தொடர் குண்டு வெடிப்பு : ஆப்கனில் 40 பேர் பலி | Dinamalar

தொடர் குண்டு வெடிப்பு : ஆப்கனில் 40 பேர் பலி

Added : டிச 29, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காபூல்: ஆப்கானிஸ்தானில், அடுத்தடுத்து குண்டு வெடித்ததில், 40 பேர் உடல் சிதறி இறந்தனர்; ௩௦ பேர் படுகாயம் அடைந்தனர் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, ஆப்கன் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து, தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் காபூலில் உள்ள, 'ஷியாட் டெபியான்' கலாசார மையத்தில், ஆப்கானிஸ்தான் மீது, ரஷ்யா படையெடுத்த, ௩௮ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள், அலறியடித்து ஓடினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் இரண்டு குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி, 40 பேர் இறந்தனர். மேலும், ௩௦ பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்; சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர், நஸ்ரத் ரகிமி கூறுகையில், ''இந்தத் தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X