ஜெயலலிதா உடல் டிஎன்ஏ சோதனை: ஐகோர்ட் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா உடல் டிஎன்ஏ சோதனை: ஐகோர்ட் கேள்வி

Added : டிச 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜெயலலிதா, Jayalalithaa,  டிஎன்ஏ சோதனை,DNA testing,  சென்னை ஐகோர்ட், Chennai High Court, அம்ருதா,Amruta,  தமிழக அரசு,Tamil Nadu,  நீதிபதி வைத்தியநாதன், Justice Vaidyanathan,

சென்னை: ஜெயலலிதாவின் மகள் என உரிமை கேட்டு அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளைக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு உகுந்தது அல்ல. விளம்பர நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் வாரிசு உறவினர் என எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதி வைத்தியநாதன் குறுக்கிட்டு, ஜெயலலிதாவின் உடலை டிஎன்ஏ பரிசோதனை செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

பின்னர் மனுதாரர் சார்பில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். கடந்த 2013ல் ஜெயலலிதா வீட்டிற்கும், அம்ருதா வீட்டிற்கும் நடந்த தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது உரிமை கோராமல் இறந்த பிறகு உரிமை கோருவது ஏன்? டிஎன்ஏ பரிசோதனை கேட்காதபோது நாங்கள் எப்படி உத்தரவிட முடியும்? பெங்களூரு சேர்ந்தவர்கள் சென்னை வந்ததை கூறாமல் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும். அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்களில் கையெழுத்து உள்ளிட்ட பல குளறுபடி உள்ளது எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை(டிச.,22)க்கு ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X