தந்தையின் பிறந்தநாளன்று தம்பிக்கு கைகொடுத்த முகேஷ் அம்பானி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தந்தையின் பிறந்தநாளன்று தம்பிக்கு கைகொடுத்த முகேஷ் அம்பானி

Updated : டிச 30, 2017 | Added : டிச 30, 2017 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அனில் திருபாய் அம்பானி,Anil Dhirubhai Ambani, முகேஷ் அம்பானி,Mukesh Ambani, அனில் அம்பானி,Anil Ambani, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,Reliance Communications, தொலைதொடர்பு துறை,Department of Telecommunications, ஆர்ஜியோ, RJio,தந்தை பிறந்தநாள், Father Birthday,அனில்,Anil, முகேஷ், Mukesh,

புதுடில்லி : தனது தந்தையின் பிறந்தநாளன்று கடன் நெருக்கடியில் சிக்கி தவித்த தனது சகோதரர் அனில் அம்பானியின் 25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை கையகப்படுத்தி முகேஷ் அம்பானி உதவி செய்துள்ளார்.


தப்பித்தார் அனில்:

அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு அளித்த, 'கெடு' இந்தாண்டுடன் முடிவடைய உள்ளதை அடுத்து, கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள், திவால் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம், ரிலையன்ஸ் நிறுவனர், மறைந்த, அனில் திருபாய் அம்பானியின் 85வது பிறந்த நாள் விழாவில், ரிலையன்ஸ் கம்யூ., சொத்துக்களை, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கையகப்படுத்த உள்ளதாக, முகேஷ் அம்பானி தெரிவித்தார். இந்த திட்டம் மூலம், அனில் அம்பானி, பெரும் கடன் சுமையில் இருந்தும், கடன் மீட்பு நடவடிக்கைகளில் இருந்து மீண்டுள்ளார். முகேஷ் அம்பானியின் இந்நடவடிக்கைக்கு தொலைதொடர்பு சேவை துறை பாராட்டு தெரிவித்துள்ளது.


கைமாறும் சொத்து:

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின், 122.4 மெகாஹெர்ட்ஸ், '4ஜி' அகண்ட அலைவரிசை, 43,000 தொலைதொடர்பு கோபுரங்கள், 1.78 லட்சம் கி.மீ., கண்ணாடி நாரிழை கம்பிவட ஒருங்கிணைப்பு வசதி, 248 ஊடக சேவை ஒருங்கிணைப்பு முனையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள், இனி, 'ஆர்ஜியோ' வசம் வரும்.

Advertisement
வாசகர் கருத்து (42)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-டிச-201702:04:35 IST Report Abuse
Nallavan Nallavan இப்போ கைகொடுக்குறாரு.... சரிதான் .... ஆனா ஏற்கனவே அல்வா கொடுத்தாச்சே ....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-201717:05:26 IST Report Abuse
தமிழ்வேல் கடனை அடைப்பதற்கு சில சொத்துக்களை (கம்பெனி) விற்கப் போவதாக நேற்று அணில் கூறினார். அதை அவரது சகோதரரே வாங்கிக் கொண்டுள்ளார் அவ்வளவே.. (இல்லை என்றால் வேறு கைக்கு சென்றிருக்கும்).
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
30-டிச-201715:59:40 IST Report Abuse
V Gopalan Yesterday night (29-12-2017), the News 7 gave an elaborate history of late Shri Thirubai Ambani. Late Shri Ambani how he climbed and played a role with the Politicians especially the ruling party at Centre with late Smt Indira Gandhi. Auditor Shri Gurumurthy & Shri Arun Shourie how they were against the Reliance and once when Shri Shourie became a Minister helped a lot. Really, the persons who have business running with Crores of Rupees advice the Politicians and ultimately govern the country based. The information was so useful and the same way his sons are following the footstep of his fathers. Thagappanukku pillai thappamale pirandirukkirargal.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X