குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்புமான அங்கன்வாடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்புமான அங்கன்வாடி

Added : டிச 31, 2017 | கருத்துகள் (1)
Advertisement
குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்புமான அங்கன்வாடி

உடுமலை:குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்புமாய் கல்வி கற்றுக்கொடுப்பதோடு, கிளியும் மயிலும், கதை பேசிக்கொண்டிருக்கும் அழகிய சூழலில், குழந்தைகளின் உலகமாய் மாறி இருக்கிறது, பத்ரகாளியம்மன் லே-அவுட் அங்கன்வாடி மையம்,

திருப்பூர் மாவட்டத்தில், பல அங்கன்வாடி மையங்களின் கட்டமைப்புகள் மோசமான நிலையில்தான் உள்ளது. பல அங்கன்வாடிகளின் நிலையும் இதுதான். கழிப்பறை வசதியின்மை, ஒரே ஒரு அறை, அதிலும் அதன் சுற்றுச்சுவரின் மேல் பகுதியில் கம்பிகள் மட்டுமே பாதுகாப்பு வளையங்களாக இருப்பது, மழைக்காலத்தில் சாரல் நீர் வழிந்து நிரம்புவது, பல அவலங்கள் இன்னும் அங்கன்வாடி மையங்களில் தொடர்கிறது.


எடுத்துக்காட்டு மையம்



இந்நிலையிலிருந்து, மாறுபட்டு, அங்கன்வாடிகளுக்கு எடுத்துக்காட்டாய் மாறிக்கொண்டிருக்கிறது, உடுமலை பத்ரகாளியம்மன் லே-அவுட் அங்கன்வாடி மையம். குழந்தைகளை முழு நேரமும் பராமரிக்க முடியாமல், பொருளாதார சூழ்நிலையால் பல பெற்றோரும், அங்கன்வாடி மையங்களை நம்பி அனுப்புகின்றனர். இரண்டு முதல் மூன்று வயது வரை குழந்தைகள் அங்கன்வாடிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

சொற்களை தெளிவாகக்கூட கூற முடியாத மழலைகளை, பெற்றோருக்கு நிகரான அன்போடு பார்த்துக்கொள்ள வேண்டியவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள்.அவ்வாறு, குழந்தைகளை அரவணைப்பதிலும், அவர்களின் சுதந்திரத்தை அவர்களிடமே வழங்கியும், குழந்தைகளை பராமரிக்கின்றனர் அங்கிருக்கும் பணியாளர்கள்.
இந்த மையத்தில், 25 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். குழந்தைகள் விளையாடுவதற்கென, அங்கன்வாடி மையத்துக்குள்ளே, 'குட்டி', விளையாட்டு பூங்கா இருக்கிறது.சுவரில் ஓவியங்கள்பல வண்ணங்களில், குழந்தைகள் விளையாடும், சர்க்கஸ், ஊஞ்சல், சீசா விளையாட்டு என, எப்போதும் இங்கிருக்கும் குழந்தைகள் விளையாட்டில் 'பிசிதான்'. மையத்தின் சுவரில், வனத்தில் இருக்கும் வண்ண மயில், சேவல், மான், என விலங்குகள் ஓவியமாய் ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

விளையாடி 'போரடிக்கும்' குழந்தைகளுக்கு, கரடி மாமா பாட்டுகளை இசைத்து, ஆடல் கலையோடு கல்வியையும் கற்பிக்கின்றனர்.அங்கன்வாடி வளாகத்தில் வளர்ந்து நிற்கும் வண்ண மலர்களைப் போன்று, எப்போதும் சிரிப்பில் மலர்ந்தே உள்ளது அக்குழந்தைகளின் முகம். அரசின் சார்பில் ஐ.எஸ்.ஐ., தரசான்று பெற்றதோடு, மாதிரி அங்கன்வாடிக்கான முயற்சியிலும் களமிறங்கியுள்ளது இம்மையம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201712:24:57 IST Report Abuse
ushadevan மழலைகளின் மகிழ்ச்சிப் பூக்கள் கவலைகளை காணாமல் போக்கும்.நல்ல விஷயம். வாழ்த்துக்கள. அரும்புகளுக்கும் அரவணைப்பவர்களுக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை