India hatching conspiracies against CPEC: Pak | இந்தியா சதி: பாக்., புலம்பல்| Dinamalar

இந்தியா சதி: பாக்., புலம்பல்

Added : டிச 29, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சீனா, China,பாகிஸ்தான்,Pakistan, இந்தியா, India, அமெரிக்கா, America, பயங்கரவாதம், terrorism,  பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இக்பால் ,Pakistan Home Minister Iqbal,

கராச்சி: சீனா- பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக இந்தியா சதி செய்து வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இக்பால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குயிட்டா நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனா -பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை திட்டத்தை தோல்வியடைய செய்ய பாகிஸ்தானின் எதிரிகள் சதி திட்டம் தீட்டி வருகின்றனர். இந்த சதியை இந்தியா தீட்டி வருகிறது. ஆனால், மக்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் அந்த சதியை முறியடிக்கும்.

தனது சதி செயலுக்கு ஆப்கானிஸ்தானை இந்தியா பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.அமெரிக்காவும், எங்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செய்த தியாகத்தை அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
30-டிச-201705:22:31 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சீனா பாகிஸ்தானை விட்டு கொடுக்காது, ஆனால் மேற்கு நோக்கி மண்டிப்போடும் பாகிஸ்தானியர்கள், இனி கிழக்கு நோக்கி மண்டிபோட்டு செய்யும் வேலைகளை சீனா தெளிவாக செய்து வருவது இஃபால் போன்றோரின் பேச்சு மூலம் தெளிவடைகிறது, முந்தாநேத்து அமெரிக்க பக்கத்துக்கு நாடு, நேற்று இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் நோக்கில் ஹம்பாந்தோட்டை, இன்று பாகிஸ்தான், பார்ப்போம் சீனாவின் ராஜதந்திரம் செல்லுபடியாகிறதா, இல்லை பாகிஸ்தானியர்கள் ராஜ தந்திரமா என்று
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-டிச-201723:00:14 IST Report Abuse
மலரின் மகள் உள்நாட்டு கட்டமைப்பில் வெளிநாட்டினரின் முதலீடு என்பது கந்துவட்டி வாங்கியதற்கு சமம். அதிலும் சீனாவின் முதலீடு என்பது அதிகாரத்தின் உச்சத்தில் இருப்போர் கொலைகார கும்பல் மூலமாக கந்து வட்டி கொடுப்பவர்கள் போலத்தான் இருக்கும். சிலருக்கு பட்டறிவு தான் ஏற்பார்கள். பாவமாக இருக்கிறது அவர்கள் நிலை. சீனர்கள் தங்களின் தயாரிப்புகளில் தரத்தை உயர்த்தி விட்டிருக்கிறார்கள் என்பது நிஜம். இரண்டு வேறு வகையான தயாரிப்புகள் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒன்று பயன்படுத்தி குறுகிய காலத்தில் தூர ஏறிட்ன்ஹுவிடுவது, மற்றது நீண்ட கள்ள பயனுக்கு என்று. இரண்டிலும் அவர்கள் சிறப்பாக முன்னேறி இருக்கிறார்கள். அவர்கள் தருகின்ற குறைந்த விலைக்கு அதே தரத்திலான பொருட்களை மற்றவர்களால் தரவே முடியாது என்று ஆகிவிட்டது. அவர்களின் வியாபார சந்தையாக தான் மற்ற தேசங்கள் மாறும். பாகிஸ்தானியர்களுக்கான அனைத்து பொருட்களையும் சீனர்கள் தான் தயாரித்து தருவார்கள். அந்த விலைக்கு உள்ளூர் உற்பத்தி ஆளர்களால் தரமுடியாது. போட்டியில் அவர்கள் தானாகவே வெளியேறி அவர்கள் தொழில் மறைந்து விடும். விளைவு வாங்குவது மட்டும் தான். செலவு செய்வது மட்டும் தான். வரவு என்பது இருக்காது. அரசு துறை சார்ந்தோருக்கு மாத சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் தான் சமாளிக்க முடியும், மற்றவர்கள் என்ன செய்வது. தொழில் இழந்து வேறு வழியின்றி வெளி நாடுகளில் கூலி தொழிலார்களாக செல்லவேண்டும். மிக குறைந்த கூலிக்கு இவர்கள் சீன கம்பனிகளுக்கு இவர்கள் வேலை செய்ய வேண்டி வரும். பத்து ஆண்டுகளில் பாதிப்பு தெரிய வந்து இருப்பது ஆண்டுகளில் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இந்திய அரசும் பாடம் படித்து கொள்ளவேண்டும். டீசல் பெட்ரோல் விலையின் அனுகூலத்தை தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியாளர்களுக்கு தராமல் அரசு செய்த மிகப்பெரிய தவறு நம்முடைய தொழிற் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனர்களை விட நாம் குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்துவருகிறோம். பூகோள அனுகூலத்தால். ஆனால் உருப்படியாக பரவலாக வரி வசூலிக்கும் முறையாக பெட்ரோலை டீசலை அரசு நாடுவதால், விலையை குறைப்பதே இல்லை. விளைவுகளை பற்றி அவர்கள் கவலை படுவதே இல்லை. என்ன செய்வது. இந்திய அரசியலாளர்களை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது.
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
29-டிச-201722:33:58 IST Report Abuse
 ஈரோடுசிவா சீனகம்யூனிஸ்ட் கபோதிகளும் ... பாக்கிஸ் பயங்கரவாதிகளும் சேர்ந்து வந்தாலும் இந்தியாவை ஒண்ணும் முடியாது ... சீனாக்காரனுக்கு திரும்புன பக்கமெல்லாம் செக் வெச்சுட்டாரு மோடி ... பாக்கிய பீஸ் பிடுங்கி விட்டுட்டாரு ... புலம்புறானுக ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X