தினகரன் வெற்றி எப்படி?: உளவுத்துறை ரிப்போர்ட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் வெற்றி எப்படி?: உளவுத்துறை ரிப்போர்ட்

Updated : டிச 29, 2017 | Added : டிச 29, 2017 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஆர்கே நகர் இடைத்தேர்தல்,RK nagar Election, தினகரன், Dinakaran, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,உளவுத்துறை, Intelligence, அமைச்சர்கள், Ministers, அ.தி.மு.க.,AIADMK,  மதுசூதனன்,madhusudhanan , வாக்காளர்கள் , Voters,தி.மு.க.,DMK,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தரப்பில், வாக்காளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட பின்னும், அக்கட்சியின் வேட்பாளர் மதுசூதனன், தோல்வி அடைந்திருக்கிறார். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என, உளவுத்துறை போலீசாரிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளனர்.
அதன்படி, ஆர்.கே.நகர் தோல்விக்கான காரணங்களை அடுக்கி, உளவுத்துறை போலீசார், தமிழக ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
அதில் சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள்:
* மூன்று மாதங்களுக்கு முன், தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க.,வின் அனைத்து சக்திகளும் தொப்பி சின்னத்தில் ஓட்டு கேட்டனர். கூடவே, அவருக்காக 4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மக்களிடம் கொடுத்தனர். இது ஆர்.கே.நகர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் தினகரனுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
*மூன்று மாதங்களுக்கு முன், தினகரனுக்கு ஆதரவாக பேசியவர்கள், இப்போது எதிர்ப்பாக பேசுவதோடு, தினகரனை எதிர்த்து அப்போதும் போட்டியிட்ட மதுசூதனனுக்கு எதிர்ப்பாக பேசி விட்டு, தற்போது, அவரை ஆதரித்து பேசுவதை மக்கள் விரும்பவில்லை.
*ஓட்டுக்காக 6 ஆயிரம் ரூபாய் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து விட்டோம் என்ற நினைப்பில், அ.தி.மு.க.,வினர் பலரும் ஜெயித்து விட்டோம் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். கடைசி கட்டங்களில், அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வின் நிர்வாகிகள் பலரும், முனைப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
*தேர்தல் நெருக்கத்தில் கூட, அமைச்சர்கள் பலரும், கோட்டையிலும், வீடுகளிலும் அமர்ந்து வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். சில அமைச்சர்கள் கடைசி வரை, ஆர்.கே.நகர் தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்காமல் இருந்து விட்டனர்.
*அதே நேரம், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, வெளியூர் ஆதரவாளர்களை அழைத்து வந்து, ஆர்.கே.நகர் வாக்காளர்களையும், அவர்கள் தொடர்புடையவர்களையும் சந்தித்து பேசியதோடு, அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, மக்களை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அ.தி.மு.க.,வைப் போல மொத்தமாக பணம், வாக்காளர்களுக்கு கொடுக்கவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக செலவழித்துள்ளனர்.
*பா.ஜ.,வோடு தீவிர அனுசரணையில் இருப்பது போல காட்டிக் கொண்டது, அ.தி.மு.க.,வுக்கு பலவீனத்தை, வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கி விட்டது.
*பா.ஜ.,வை வேகமாக; தைரியமாக எதிர்க்கும் ஒரே நபர் தினகரன் என மக்கள் நினைத்தனர்.
*முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை வீழ்த்த வேண்டும் என்ற துடிப்பில் இருந்த தி.மு.க.,வினரை சாதுர்யமாக அணுகிய தினகரன் தரப்பினர், 'நீங்கள் வெற்றி பெறுவதால், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. தினகரன் வெற்றி பெற்றால் மட்டுமே, தமிழக அரசு கவிழும். அதன் பின், பொதுத் தேர்தல் வரும். பலவீனமான எடப்பாடியையும்; பன்னீரையும், தி.மு.க., வீழ்த்தி ஆட்சிக்கு வந்து விடலாம்' என சொல்லி தூபம் போட்டதை நம்பி, தி.மு.க.,வினர் பலரே, தினகரனுக்கு ஓட்டு கேட்டதும், ஆர்.கே.நகரில் நடந்துள்ளது.
*தொகுதியின் பல இடங்களில், தி.மு.க.,வின் பெரும் தலைகள், தொண்டர்கள் என பலரையும், பணத்தால் வீழ்த்தி, தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைத்ததிலும், தி.மு.க., ஓட்டு சரிந்து, அது தினகரனுக்கு போனதும் நடந்துள்ளது.
*கடந்த முறை தினகரனுக்காக ஓட்டு கேட்டபோது, தீவிரமாக இருந்து செயல்பட்ட அமைச்சர்கள் பலரும், ஆர்.கே.நகர் வாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுப்போம் என வாக்குறுதி அளித்ததோடு, வீடு பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பெற்றனர். ஆனால், இந்த முறை தேர்தலின் போது, அது தொடர்பாக எதையுமே, அமைச்சர்கள் தரப்பில் இருந்து செய்யவில்லை.
*எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வாழ்வா... சாவா… போராட்டத்தில் தினகரன் இருந்து பணியாற்றிய வேகம், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களிடமும் இல்லை. கட்சியினரிடமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என, அறிக்கையை ஆட்சியாளர்கள் புறம் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-ஜன-201813:19:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கட்சியை, மானத்தை, தமிழ்நாட்டை எல்லாம் டெல்லிக்கு அடகு வைத்து இந்த சுடாத இரட்டை குழல் தொங்கு துப்பாக்கி கூட்டம் இரட்டை இலையை படாதபாடுபட்டு வாங்கினா, அதை கிழித்து தோரணமாக தொங்க விட்டது இந்த குக்கர். எம்ஜியாரின் இரட்டை இலை, ஜெயலலிதாவின் இரட்டை இலை என்ற மாயையை கிழித்தெறிந்து விட்டது இந்த தேர்தல். அதன் பயங்கரத்தை அடிமைகள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. முட்டாள்களுக்கு இனி எல்லாமே இறங்கு முகம் தான். இதை தெரிந்து கொள்ள சாதாரண அறிவு இருந்தால் போதும். ஒண்ணுக்கும் உதவாத உளவுதுறை தேவையில்லை. தேர்தலுக்கு முன் தினகரன் இரட்டை இலையை எதிர்ப்பதால் வெறும் 3% வாக்குகள் தான் அவருக்கு கிடைக்கும் என்று பேத்திய பைத்தியங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04-ஜன-201823:57:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதே வக்கத்த உளவுத்துறை தான் அதிமுகவுக்கு 59% வரும்ன்னும் சொன்னது. இவனுங்களையெல்லாம் நம்பி.. கிரிமினல்களை பிடிங்கடா மொதல்லே. எவன் கார்ட்டூன் வரைஞ்சான், எவன் முதல்வர் பைக்குள்ளே மோடி படத்தை மார்பிங் பண்ணான்ன்னு கண்ணுடுபிடிக்க அலையிறதை விட்டுட்டு மணல் மாபியா, ஹைவேஸ் கொள்ளைக்காரன் இவங்களுக்கு கமிஷன் கைமாறும், சீப்பாக சுற்றியுள்ள லாட்ஜுகளில் ரெயிடு விடுங்கப்பா.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-ஜன-201807:24:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்"சீப்பாக சுற்றியுள்ள லாட்ஜுகளில்" - சேப்பாக்கை சுற்றியுள்ள லாட்ஜுகளில்...
Rate this:
Share this comment
Cancel
Ram Babu - Trivandrum,இந்தியா
03-ஜன-201817:30:46 IST Report Abuse
Ram Babu பணம் பத்தாயிரம் ரூபாய் குடுத்தால் வோட்டு போடாமல் யார் இருப்பார்? கட்சியாவது கொள்கையாவது .
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
30-டிச-201719:42:04 IST Report Abuse
Tamizhan kanchi வாக்கு பதிவுக்கு முன் எங்ளுக்கும் திமுக வுக்கும் தான் நேரடி போட்டி என்று தினகரன் கூறியதை மறுத்து கூறாமல் பெருமையாக (அதிமுக அழிந்ததுஎன்ற ஆசையில் ) நினைத்தார் ஸ்டாலின்.. திமுகவினர் திமுகவை விட அதிக பலன் தரும் தினகரனை ஆதரித்து வெற்றிபெற செய்தனர்....
Rate this:
Share this comment
Cancel
sivanesan - nagarkoil,இந்தியா
30-டிச-201716:18:58 IST Report Abuse
sivanesan அப்படியே உளவுத்துறை பிஜேபியின் அந்த 1511 வாக்குகள் எங்கே போயிற்று என்று கண்டு பிடித்து இருக்கலாமே....
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
30-டிச-201708:54:15 IST Report Abuse
Tamizhan kanchi அதிமுக வினர் தினகரனை ஆதரித்தனர் எனில் அவர் அந்த கட்சியிலிருந்து வெளி வந்தவர் மற்றும் பண ஆசை.. திமுகவினர் முழுக்க முழுக்க இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்பட கட்சி உறுப்பினர்கள் காலம் காலமாக வாக்கு அளித்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பணத்தால் விலை போனது அக்கட்சியின் அழிவை காட்டுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
30-டிச-201706:59:03 IST Report Abuse
Karunan சர்ப்பம் அழகானது ...படமும் அழகானது ..படமெடுத்தாடும் அழகும் அழகானது ..அத்தகைய நல்ல சர்பத்தை எவரேனும் தீண்டி நட்புகொள்வரோ?தினகரனின் உடல் மொழி சர்பத்தை நினைவுபடுத்தும் ...பேச்சும் செயலும் நாடகம் ...நன்றாகவே மீடியா முன் நடிக்கிறான் ..
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
30-டிச-201705:15:27 IST Report Abuse
Pannadai Pandian இந்த தோல்விக்கு முக்கிய காரணம் மத்தியில் ஆளும் பாஜக ரைடு, ஜெயில் என்று பல வகைகளிலும் தினகரனுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் தொந்தரவு தந்தது, அதனை மக்கள் வெறுத்தனர்.
Rate this:
Share this comment
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜன-201801:47:32 IST Report Abuse
Krishnaபணம் தான் முக்கிய காரணம். சசிகலா குடும்பத்தை குறை சொல்லியவர்கள் இப்பொழுது ரெய்டுக்காக வருத்தப்படுகிறாரகள். இது நல்ல நாடு. எப்போது திருந்தும்....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-ஜன-201807:26:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கர்நாடகா செல்லில் இருக்கும் சசிகலாவின் சீன ஸ்லீப்பர் செல் தான் . இது என்னிக்குமே சதிகலாவை குறை சொல்லாது....
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
30-டிச-201704:16:40 IST Report Abuse
Sanny அதுசரி 20 ரூபாய் டோக்கன் என்று செய்தி அடிபடுதே, அதுதான் வெற்றிக்கு காரணம் என்றும், இப்போ அதுதான் பிரச்சனையென்றும் சொல்லப்படுதே,
Rate this:
Share this comment
Cancel
Thirumalai Ayyathurai - chennai,இந்தியா
30-டிச-201701:08:43 IST Report Abuse
Thirumalai Ayyathurai அதிமுக-வின் ஒரு பிரிவு மதுசூதனனைத் தோற்கடிக்கச் செய்த சூழ்ச்சிகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தெரிந்தால், துணை முதல்வர் வருந்துவாரே என்று உளவுத்துறை நினைத்திருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை