இந்திய வம்சாவளி கவுன்சிலருக்கு பிரிட்டன் ராணி பாராட்டு| Dinamalar

இந்திய வம்சாவளி கவுன்சிலருக்கு பிரிட்டன் ராணி பாராட்டு

Updated : டிச 30, 2017 | Added : டிச 30, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்திய வம்சாவளி,Indian origin, பிரிட்டன் , Britain,ராணி எலிசபெத் ,Queen Elizabeth, ரஞ்சித் தீர்,Ranjith dhir, கவுன்சிலர்,Councilor, ராணி எலிசபெத் விருது,Queen Elizabeth Award,

லண்டன்: பிரிட்டன் அரசுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுன்சிலருக்கு, ராணி எலிசபெத் பாராட்டு தெரிவித்து விருது வழங்கினார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிப்பவர், ரஞ்சித் தீர், 75. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், லண்டனின், ஈலிங் மாவட்டத்தில், 1982ம் ஆண்டில், முதல் முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், ௩௫ ஆண்டுகளில் நடந்த எட்டு உள்ளாட்சி தேர்தல்களிலும், அவர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், பல கமிட்டிகள், பள்ளி வாரியங்கள் மற்றும் பொது அமைப்புகளின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார். துணை மேயர் மற்றும் மேயராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான தீர்ப்பாயத்தின் உறுப்பினராகவும், நீதிபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.அரசுக்கு சிறப்பாக சேவை செய்து வருவதாக, ரஞ்சித் தீரை பாராட்டி, பிரிட்டன் ராணி, இரண்டாவது எலிசபெத், விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
30-டிச-201709:30:45 IST Report Abuse
R.SUGUMAR ரஞ்சித் தீர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்... இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த இவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை