98 வயதில் முதுகலை பட்டம் பீஹார் முதியவர் சாதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

98 வயதில் முதுகலை பட்டம் பீஹார் முதியவர் சாதனை

Added : டிச 27, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 98 வயது  முதியவர்,98-year old man, முதுகலை பட்டம்,Postgraduate Degree,ராஜ்குமார் வைஷ்,Rajkumar Vaish,  பொருளாதாரம்,economics, நாலந்தா திறந்தநிலை பல்கலை,Nalanda Open University, பட்டமளிப்பு விழா, Graduation Ceremony, மேகாலயா கவர்னர் கங்கா பிரசாத்,Meghalaya Governor Ganga Prasad,முதல்வர் நிதிஷ் குமார்,Chief Minister Nitish Kumar,  ஐக்கிய ஜனதா தளம் ,United Janata Dal,பீஹார் முதியவர், Bihar oldman,

பாட்னா:பீஹாரைச் சேர்ந்த, 98 வயது முதியவர், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று, சாதனை படைத்ததுடன், முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, நாலந்தா திறந்தநிலை பல்கலையின் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. மேகாலயா கவர்னர், கங்கா பிரசாத், 2,780 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில், 98 வயது ராஜ்குமார் வைஷ், அனைவரது பாராட்டையும் வென்றார். எம்.ஏ., பொருளாதாரம் முடித்த அவர், மேடையேறி, பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1938ல், ஆக்ரா பல்கலையில், பி.ஏ., பொருளாதாரம் படித்த அவர், 1940ல்,எல்.எல்.பி., முடித்தார்.
ஒரு தனியார் நிறுவனத்தின் சட்ட அதிகாரியாக பணியாற்றி, 1980களில் ஓய்வு பெற்றார். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதற்காக, நாலந்தா திறந்த நிலை பல்கலையில், 2015ல் பதிவு செய்திருந்தார்.''என் நீண்ட நாள் கனவு நனவானது. வேலைக்கு செல்வதற்காக மட்டும் படிக்காமல், அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் படிக்க வேண்டும்,'' என, வைஷ் கூறினார்.நாலந்தா பல்கலையில், மிக அதிக வயதில், முதுகலை பட்டம் வென்றவர் என்ற சாதனையை, அவர் புரிந்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
28-டிச-201723:31:12 IST Report Abuse
Kuppuswamykesavan இன்னா ஓர் இமாலய சாதனையை, இந்த முதியவர் நிகழ்த்தி விட்டார். அடேங்கப்பா, இவருக்காக ஒரு தமிழ் சினிமா பாடலை டெடிகேட் செய்வோமா?. "அகர முதல எழுத்தெல்லாம், அறிய வைத்தாய் தாயே, .....".
Rate this:
Share this comment
Cancel
MAHA - Trichy,இந்தியா
28-டிச-201717:16:21 IST Report Abuse
MAHA படிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல. வணங்குகிறேன். எழில்
Rate this:
Share this comment
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
28-டிச-201711:47:06 IST Report Abuse
Sathiamoorthy.V தங்கள் வலைத்தளத்தில் இந்த செய்தியையும் போட்டு விட்டு அருகில் ரஜினி அரசியலுக்கு வருவது சம்பந்தமான தகவலை போட்டிருப்பது ரஜினி சார் 96 வயதினிலேயும் கட்சி ஆரம்பிப்பார் என தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X