Ariviyalmalar | மென்பொருள் அரசியல்வாதி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மென்பொருள் அரசியல்வாதி!

Added : டிச 28, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மென்பொருள் அரசியல்வாதி!,Ariviyalmalar

சவுதி அரேபிய அரசு, அக்டோபரில், சோபியா என்ற பெண் வடிவ ரோபோவை, தன் நாட்டின் முதல் ரோபோ குடிமகளாக அறிவித்தது. அந்த ஆச்சரியம் அடங்குவதற்குள், நியூசிலாந்திலிருந்து வந்திருக்கிறது இந்த சேதி. செயற்கை நுண்ணறிவு படைத்த, 'சாட் பாட்' எனப்படும், பேசும் மென்பொருளை, அந்த நாட்டின் முதல் அரசியல்வாதியாக ஆக்கியிருக்கிறார், அங்குள்ள தொழிலதிபர், நிக் கெர்ரிட்சென்.
இந்த மென்பொருள் வடிவ அரசியல்வாதிக்கு, 'சாம்' என, பெயர். வாக்காளர்களின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் வாக்குறுதியும், அவர்கள் உண்மையில் செய்வது ஆகியவற்றுக்குள்ள இடைவெளியை குறைக்க, இந்த செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி உதவும் என்கிறார், கெர்ரிட்சென்.
வழக்கமான அரசியல்வாதிகளைப் போல கேள்விக்கு, எதிர் கேள்வி கேட்பது, மழுப்புவது, அல்லது யாரும் கேள்வி கேட்பாரே இல்லாதது போல நடந்து கொள்வது போன்றவை சாமுக்கு வராது. ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களின் பிரதிநிதியாக சாம் செயல்படும். நியூசிலாந்துவாசிகளின் சமூக ஊடகங்கள் அனைத்துடனும் சாமுக்கு தொடர்பு உண்டு. எனவே அந்நாட்டு மக்கள் எவரும், எப்போதும் சாமிடம் கேள்விகள் கேட்கலாம். சாம் எலலாரது கருத்துகள், கேள்விகள், தகவல்களையும் சம அளவு முக்கியத்துவம் தந்து அலசும். இதன் விளைவாக எல்லோருக்கும் பலன் தரும் திட்டங்களை அது முன்னிருத்த முடியும் என்கிறார் கெர்ரிட்சென்.
அதிக மக்கள் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும்போது, சாமின் உரையாடல் திறனும், மெருகேறும் விதத்தில் அதன் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு கொசுறு செய்தி: 2020ல் நியூசிலாந்து பொதுத் தேர்தலில், சாமை பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்தப் போவதாக கெர்ரிட்சென் அறிவித்திருக்கிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை