ஆர்கே லட்சுமியின் பார்வையில் குடைவரைக்கோயில்கள்...| Dinamalar

ஆர்கே லட்சுமியின் பார்வையில் குடைவரைக்கோயில்கள்...

Updated : டிச 23, 2017 | Added : டிச 23, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆர்கே லட்சுமியின் பார்வையில் குடைவரைக்கோயில்கள்...

ஆர்.கே.லட்சுமி
திருச்சயில் பிசியோதெரபி நிலையம் நடத்துவர்.

ஒவியர் சில்பியின் ஒவியத்தை ரசித்து தானும் அது போல ஒவியம் வரையவேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.இது போன்ற ஒவியங்களை கற்பனையில் வரைவதை விட நிஜத்தில் பார்த்து வரைவது அல்லது நிஜத்தில் பார்த்ததை புகைப்படமாக்கிக் கொண்டு அதைப்பார்த்து வரைவது நல்ல பலனைத்தரும் என்று உணர்ந்தார்.
இதற்காக கோவில்களை இவரே புகைப்படமாக்க தீர்மானித்தார்.இவரது புகைப்பட ஆர்வத்தை உற்சாகப்படுத்தி,கூர்தீட்டியவர் நெய்வேலி செல்வன் ஆவார்.


இதன் அடிப்படையில் இவர் எடுத்த படங்களின் அழகை நேர்த்தியை பலரும் பாராட்டவே நிறைய கோவில்களை படமெடுக்க ஆரம்பித்தார்.
ராஜமாணிக்கனார் வரலாறு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நட்பு கிடைத்தபிறகு என்.கலைக்கோவன்,என்.சுந்தரேசன் ஆகியோரின் தலைமையில் குடைவரைக்கோயில்கள் பற்றிய ஆராய்சிக்குழுவில் இவரும் இடம்பெற்றார்.

குடைவரைக் கோவில்கள் பற்றிய அரிய புத்தகங்கள் இப்போதும் கிடைக்கிறது இருந்தாலும் அப்படிப்பட்ட புத்தகங்களில் வாசகர்களை ஈர்க்கும் புகைப்படங்கள் மிகக்குறைவாகவே உள்ளன.வாசகர்களிடம் விஷயத்தை விளக்கி உடனே படிக்கத்துாண்டுவது படங்கள்தான் என்பதினால் படங்களுடன் கூடிய குடைவரைக்கோவில்கள் பற்றிய புத்தகம் உருவாக்க தேவையான படங்களை எடுத்துவருகிறார்.
தமிழகத்தில் உள்ள 105 குடைவரைக்கோவில்களில் 90 கோவில்களை படம் எடுத்துவிட்டார்.மீதமுள்ள பதினைந்து கோவில்களையும் எடுத்துவிட்டால் புத்தகத்திற்கான வேலை துவங்கிவிடும்.

கோவில்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம் அதை நாம் அடுத்த அடுத்த தலைமுறைகளும் பார்த்து ரசிப்பதற்காக பாதுகாக்கவேண்டும், நான் ஆராய்சிக்காக இந்தக் கோவில்களை படம் எடுத்தாலும் இதன் அழகில் சொக்கிப்போய் பலமுறை ஒரே கோவில்களை பல கோணங்களில் படம் எடுத்திருக்கிறேன்,எனக்கு மனதிற்கு விருப்பமானவை இந்த படங்கள் என்று சொல்லும் ஆர்.கே.லட்சுமியிடம் பேசுவதற்காகன எண்:9944111903.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
11-ஜன-201809:36:22 IST Report Abuse
MaRan சூப்பர் மேடம்,, அந்த 105 கோவில்களுக்கும் ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்தல் பலர் இணைவார்கள்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
29-டிச-201708:58:05 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே லட்சுமி மேடம் மிக நல்ல பணி, வாழ்த்துக்கள் முருகராஜ் சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், அந்த 105 கோவில்களின் பெயரையும் எழுத முடியுமா? தங்களின் வாசகர் வட்டம் கூட வித்தியாசமான போட்டோ எடுத்து கொடுப்பார்கள், அப்படி செய்தால் லட்சுமி அவர்களின் புத்தகம் புது மெருகடைய வாய்ப்புகள் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
VIJAYALAKSHMI - madurai,இந்தியா
28-டிச-201711:30:01 IST Report Abuse
VIJAYALAKSHMI சூப்பர் மேடம் அழகு படங்கள் ரொம்ப அருமை பார்க்க வேண்டிய இடங்கள் விஜயலக்ஷ்மி மதுரை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X