Ariviyalmalar | செவ்வாயை வலம் வர போகும் மின் கார்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

செவ்வாயை வலம் வர போகும் மின் கார்!

Added : டிச 28, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
செவ்வாயை வலம் வர போகும் மின் கார்!,Ariviyalmalar

'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி நிறுவனம் தயாரித்து வரும், 'பால்கன் ஹெவி' என்ற சக்தி வாய்ந்த ராக்கெட்டின் புகைப்படத்தை, சமீபத்தில், 'டுவிட்டர்' மூலம் அதிபர், எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார். இந்த ராக்கெட், 2018ல் செவ்வாய் கிரகத்தை சுற்றும் வெள்ளோட்ட முயற்சிக்கு பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே பலமுறை, ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பிய, 'பால்கன் 9' ராக்கெட்டைப் போல, மூன்று ராக்கெட்டுகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது பால்கன் ஹெவி. இதன் உந்து சக்தி, 18 போயிங், 747 விமானங்களின் உந்து சக்திக்கு இணையானது. இதற்கு முன் இத்தனை சக்தி வாய்ந்த ராக்கெட், 1973ல் அமெரிக்கா அனுப்பிய, 'சாட்டர்ன் 5' ராக்கெட் தான். எனவே தற்போது உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் பால்கன் ஹெவி தான். ''வழக்கமாக இது போன்ற வெள்ளோட்டங்களுக்கு கான்கிரீட் துண்டுகள் போன்றவற்றை நிரப்பி அனுப்புவர். அது எங்களுக்கு போரடித்துவிட்டது.
''எனவே, என் சிவப்பு நிற ரோட்ஸ்டரை, சிவப்பு கிரகத்தை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு சுற்றிக்கொண்டிருக்கும் ராக்கெட்டில் வைத்து அனுப்பப்போகிறோம்,'' என, அவர் விளக்கினார்.
நாசாவின், சாட்டர்ன் 5 ராக்கெட் கிளம்பிய அதே தளத்திலிருந்து, 2018 ஜனவரியில் பால்கன் ஹெவி கிளம்பும். “அந்த சோதனையின்போது ராக்கெட் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால், நாசாவின் தளத்தை சேதப்படுத்தாமல் வெகு துாரம் போய் வெடித்தால் நல்லது,” என, ஒரு மாநாட்டில் தெரிவித்தார் மஸ்க்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை