365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை

Added : டிச 29, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மூலிகை காலண்டர், Herbal calendar, சிவகங்கை ஓவியர் சாதனை,Sivagangai artist record,  ஓவியர் என்.முத்துக்கிருஷ்ணன், Painter N.Muthukrishnan,லிம்கா சாதனை, Limca record, அசிட் உலகச் சாதனை விருது,Acid world record award,  கருப்புமிளகு, அரிசிதிப்பிலி, சதைகுப்பை, கருஞ்சீரகம், உலர்திராட்சை, கீழாநெல்லி, ஓமம், கஸ்துாரி மஞ்சள், தும்பைப்பூ, கிராம்பு, கோரைக்கிழங்கு, சிற்றறத்தை, அம்மன்பச்சரிசி, வாய்விளங்கம், கற்பூரவல்லி, குப்பைமேனி, வேலிப்பருத்தி, நிலவாகை

சிவகங்கை:சிவகங்கை ஓவியர், 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை மூலம் காலண்டர் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.சிவகங்கையைச் சேர்ந்த ஓவியர் என்.முத்துக்கிருஷ்ணன். 1988 முதல் அஞ்சல் அட்டையில் மாத இதழை நடத்தி வருகிறார்.

அட்டையின் இருபுறமும் பொதுஅறிவு, சிரிப்பு, கேள்வி-பதில் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த இதழ் தமிழகம் மட்டுமின்றி அந்தமான், கேரளா மற்றும் சண்டிகார், டில்லி, மும்பை போன்ற வெளிமாநில பகுதிகளுக்கும் சிங்கப்பூர், பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதற்கு லிம்கா சாதனை, அசிட் உலகச் சாதனை விருதுகளும் கிடைத்துள்ளன.
இந்த இதழுக்கு இலவச இணைப்பாக 2004 முதல் ஆண்டுதோறும் காலண்டர்களை வெளியிட்டு வருகிறார். 2004 ல் அரை இஞ்சில் 1330 திருக்குறளுடன் கூடிய காலண்டரை தயாரித்தார். தொடர்ந்து 13 ஆண்டுகளாக புதுப்புதுவிதமான காலண்டர்களை வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை மூலம் காலண்டர் தயாரித்துள்ளனர். மேலும் அதில் மூலிகையின் நன்மைகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது: நம்மை சுற்றி ஏராளமான மூலிகைகள் உள்ளன. அவை குறித்து 7 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட மூலிகைகளை தான் பயன்படுத்த வேண்டும். அதனை உணர்த்தும் விதமாக அந்தந்த மாதத்திற்குரிய மூலிகைகளை சேகரித்து காலண்டரில் ஒட்டியுள்ளேன். மூலிகை பயன்பாடு தெரிந்தால் டாக்டர் உதவி தேவை இருக்காது. மாத இதழுடன் அந்தந்த மாதத்திற்குரிய காலண்டர் மட்டும் அனுப்ப உள்ளோம்.
ஜனவரி மாதத்தில் கருப்புமிளகு, அரிசிதிப்பிலி, சதைகுப்பை, கருஞ்சீரகம், உலர்திராட்சை, கீழாநெல்லி, ஓமம், கஸ்துாரி மஞ்சள், தும்பைப்பூ, கிராம்பு, கோரைக்கிழங்கு, சிற்றறத்தை, அம்மன்பச்சரிசி, வாய்விளங்கம், கற்பூரவல்லி, குப்பைமேனி, வேலிப்பருத்தி, நிலவாகை உள்ளிட்ட 31 மூலிகைகளை இணைத்துள்ளோம். அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் குறிப்பிட்டுள்ளோம், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan -  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201718:58:35 IST Report Abuse
Venkatesan How much
Rate this:
Share this comment
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
29-டிச-201715:34:24 IST Report Abuse
R.SUGUMAR வாழ்த்துக்கள் திரு என்.முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு .....மேலும் பல பொது நல சேவை தொடர கடவுள் அருள் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்....
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
29-டிச-201710:42:59 IST Report Abuse
ushadevan பயன் தரும் விசஷே, விஷயமுள்ள தகவல் களளஞ்சியம்.புதுமை தொடரட்டும் பாராட்டுக்கள.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X