ், 31. இவர் கனகராஜ் சபையில் போதகராக இருந்தார்.
வெளியிடங்களுக்கு ஜெபத்திற்கு செல்லும்போது பெண்களிடம் பாலியல் ரீதியாக டைட்டஸ் தவறாக நடந்தாராம். அவரை கனகராஜ் கண்டித்துள்ளார். வெளியிடங்களுக்கு போதனைக்கு அனுப்பாமல், தலைமை மையத்திலேயே பணியமர்த்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ், தனது தம்பி அன்ட்ரோ,29, மற்றும் நண்பர் கோட்டாறை சேர்ந்த ரகு,35,ஆகியோரை சம்பவத்தன்று வரச்சொல்லியுள்ளார்.
இரவு ஜெபம் முடிந்ததும், பாதிரியாரை அவரது படுக்கையில் தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்
பதற்காக அதிகாலையிலேயே அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற
அரசு டாக்டர் ஒருவரிடம்,
இறப்பு மாரடைப்பால் நடந்தது என பொய்ச்
சான்றிதழ் பெற்றுள்ளனர்.
மேலும் கனகராஜ்க்கும் வேறு போதகர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததைப்போலவும், கனகராஜ்,
பெண்ணுடன் இருந்தார் என ஒரு நாடகத்தை அரங்கேற்ற நாகர்கோவிலில் இருந்து ஒரு பாலியல் தொழிலாளியையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
கனகராஜ் கொலை செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து டைட்டஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துவக்கத்திலேயே சான்றிதழ் கொடுத்த டாக்டர், டைட்டசின் அலைபேசி பேச்சுகள் ஆகியவற்றை விசாரித்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும். ஆனால் போலீசார் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததோடு தற்போதும் குற்றவாளிகளை தப்பவைக்கும் விதமாக வழக்கை ஜோடித்துவருவதாக கனகராஜின் உறவினர்கள் கூறுகின்றனர்.
கொலையை மாரடைப்பாக மாற்ற பொய்ச்சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை