30 நிமிடம் முன்னதாக வாங்க! ஊழியர்களுக்கு அரசு உத்தரவு| Dinamalar

30 நிமிடம் முன்னதாக வாங்க! ஊழியர்களுக்கு அரசு உத்தரவு

Added : டிச 28, 2017 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
30 நிமிடம்,முன்னதாக,வாங்க!,ஊழியர்களுக்கு,அரசு உத்தரவு

கவுகாத்தி:'அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு தாமதமாக வரும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வர வேண்டும்' என, அசாம் அரசு உத்தரவிட்டு உள்ளது.
அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், முதல்வர் சோனவால் பேசுகையில், 'நம் நாட்டில், அசாமில் தான், சூரியன் முதலில் உதயமாகிறது. அரசு ஊழியர்கள், பணிக்கு முன்னதாகவே வர வேண்டும். 'மக்களை காத்திருக்க வைத்திருக்கக் கூடாது; தாமதமாக வரும் கலாசாரத்தை மாற்றி, வருங்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என்றார்.
இந்நிலையில், அசாம் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசு ஊழியர்களின் பணி நேரம், காலை, 10:00 மணிக்கு பதிலாக, 9:30 மணிக்கே துவங்கும் என, முடிவெடுக்கப்பட்டது. பணி முடியும் நேரம், மாலை, 5:௦௦ மணி என்பதில், எந்த மாற்றமும் இல்லை. இந்த மாற்றம், ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது. அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள அரசு ஊழியர் சங்கங்கள், 'இந்த உத்தரவை, ஊழியர்கள் மட்டுமின்றி, அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்' என்றன.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-டிச-201714:56:59 IST Report Abuse
Pasupathi Subbian அரசு ஊழியர் என்றால் , மக்களின் தலைவர்கள் என்று எண்ணும் பழக்கம் , இவர்களின் நினைப்பு , மக்கள் எல்லோரும் அடிமைகள் , அரசு அதிகாரிகள் மட்டுமே இவர்களின் ஆட்சியாளர்கள் என்று எண்ணுவது மாற்றப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
29-டிச-201711:59:41 IST Report Abuse
kuthubdeen முன்னாடி வரட்டும் பின்னாடி வரட்டும் கொடுக்கும் வேலைய ஒழுங்கா செஞ்சா போதாதா என்ன ...வேற என்னத்த சொல்ல இருக்கு ..நான் சொல்லித்தான் இவங்க வேல செய்ற லட்சணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளணுமா அவர்களே அனுபவ பட்டு இருப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
29-டிச-201711:34:54 IST Report Abuse
Chanemougam Ramachandirane நல்ல முடிவு, வாழ்த்துக்கள் இதை மத்திய அரசு சட்டமாக இயற்றி எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் படி செயல் படுத்த வேண்டும் வருகை பதிவேடு எல்லா அலுவலகத்திலும் finger பிரிண்ட் ஏற்படுத்த வேண்டும் அலுவலகம் சென்றோமோ அந்த அதிகாரி கையெழுத்து பெற்று அனுதினமும் வருகை சென்றால் பதிவேட்டில் வைத்து ஆய்வு செய்தலே அதிகாரிகள் தவறு வெளியே தெரிய வரும் மக்கள் பணம் விரயமதை இது தடுக்கும் முறையற்ற அலுவலரை இனம் காண முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X