பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு கதறிய இன்ஸ்பெக்டர் முனிசேகர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு கதறிய இன்ஸ்பெக்டர் முனிசேகர்

Added : டிச 29, 2017 | கருத்துகள் (25)
Advertisement
பெரியபாண்டியன் மனைவி பானுரேகா, periyapandian wife Banurega, இன்ஸ்பெக்டர் முனிசேகர்,Inspector Munischer,  ராஜாஸ்தான்,Rajasthan,  மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் , Madharavayal Inspector Periyapandian,கொளத்துார் இன்ஸ்பெக்டர்,Kolathur Inspector, பெரியபாண்டியன்,Periyapandian,  பானுரேகா, Banurega,

திருநெல்வேலி: ராஜாஸ்தானில் கொள்ளையரிடம் சிக்கி துப்பாக்கிசூட்டில் பலியான மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகாவை அந்த குழுவில் இடம்பெற்ற போலீசார் சந்தித்தனர். இன்ஸ்பெக்டர் முனிசேகர் பானுரேகாவிடம் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை தேடி ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திற்கு, சென்னை போலீசார் டிச.,8 ல் சென்றனர். டிச.,14 இரவில் கொள்ளையர்கள் மறைந்திருந்த செங்கல்சூளைக்குள் போலீசார் புகுந்தனர். அப்போது கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் நடந்த மோதலில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுடப்பட்டு பலியானதாக தகவல் வெளியானது. 'உடன் சென்ற கொளத்துார் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் சுடப்பட்டு பெரியபாண்டியன் இறந்தார்' என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி சாலைப் புதுாரில் பூர்வீக வீட்டில் தங்கியுள்ள இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, இதுகுறித்து சில கருத்துக்களை வெளியிட்டார். ''எனது கணவருக்கும், இன்ஸ்பெக்டர் முனிசேகருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. தேடுதல் குழுவில் போலீசாரை தேர்வு செய்ததே என் கணவர் தான். அவரது இறப்பில் உண்மை நிலையை தெரிவிக்கவேண்டும்,'' என தெரிவித்தார். இந்நிலையில் டிச.,17ல் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் குழுவில் இடம்பெற்ற போலீசார் சாலைப்புதுாரில் உள்ள பானுரேகாவை சந்தித்தனர்.

இதுகுறித்து பானுரேகா கூறியதாவது: 'ராஜஸ்தானில் நடந்த சம்பவம் குறித்து அங்கு சென்றவர்கள் யாராவது உண்மையை தெரிவிக்க வேண்டும்' என போலீஸ் கமிஷனரிடம் கேட்டிருந்தோம். அதன்படி இன்ஸ்பெக்டர் முனிசேகரும், இரண்டு போலீசாரும் டிச.,17 இரவு 11:00 மணிக்கு வந்தனர். அங்கு நடந்தவற்றை விளக்கினர். முனிசேகர் என்னிடம், 'செங்கல்சூளையில் மூன்றுபேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சென்றோம். ஆனால், அங்கு பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

பெரியபாண்டியன் முதலில் நுழைந்ததால் அவர் மீது கற்களாலும், கட்டையாலும் தாக்கினர். அவர் கொள்ளையரிடம் சிக்கிக் கொண்டார். எனக்கும் முகத்தில் கல் தாக்கி ரத்தம் கொட்டியது. குற்றவாளிகள் மீது துப்பாக்கியால் சுட்டேன். கொள்ளை கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பின், நாங்கள் உள்ளே சென்று பெரியபாண்டியனை மீட்டோம். அப்போது அவர், 'தவறுதலாக என் மீது சுட்டுவிட்டீர்கள் முனி' என்றார். மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம்; ஆனால் இறந்துவிட்டார்' என கூறினார். அதற்காக என்னிடம் கண்ணீர் விட்டு கதறி முனி சேகர் மன்னிப்பு கேட்டார். இவ்வாறு பானுரேகா கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
04-ஜன-201822:21:53 IST Report Abuse
தாமரை நமது தமிழக போலீசார் கொலைகாரனையும் பெரிய கொள்ளைக்காரனையும் மாமூல் வாங்கிக் கொண்டு தப்பிக்க விடுவார்கள்.கடைசியில் ஹெல்மெட் போடாதவனை ஓடி ஓடிப் பிடித்து வசூல் செய்வார்கள். இந்தப் போலீசை கொள்ளையரைப் பிடிக்க அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்.. இதில் என்ன கொடுமையின்னா கூட வேலைபார்க்குற போலீசையே கொன்னுபோட்டார்கள் என்றால் தமிழக போலீசாரின் திறமையை எப்படி மெச்சினாலும் தகும்.
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
04-ஜன-201803:21:23 IST Report Abuse
.Dr.A.Joseph இவர் உண்மையினை மறைத்தது தவறு. தாமாக பதவியிலிருந்து விலகுவது நல்லது. அல்லது இத்தனை நாள் மறைத்தது ஏன்? மறைக்க சொன்னது யார்? குற்றவாளிகள் மீது கூட்டத்தோடு கூட்டமாக பழியை போட்டு விட்டு தப்புவதற்க்கு திட்டம் தீட்டி தந்த பெருந்தலைகள் யார் என போட்டு உடையுங்கள்.பதவியில் தொடராதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
29-டிச-201718:13:59 IST Report Abuse
Somiah M தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது .முனிசேகர் செய்தது எது என்பது அவரது மன சாட்சிக்கு தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-டிச-201718:01:21 IST Report Abuse
தமிழ்வேல் துப்பாக்கிகள் இருந்தும் கல்லுக்கு எதிரே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை...
Rate this:
Share this comment
Cancel
K.Ramachandran - Chennai,இந்தியா
29-டிச-201716:07:50 IST Report Abuse
K.Ramachandran Their higher officials like SPs and DIGs should have guided them in planning the operation as it is done in all cases of terrorists and high profile criminals. Why, even the arrest of Ramkumar (Swathi murderer) was meticuluousy planned at the senior level and uted perfectly by the ground level officers. The earlier capture of terrorists Panna Ismail (?) , etc., at Andhra by TN police also was well planned. The top police officials are those responsible for the sad demise of this able officer.
Rate this:
Share this comment
Cancel
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
29-டிச-201715:41:40 IST Report Abuse
எமன் பாரத பிரதமர் கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என ஆராய்ச்சி செய்த அகூஜா, அந்த கொள்ளையர்களை சரணடைய கோரி நிர்பந்திக்காததேனோ?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-டிச-201714:49:33 IST Report Abuse
Pasupathi Subbian விசாரணை நடத்துவது வழக்கமான ஒன்று. என்ன இந்த உண்மையை அன்றே திரு முனி அவர்கள் கூறி இருக்கலாம் இத்தனை நாளாக இந்த உண்மையை வெளியிடாமல் இருக்க , மேலதிகாரிகள் பற்பல வேலைகளை செய்துள்ளனர். மறைந்த திரு பாண்டியின்மேல் பற்பல குற்றசாட்டுகளை சுமத்தியதும் அவர்கள் தான். ஓரு எதிர்பாராத நிகழ்வை , பெரும் பிரச்சனை ஆக மாற்றிய பெருமை அவர்களையே சாரும்.
Rate this:
Share this comment
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
29-டிச-201713:14:08 IST Report Abuse
Nancy நம்பிட்டொம்
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
29-டிச-201713:08:40 IST Report Abuse
TamilArasan அட பாவிகளா இதுக்குள்ள சில குள்ளநரிகள் மோடியை மற்றும் மொத்த ராஜஸ்தானி மக்களை மற்றும் மொத்த இந்தியாவும் தமிழர்களுக்கு எதிராய் இருப்பது போன்று ஒப்பாரி வைத்தார்கள் அவர்களை எல்லாம் பிடித்து முனி சேகர் சார் கிட்ட கொடுத்து பொலி போட சொல்லவேண்டும்... இது போன்ற தவறுகள் பணியில் பல முறை பல நாடுகளில் நடந்துள்ளது ஆனால் முணிசேகர் செய்த தவறு இத்தனை நாள் அதை மறைத்ததுதான்...
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
29-டிச-201712:33:37 IST Report Abuse
Arivu Nambi உண்மை கண்டறியும் பரிசோதனை செய்யவேண்டும் ,உண்மையில் முனி தமது பணியாக சுட்டாரா அல்லது பாண்டியனுக்கு சனியாக சுட்டாரா என்பதை கண்டறிய வேண்டும் . அப்போதுதான் , அமெரிக்கா பாணியில் friendly fire என்று எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதை முடிவே செய்யமுடியும் .அதுவரை முனியை நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் பாண்டியனின் முகம் சனியை கூட்டிச்சென்றது போல தெரியவில்லை . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை