ஜாக்டோ-ஜியோ போராட்ட வழக்கு வேறு நீதிபதிகளுக்கு மாற்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்ட வழக்கு வேறு நீதிபதிகளுக்கு மாற்றம்

Added : டிச 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் மற்றும் அவமதிப்பு வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஒத்திவைத்தது.
தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ -ஜியோ' சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,7ல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவக்கினர். இதற்கு இடைக்காலத்தடை கோரிவழக்கறிஞர் சேகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். செப்.,7ல் நீதிபதிகள்,வேலைநிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்தனர். நீதிபதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாகநிறுத்திவைப்பதாக செப்.,15 ல் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அன்று வேலைநிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள்பணிக்குத் திரும்பினர்.
செப்.,21ல் நீதிபதிகள்,'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சம்பளப் பிடித்தம் செய்யக்கூடாது. பிடித்திருந்தால், அதை திருப்பி வழங்க வேண்டும். சம்பளக் கமிஷன் பரிந்துரையை செப்.,30க்குள்
சமர்ப்பிக்கவேண்டும். அதை நடைமுறைப்படுத்துவது குறித்து
அக்.,13க்குள் அரசு முடிவை தெரிவிக்க வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, அக்.,11ல் அரசு அறிவித்தது.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு அமர்வு நேற்று விசாரித்தது.
சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,''எங்கள் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞருக்கு உடல்நிலைசரியில்லை. சென்னையில் உள்ளார். அவர் ஆஜராகி வாதிட கால அவகாசம் தேவை,'' என்றார்.
நீதிபதிகள்: ஏற்கனவே இதே காரணங்களைக்கூறி 2 முறை அவகாசம் கோரப்பட்டது. தற்போது நீங்கள் மாற்று ஏற்பாடுசெய்திருக்கலாம். இந்த அமர்வு முன் வழக்கை நடத்த நீங்கள் விரும்பவில்லை என்பதுபோல் தெரிகிறது.
தற்போது பிப்ரவரி வரை அவகாசம் கோருகின்றீர்கள். அவ்வளவு காலம் வழங்க முடியாது.விசாரணை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு
மாற்றப்படுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X