தோட்டா அறிந்த மர்மம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தோட்டா அறிந்த மர்மம்!

Added : டிச 26, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தோட்டா அறிந்த மர்மம்!

மறைந்த, காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனுக்கு ஒட்டப்பட்ட, 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டிகள் கூட இன்னும் கிழிபடவில்லை. அதற்குள், அவரது, 'வீர மரணம்' விவாதத்திற்கு
உள்ளாகி இருக்கிறது!

கொள்ளையர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அன்று, 'டிவி'யில் ஒரு விவாதம். 'காவல் துறையினரை குஷியாக வைத்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது. காரணம், அது முதல்வர் கையிலிருக்கும் துறை!'அதனால் தான், இறந்து போன பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு உடனடியாக ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்படுகிறது. அவரது மகன்களின் படிப்பு செலவையும் கூட அரசே ஏற்றுக் கொள்ளப் போகிறதாம்!'மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்' என்று மட்டும் தான் அரசு சொல்லவில்லை' என, ஒரு வழக்கறிஞர் ஆதங்கப்பட்டார்.
கூடவே, 'ஒரு கோடி ரூபாய் என்பது மக்களின் வரிப்பணம்' என்பதையும்
நினைவூட்டினார்.பெரிய பாண்டியன் மேல் அனுதாபம் நிரம்பியிருந்த அன்றைய சூழலில், அவரது ஆதங்கத்தை அரங்கில் இருந்தவர்கள் எளிதாக கடந்து போய் விட்டனர்; அதைப் பார்த்த மக்களும் கூட!ஆனால், அன்று அவர் கேட்டது எத்தனை பெரிய நியாயம் என்பது, இன்று ராஜஸ்தானில் இருந்து வரும் செய்திகளை பார்க்கும் போது புரிகிறது.பெரிய பாண்டியன் தலைமையிலான தனிப்படையில் இடம்பெற்றிருந்த, கொளத்துார் காவல் ஆய்வாளர், முனிசேகர் துப்பாக்கியில் இருந்து தான் குண்டு பாய்ந்திருக்கிறது. அந்த குண்டு தான் பெரிய பாண்டியனை துளைத்து வெளியேறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், 'தமிழக தனிப்படையினரின் துப்பாக்கி தோட்டா தான் பெரிய பாண்டியனை துளைத்தது' என, கொள்ளையன் நாதுராம் கூட்டாளியான தேஜாராமின் மகன், மகள் கூறியுள்ளனர். இதனால், 13ம் தேதி இரவு ராஜஸ்தானில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவங்கள் அனைத்துமே, சந்தேக சல்லடைக்குள் வந்து
விழுந்திருக்கின்றன.முக்கிய குற்றவாளியை பிடிக்கச் சென்ற பெரிய பாண்டியன் குழுவினர், குற்றவாளியை நெருங்கும் நிலையில், ராஜஸ்தான் காவல் துறையின் உதவியை தவிர்த்தது ஏன் என்பதில் துவங்குகிறது, சந்தேக கயிற்றின் முதல் முடிச்சு.நவம்பர் 16ல், கொளத்
துாரில், நகைக்கொள்ளை நடந்த பின், கடை உரிமையாளர் முகேஷ்குமார் ஜெயின் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடி ராஜஸ்தான் விரைந்த தமிழக தனிப்படை, நாதுராம் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கைது செய்து அழைத்து வந்தது.இது, அம்மாநில காவல் துறை உதவியின்றி நிச்சயம் சாத்தியப்பட்டிருக்காது.அதனால் தான், கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 9ல், மீண்டும் ராஜஸ்தான் விரைந்த பெரிய பாண்டியன் குழு, பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவை சந்தித்து பேசியிருக்கிறது.
அப்படி இருக்கையில், குற்றவாளி நாதுராமை கைது செய்ய முயன்ற அந்த நள்ளிரவு நேரத்தில், உள்ளூர் காவல் துறையை தவிர்த்தது, நிச்சயமாக தற்செயல் நிகழ்வு அல்ல. அன்றைய இரவில், இன்னும் வெளிச்சத்திற்கு வராத ஏதோ ஒன்று நிச்சயம் நடந்திருக்கிறது.
தமிழக காவல் துறையிடம் தன் உறவுகள் சிக்கி இருந்த நிலையில், துப்பாக்கி துாக்கும் எண்ணம் நாதுராமுக்கு கண்டிப்பாக வந்திருக்காது. காரணம், காவல் துறையைப் பற்றி நன்கு அறிந்த, அனுபவ கொள்ளையன் அவன்!தவிர, வழக்கை விசாரிக்கும் ஜெய்தரன் என்ற பகுதியின் காவல் நிலைய ஆய்வாளர், 'நாதுராம் உள்ளிட்ட அவன் குழுவினர் கையில், சம்பவத்தின் போது துப்பாக்கி இல்லை' என்கிறார்.அப்படியெனில், பெரிய பாண்டியன் மரணத்திற்கு காரணமான தோட்டா எங்கிருந்து பாய்ந்தது?பெரிய பாண்டியனின் மனைவி தற்போது கேட்பது போல், இனியாவது மனசாட்சியோடு முனிசேகர் உண்மை சொல்ல வேண்டும்.

பெரிய பாண்டியன் மரணத்தை, 'வீர மரணம்' என, ஒரு மாநிலமே போற்றியிருக்கிறது. மாநில மக்களின் பிரதிநிதியான முதல்வர், கருப்பு பட்டை அணிந்து, பெரிய பாண்டியனின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தியிருக்கிறார். இவையெல்லாம், மக்களை வதைக்கும் கொள்ளையனை கருவறுக்க நடந்த போராட்டத்தில் அவர் உயிரிழந்தார் என்பதால் தான்!ஆனால், ராஜஸ்தானில் இருந்து தற்போது வரும் செய்திகள், வேறு மாதிரி இருக்கின்றன.சம்பவம் நடந்த இடத்தில் அன்று இருந்ததாகச் சொல்லப்படும் கொள்ளையர்களும், தமிழக தனிப்படையுமே சம்பவத்திற்கான சாட்சிகள். இதில், பெரிய பாண்டியன் இல்லை என்றாகி விட்டது.நாதுராம் உயிரோடு சிக்கு
வதற்கான வாய்ப்புகள் வெகு குறைவு. அப்படி சிக்கினாலும், உள்ளது உள்ளபடி உண்மைகள் வெளிவருவது சந்தேகமே!ஆக, முனிசேகர் வாய் திறக்க வேண்டும் அல்லது அவருடன் சென்ற மூன்று காவலர்கள் வாய் திறக்க வேண்டும். இப்போது வரை, அவர்கள் மூவரும் பேசியதாக
செய்திகள் இல்லை.'கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டோம்' என, சொல்லும் முனிசேகர், மூக்கில் மட்டுமே காயம்பட்டு வந்து நிற்கிறார். அதற்கு, முதல்வர், ஒரு லட்சம் ரூபாய்
நிவாரணம் அறிவித்திருக்கிறார்.துப்பாக்கியை பறித்துக் கொண்ட கொள்ளை கூட்டம்,
அது எப்படி, பெரிய பாண்டியனை மட்டும் சுடும்; அதுவும், ஒரே ஒரு முறை!
'சம்பவம் நடந்த இடத்தில் ஒரே ஒரு தோட்டா உறை தான் கிடைத்தது' என ராஜஸ்தான் போலீஸ் சொல்வது, இந்த சந்தேகத்தை மேலும் அடர்த்தி ஆக்குகிறது.
தவிர, 'பெரிய பாண்டியனின் துப்பாக்கியை பறித்து கொள்ளையர்கள் அவரை சுட்டு விட்டனர்' என, வெளியான முதல் தகவலை, முனிசேகர் தவிர வேறு யார் சொல்லியிருக்க முடியும்?
இவையெல்லாம், 'நாதுராம் கும்பல் தான் பெரிய பாண்டியனை சுட்டது' எனும் முன்கதை அடிப்படையில் எழும்பும் கேள்விகள்.இப்போதைய தகவலில், முனிசேகர் துப்பாக்கி தோட்டா தான் பெரிய பாண்டியன் உயிரை பறித்தது என, ராஜஸ்தான் காவல் துறை சொல்லி விட்டது. இனி, 'கொள்ளை கும்பலிடம் சிக்கிக் கொண்ட பெரிய பாண்டியனை மீட்கத் தான் துப்பாக்கி எடுத்தேன்.
'அது எடுக்கும் போதே திடீரென வெடித்து விட்டது' என, முனிசேகர் சொல்வாரானால், அது எப்படி மிகச்சரியாக பெரிய பாண்டியனின் உடல் நோக்கி வெடித்தது என்ற கேள்வி வரும்.
கூடவே, அவரின் உடல் துளைத்து வெளியேறிய குண்டு, அவரை பிடித்துக் கொண்டிருந்த அல்லது தாக்கிக் கொண்டிருந்த கொள்ளையர்களை பதம் பார்க்காமல் தரை தொட்டது எப்படி, எனும் கேள்வியும் எழும்.கூடவே, கொள்ளையர்களை நோக்கி ஏன் சுடவில்லை என்றும் கேள்வி எழும். எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் ஏன் உண்மையை மறைத்தீர்கள் என்ற அதிமுக்கியமான கேள்வியும் எழும். அனைத்திற்கும் முனிசேகர் தான் பதில் சொல்ல வேண்டும்.
ராஜஸ்தானில் இருந்து உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கத்துவங்கி விட்டன. தமிழக காக்கிகளின் மேல் கறை படியத் துவங்கி விட்டது. பாரபட்சமின்றி முதல்வர் எடுக்கும் நடவடிக்கை ஒன்றே இக்கறையை கழுவும்.இது நடக்காவிடில், 'கடமையில் தவறினாலும் அரசை
சுலபமாய் ஏமாற்றி விடலாம்' எனும் தவறான விஷச் செடி, தப்பான அதிகாரிகள் மனதில், ஆழமாய் வேரூன்றி விடும்!

-- வாஞ்சிநாதன்
vanjinath40@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Sheik Abdul Kader - Al Wakra,கத்தார்
03-ஜன-201811:33:38 IST Report Abuse
M Sheik Abdul Kader திரு முனிசேகர் எல்லாம் சொல்லி விட்டார் அதை மறைந்த திரு பெரியபாண்டியன் அவர்களின் குடும்பமும் மற்றும் காவல் துறையும் நம்புகிறது எனவே வாசகர்கள் தவறான குற்றச்சாட்டை தவிர்க்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-டிச-201709:40:35 IST Report Abuse
D.Ambujavalli பெரிய பாண்டியனால் தங்கள் ரகசியம் ஏதாவது அம்பலமாகி விடுமோ என்று இது திட்டமிடப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Durairaj - Kuwait,குவைத்
30-டிச-201714:38:07 IST Report Abuse
Durairaj The most corrupt force is TN police force. There is second thought on it
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X