தி.மு.க.,வுக்கு இனி வெற்றியே இல்லை என அழகிரி சாபம் ! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., DMK, அழகிரி,Alagiri, சாபம் , Curse, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், Chennai RK Nagar By-election, ஸ்டாலின், Stalin, சுயேச்சை , தினகரன்,Dinakaran, மருதுகணேஷ்,Marutukanesh, கருணாநிதி,Karunanidhi, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, former Union Minister Alagiri,

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு
எதிரான சலசலப்புகள் அதிகரித்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பின், மவுனம் கலைத்த,
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, 'ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, எந்த தேர்தலிலும், தி.மு.க., ஜெயிக்காது' என, திடீர் சாபம் விட்டுள்ளார். அழகிரியின் ஆவேச கருத்து, சென்னையில், நாளை நடக்கவுள்ள, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில், சர்ச்சையை கிளப்பும் என, தெரிகிறது.

தி.மு.க., DMK, அழகிரி,Alagiri, சாபம் , Curse, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், Chennai RK Nagar By-election, ஸ்டாலின், Stalin, சுயேச்சை , தினகரன்,Dinakaran, மருதுகணேஷ்,Marutukanesh, கருணாநிதி,Karunanidhi, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, former Union Minister Alagiri,


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர், தினகரன் வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், 'டிபாசிட்' கூட பெற முடியாமல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தோல்விக்கான காரணங்களை அறிய, ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழு, நேற்று முதல் கட்ட விசாரணையை முடித்து உள்ளது.


இந்நிலையில், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டு உள்ள, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகனுமான அழகிரி, நேற்று அளித்த பேட்டியில், ''ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, எந்த தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெறாது...''தொண்டர்கள், பணத்திற்கு விலை போய் விட்டனர் எனக் கூறிய, முன்னாள் அமைச்சர், துரைமுருகனுக்கு, கறுப்புக் கொடி காட்ட வேண்டும்,'' என்றார்.


வியூகம் காரணம்:

அழகிரியின் அதிரடி பேட்டி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர்,

பழனிமாணிக்கம் கூறுகையில், ''அழகிரிக்கு, தி.மு.க.,வை பற்றி பேச தகுதி கிடையாது. 2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு, ஸ்டாலின் அமைத்த வியூகமே காரணம்,'' என்றார். சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் கூறுகையில், ''அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். மன்னிப்பு கேட்டால், அவரை கட்சியில் சேர்ப்பதாக, அவரிடம் யாரும்கூறவில்லை. தன் இருப்பை வெளிக்காட்டவே, அவர் இப்படி பேசுகிறார்,'' என்றார்.


இந்நிலையில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு, நாளை, சென்னை அறிவாலயத்தில் பரப்பரப்பாக கூடுகிறது. அதில், இடைத்தேர்தல் தோல்வி, அழகிரியின் எதிர்ப்பு குறித்து, முக்கியமாக விவாதிக்கப் பட உள்ளது. அழகிரி கருத்துக்கு, யாராவது ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில், இக்கூட்டத்தில் புயல் வீசும் வாய்ப்பு உள்ளது.


இது குறித்து, மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:கட்சியின் கொள்கை முடிவு, வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி வியூகம் தொடர்பான விவகாரங்களில், கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களிடம், கருணாநிதி கருத்து கேட்பார். அவர்கள் வாயிலாக, தொண்டர்களின் உணர்வை அறிந்து, பின் முடிவெடுப்பார். அதனால், அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார்.


முக்கியத்துவம்ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார். அ.தி.மு.க.,விலிருந்து வந்த பிரமுகர்கள், சமூக வலைதள குழுவினரின் ஆலோசனைகளுக்கும், அவர் முக்கியத்துவம் தருகிறார். தொண்டர்களுடன் தொடர்புள்ள

Advertisement

நிர்வாகிகளின் கருத்துக்களையும், ஸ்டாலின் கேட்க வேண்டும்.மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள், பொதுக்குழு போன்ற கூட்டங்களில், சுதந்திரமாக கருத்துக்களை எடுத்து வைப்பர்.


அவற்றை உள்வாங்கிக் கொண்டு, கருணாநிதி செயல்படுவார். அதேபோல், ஸ்டாலினும், மூத்த நிர்வாகிகளை பேச அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


'ஸ்டாலினால் தண்டால் தான் எடுக்க முடியும்!'''கட்சியைப் பலப்படுத்துவதாக கூறிக்கொண்டு, உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று, ஸ்டாலின் தண்டால் எடுக்கிறார்; பார் விளையாடுகிறார்,'' என, அழகிரி கிண்டலடித்தார்.'டிவி' சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி:கட்சியின் நலனுக்காக, நான் கேள்விகள் கேட்டேன். அதனால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நியாயத்திற்கு, அங்கு மரியாதை இல்லை. ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் வரை, தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறாது; மாற்றம் தேவை. வேனில் செல்லாமல், கருணாநிதியை போல, வீதியில் இறங்கி களப் பணியாற்ற வேண்டும்.


எந்த கட்சியும், தோல்வியை ஒப்புக் கொள்வதில்லை. வெற்றிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், தி.மு.க.,வில் மாற்றம் தேவை. பணம் கொடுக்காமல், தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு, களப்பணி செய்ய வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்தும், தே.மு.தி.க.,விலிருந்தும் விலகி வந்தவர்களை வைத்து, எப்படி கட்சியை வழி நடத்த முடியும்? கட்சியைப் பலப்படுத்துவதாக கூறி விட்டு, ஸ்டாலின், 'ஜிம்'முக்கு சென்று, தண்டால் எடுக்கிறார்; பார் விளையாடுகிறார். இதைத் தான் அவரால் செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


-நமது நிருபர்-


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (179)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
01-ஜன-201819:14:23 IST Report Abuse

Nakkal Nadhamuniஇந்த மாதிரி ஜனநாயகமில்லாத மக்களுக்கு நல்லது செய்யாத கட்சிகள் ஒழிய/அழிய வேண்டியதுதான்... ரெண்டு திராவிட கட்சிகளும் ஒழிவது நாட்டுக்கு மிகவும் நல்லது...

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜன-201815:35:02 IST Report Abuse

Lion Drsekarமிக மிக அற்புதமான எதார்த்தமான கருத்துக்கள், பாராட்டுக்கள், திருத்திக்கொண்டால் நல்லது, வந்தே மாதரம்

Rate this:
rmr - chennai,இந்தியா
01-ஜன-201813:38:40 IST Report Abuse

rmrஉண்மைய கூறியதற்கு நன்றி மக்கள் திராவிட கட்சிகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். தமிழ்நாட்டிற்கு தேவை ஒரு மாற்றம் முன்னேற்றம் கூத்தாடிகளும் வந்தேறிகளும் வேண்டாமே

Rate this:
Thangaraju - chennai,இந்தியா
02-ஜன-201821:18:29 IST Report Abuse

Thangarajuமக்கள் என்றால் யாரு.....

Rate this:
Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா
30-டிச-201710:13:56 IST Report Abuse

Gopalvenkatesh Saiஇவருக்கு கருணாநிதி இன் மகன் என்ற ஒன்று மட்டுமே தகுதி .மற்றபடி ஸிரோ.

Rate this:
Marshal Thampi - Nagercoil,இந்தியா
30-டிச-201700:38:06 IST Report Abuse

Marshal Thampi இவரை தி மு க வில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது கட்சிக்கு நல்லது. இவர் ஆற்றிய களப்பணி சின்ன குழந்தையை கேட்டாலும் சொல்லும்.70 களில் இருந்தே

Rate this:
Gnanam - Nagercoil,இந்தியா
29-டிச-201706:59:30 IST Report Abuse

Gnanamகுடும்ப ஆட்சிக்கு இனிமேல் வெற்றி கிடைப்பது அரிதுதான். மக்கள் ஜனநாயக ஆட்சி அமைப்பை புரிந்துகொண்டார்கள்.

Rate this:
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
28-டிச-201723:17:32 IST Report Abuse

Nagan Srinivasanதி.மு.க.,வுக்கு இனி வெற்றியே இல்லை அ தி.மு.க.,வுக்கும் அதே கதிதான் மதுரை ஐயா இதில் மற்றொருவரை குற்றம் சொல்வதில் ?

Rate this:
SSTHUGLAK - DELTA,இந்தியா
28-டிச-201720:36:46 IST Report Abuse

SSTHUGLAKஅழகிரி அநாகரிக விமர்சனம் செய்துள்ளார்

Rate this:
Gren Valley - madurai,இந்தியா
28-டிச-201719:47:11 IST Report Abuse

Gren Valleyசுடாலின் போட்ட கணக்கு வேற ஆண்டவன் போட்ட கணக்கு வேற அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த தினகரனோட போட்ட அண்டர்ஸ்டாண்டிங் தனக்கே ஆப்பா வரும்னு நினைச்சிருக்கவே மாட்டாரு சுடலை

Rate this:
Prem Kumar - Bangalore,இந்தியா
28-டிச-201719:09:09 IST Report Abuse

Prem Kumarதி.மு.கவிற்கு ஆர்.கே.நகர் இடை தேர்தலில் வாக்குகள் பெருமளவில் கிடைத்தது 2-ஜி வழக்கு தீர்ப்பிற்கு பிறகு தான் என்றாலும், , ஓட்டுக்கள் கூடிட ஸ்டாலினின் சுய உழைப்பும் அவரது தீவிர பிரச்சாரமும் தான் உதவிற்று. என்பதை மறுக்க முடியாது. மற்ற கூட்டணி கட்சிகளும் அதன் தலைவர்களும் வெறும் அறிக்கை மூலம் தான் மக்களை தொடர்பு கொள்ள முயற்சித்தார்களே தவிர நேரடியாக மக்களை சந்திக்க யாரும் முன் வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. கூட்டணி கட்சிகளால் உண்மையிலேயே தி.மு.கவிற்கு நஷ்டமே தவிர எந்த லாபமும் இல்லை. வரப்போகும் தேர்தல்களில் அனைவரையும் ஒதுக்கி விட்டு தனியாக தேர்தலை சந்திக்கும் முடிவை தைரியமாக ஸ்டாலின் எடுக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கு பிறகு மற்ற கட்சி தலைவர்களை போலவே அறிக்கை விடும் அழகிரி கூட்டணி கட்சி தலைவர்களைவிட மோசமான நிலையை எடுத்ததன் மூலமாக, அரசியல் ரீதியாக இதுவரை தோல்வியை சந்தித்துள்ளார். தி.மு.க வளர்ச்சிக்கு எப்போதுமே துணையாக இருந்ததாக தெரியவில்லை. ஆகவே, அவர் தி.மு.கவை பற்றியோ ஸ்டாலினை பற்றியோ பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

Rate this:
saudi mercel - Chennai,இந்தியா
02-ஜன-201804:03:59 IST Report Abuse

saudi mercel"தார்மீக" என்ற வார்த்தைக்கே திக திமுக போன்ற எந்த கழகங்களுக்கு அருகதை கிடையாது...

Rate this:
மேலும் 167 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement