வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு

Updated : டிச 29, 2017 | Added : டிச 29, 2017 | கருத்துகள் (8)
Advertisement

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர்.


ராப்பத்து உற்சவம்:

மார்கழி மாதம் மூன்றாம் நாள், (கடந்த 18ம் தேதி) முதல், ‛பகல் பத்து' உற்சவம் துவங்கியது. நேற்றுடன் அது நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்நாளில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.

சொர்க்க வாசல் திறப்பு


சொர்க்கவாசல்:

மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளை பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அதனால் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.


பக்தி பரவசம்:

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில், உள்ளிட்ட அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று(29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான மக்கள் பக்திப் பரவசத்துடனும், ‛கோவிந்தா.. கோவிந்தா' என பரவசத்துடனும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
29-டிச-201712:44:10 IST Report Abuse
Snake Babu ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் என்பது என்னவென்றால் தன்னிலிருந்து தசேந்திரியங்களின் வழியாய் வெளியினுள்ளில் பரவுகின்ற சக்தியைத் தன்னிலேயே ஒன்றாக்கி நிறுத்துவதாகும். அதாவது கண்களால் பார்த்து அறிவதும், செவிகளால் கேட்டு அறிவதும், மூக்கினால் முகர்ந்து அறிவதும், நாவினால் ருசித்து அறிவதும், தோலினால் தொட்டு அறிவதும், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் இவற்றினுடைய தொழில்களை அறிவதுமாகிய மனோசக்தியைத் தன்னிலேயே ஒன்றாக்கி நிறுத்துவது ஏகாதசி விரதம் ஆகும். தன்னிலேயே நிறுத்தினால் பரமபதம் பிரம்மம் பாதம் கிடைக்கும். அனைவருக்கும் ஏகாதசி விரத வாழ்த்துக்கள். நன்றி வாசியோகம். நன்றி வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
29-டிச-201711:23:24 IST Report Abuse
N.Purushothaman கோவிந்தா ...கோவிந்தா...
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
29-டிச-201710:06:28 IST Report Abuse
Rajan இந்த சொர்க வாசல் திறப்பு., நம் மாநில மக்களுக்கு நன்மை விளைவிப்பதாக இருக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel
karthi keyan - Chennai,இந்தியா
29-டிச-201709:47:38 IST Report Abuse
karthi keyan சொர்க்க வாசல் என்ற உபயோகம் தவறானது. சொர்க்கமும் வைகுண்டமும் ஒன்றல்ல, வைகுண்ட வாசல் அல்லது பரமபத வாசல் என்றே அழைக்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
29-டிச-201709:07:47 IST Report Abuse
VigneshKumar jai Sri ram
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
29-டிச-201707:38:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஜெயா டிவியில் ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறக்கும் வைபவம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ரெங்கா, ரெங்கா, ரெங்கா..
Rate this:
Share this comment
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
29-டிச-201709:00:26 IST Report Abuse
Loganathan Kuttuvaபொதிகை டிவியிலும் சிறப்பாக ஒளி பரப்பப்பட்டது. கூடுதலாக மும்பை அஹோபிலமடம் கோயில் பரமபத வாசல் திறக்கும் விழாவையும் காட்டினார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
29-டிச-201706:38:40 IST Report Abuse
Tamizhan kanchi ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராம ஜெயம் ஶ்ரீராம ஜெயம் ஶ்ரீராம ஜெயம் ஶ்ரீராம ஜெயம்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை