பெனாசிரை கொல்ல பின்லேடன் சதி : தெரிந்தும் அமைதி காத்த பாக்., அரசு| Dinamalar

பெனாசிரை கொல்ல பின்லேடன் சதி : தெரிந்தும் அமைதி காத்த பாக்., அரசு

Added : டிச 29, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்., முன்னாள் பிரதமர், பெனாசிர் புட்டோவை கொல்ல, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவன், பின்லேடன் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரிந்தும், பாக்., அரசு அமைதி காத்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில், 2008ல், பார்லி., தேர்தல் நடந்தது. பாகிஸ்தானில் அப்போது, முஷாரப் தலைமையில், சர்வாதிகார ஆட்சி நடந்தது. பாக்., மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான, பெனாசிர் புட்டோ, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 2007 டிச., 27ல், ராவல்பிண்டியில், அவர் பிரசாரம் செய்த போது, குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். பெனாசிர் இறந்து, 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஒசாமா பின்லேடன் என, தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, பாக்., பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்தி:பெனாசிரை கொல்ல சதித் திட்டம் தீட்டியவன், அல் - குவைதா தலைவன், ஒசாமா பின்லேடன். இந்த சதியை நிறைவேற்றவே, அவன், தன் இருப்பிடத்தை ஆப்கனுக்கு மாற்றினான். எப்போது, என்ன செய்ய வேண்டும் என, அவன், பயங்கரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வந்தான்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி ஒருவனுக்கு, பின்லேடன் அனுப்பிய கடிதம் மூலம், இதை, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., கண்டுபிடித்து, உள்துறை அமைச்சகத்துக்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்துக்கு, 2007 டிச., 19ல், ஐ.எஸ்.ஐ., அனுப்பிய கடிதத்தில், 'முஷாரப் மற்றும் பெனாசிரை கொல்ல, பின்லேடன் சதித் திட்டம் தீட்டி உள்ளான். இதற்காக அவன், இருவரை பயன்படுத்த முடிவு செய்துள்ளான். டிச., 22ல் இருந்து, இதற்கான பணிகள் நடக்க
உள்ளன' என, கூறப்பட்டிருந்தது. ஆனால், பெனாசிரின் பாதுகாப்பை பலப்படுத்த, அப்போதைய, முஷாரப் தலைமையிலான அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
29-டிச-201708:15:48 IST Report Abuse
Nalam Virumbi இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X