நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு

Updated : ஜன 01, 2018 | Added : டிச 31, 2017 | கருத்துகள் (369)
Advertisement

சென்னை : நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக, நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து, போட்டோ எடுத்து வருகிறார். இன்றும் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
முன்னதாக ரசிகர்களிடம் பேசிய ரஜினி, ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ரசிகர்கள் கட்டுப்பாடுடன், அமைதியாக போட்டோ எடுத்து சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கட்டுப்பாடு மட்டும் இருந்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நான் பில்டப் கொடுக்கவில்லை. தானாக பில்டப் கொடுக்கப்பட்டது. எனக்கு அரசியலுக்கு வருவது பற்றிய பயம் இல்லை. மீடியாக்களை பார்த்து தான் பயம். பெரிய பெரியா ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள். நான் ஒரு குழந்தை. எப்படி பயப்படாமல் இருக்க முடியும். நான் எதை பேசினாலும் அதை விவாதம் ஆக்கி விடுகிறார்கள். பத்திரிக்கையாளர் சோ இருந்திருந்தால் எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கும்.


அரசியலுக்கு வருவது உறுதி :

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. அதை நான் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு பல மடங்கு நீங்கள் ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டீர்கள். பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. அப்படி நான் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் 1994 லேயே என்னை தேடி வந்தது. அப்போது வரதா பதவி ஆசை, 68 வயதில் எனக்கு வருமா? அப்படி ஆசைப்பட்டால் நான் பைத்தியக்காரன். நான் ஆன்மிகவாதி என சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவன்.


பதவி ஆசை இல்லை :

அரசியல் மிகவும் கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுபோய் உள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்து விட்டது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். இப்போது நான் என்னை வாழ வைத்த தெய்வங்களான மக்களுக்க நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறேன். அப்போதும் நான் வரவில்லை என்றால் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்ற குற்றஉணர்வு நான் சாகும் வரை எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
அனைத்தையும் மாற்ற வேண்டும், அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். விருப்பம். தமிழக மக்கள் அனைவரும் அதற்கு என் கூட இருக்க வேண்டும். அரசியல் கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவது சாதாரண விஷயம் இல்லை. நடுக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. கடவுள் அருள், மக்களின் நம்பிக்கை, அபிமானம், ஆதரவு, அன்பு இருந்தால் சாதிக்க முடியும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


முதலில் தயாராவோம் :அரசர்கள் அடுத்த நாட்டின் கஜானாவை கொள்ளை அடித்தார்கள். இப்போது ஜனநாயத்தின் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் சொந்த நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள். சிஸ்டத்தை மாற்றனும். எனக்கு தொண்டர்கள் வேணாம். காவலர்கள் வேணும். அவர்களின் உழைப்பால் ஆட்சி அமைந்தால் அரசிடம் இருந்து மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை, சலுகைகள் சேர செய்யும் காவலர்கள். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்டும் காவலர்கள் வேணும். அவர்களை கண்காணிக்கும் பிரஜையின் கண்காணிப்பாளர் தான் நான்.
பதிவு செய்யப்படாத மன்றங்களை ஒருங்கிணைக்கனும். ஒவ்வொரு பகுதியிலும் நமது மன்றம் இருக்கனும். கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவை. தயாராகும் வரை நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேச வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அறிக்கை விடவும், போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறுவோம். பிறகு நாம் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என கூறிவோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் நாமே பதவியை ராஜினாமா செய்து விட்டு போவோம்.

உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (369)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
07-ஜன-201820:37:43 IST Report Abuse
Ramachandran  Madambakkam மாற்றம் ஏற்படுத்துவதை மாற்ற யாராலும் முடியாது. மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். மக்கள் தற்போதைய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு இயக்கம் உருவாக வேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
SHANMUGA NATHAN ARUMUGAM - hidd,பஹ்ரைன்
06-ஜன-201812:46:11 IST Report Abuse
SHANMUGA NATHAN ARUMUGAM தலைவர் ராமையா பாட்டுல சொன்னமாரி ஊரு சுத்த பிளான் பண்ணிட்டாரு
Rate this:
Share this comment
Cancel
Venkatesvaran G - Chennai,இந்தியா
06-ஜன-201811:03:58 IST Report Abuse
Venkatesvaran G வா வரலாம் வா வல்லவா
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
04-ஜன-201815:24:19 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam ஆன்மிக வாதிகள் என யாரையும் அழைக்கலாம் புத்தர்/ ஏசு / கிருஷ்ணன் / அல்லா / பாபா.................என யார் யாரெல்லாம் இறைமீது நம்பிக்கைகொண்டு பிரதிபலனை எதிர்பார்காமல் தொண்டு செய்கிறார்களோ அவர்கள் ஆன்மிக வழியில் செயல் படுபவர்களாக கொள்ளப்படுவர். ரஜினி கூட அரசியலில் மக்களுக்கு தொண்டு செய்ய எந்த்த பலனையும் (கொள்ளை, லஞ்சம், விஞ்ஞான ஊழல் என...) எதிர்பாராமல் செயல் படுவார் என் நம்புவோம்
Rate this:
Share this comment
Cancel
Sadhana - madurai,இந்தியா
04-ஜன-201810:45:55 IST Report Abuse
Sadhana அரசியல் க்கு வருவதால் எந்த ஒரு மாற்றமும் வர போவது இல்லை ஆகவே அனைவரும் அவர்கள் வேலைகளை பாருங்கள் உங்கள் நேரங்களை வீண் செய்யாதீர்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
02-ஜன-201818:05:34 IST Report Abuse
Prakash JP ஆன்மீக அரசியல் புதுவரவு.. சோ ராமசாமி தான் ரஜினியின் அரசியல் வழிகாட்டியாம், குருவாம்.... சாகும்வரை ஈழ விடுதலையை, ஈழ போராளிகளை, தமிழ் மொழியின் வளர்ச்சியை கடுமையாக எதிர்த்தவர்தான் சோ.. திருக்குறளை சொல்லி ஆரம்பிக்காமல் பகவத்கீதையை சமத்கிருத்ததில் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பிப்பது ஏன்? இதுதான் ஆன்மீக அரசியலின் ஆரம்பமா?
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
06-ஜன-201817:18:32 IST Report Abuse
Sitaramen Varadarajanதமிழ் மொழியை ஆழ குழி தோண்டி புதைத்தது, இலங்கை தமிழர்களை காட்டிக்கொடுத்து அரசியல் லாபம் பெற்றது, எல்லாமே கட்டு மரம் என்று தெரியாதா. திருக்குறளை சொல்லி திருடி திருடி திருடி திருடி திருட்டு முன்னேற்ற கழகம் சாதித்ததை இனி தமிழக மக்கள் மறக்கவே மாட்டார்கள். காத்திருங்கள். காலம் வரும். திஹார் சிறை கதவுகள் திறக்கும். நீதியை அழித்து விடலாம். ஆதாரங்களை அழித்து விடலாம். மக்கள் மனதில் உள்ள மதிப்பு மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவர், வேறு எந்த தகுதியும் வேண்டாம். திருட்டு முன்னேற்ற கழகங்களை திராவிடம் கழகம் என்று பேசியே, பேசியே, பேசியே, பேசியே தமிழக மக்களை முட்டாளாக்கி மொடடை அடித்தது போதும்....
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
02-ஜன-201811:26:02 IST Report Abuse
partha பூச்சி, ஜெயாவையும் MGR யும் திட்டும்போதே தெரியவில்லையா அவர் மற்றைய திராவிட கொள்ளை கூட்டத்தை சேர்த்தவர் என்று
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
02-ஜன-201805:56:04 IST Report Abuse
Renga Naayagi அரசியல் கூட்டங்களுக்கு கால்ஷீட் காசு வாங்காம தருவாரா
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
02-ஜன-201804:26:34 IST Report Abuse
Ray இவர் படம் வெளியிடும்போது மற்ற எல்லா பட வெளியீடுகளை தள்ளிப் போட ஏற்பாடு செய்து கொள்வார் அதுபோல மற்ற கட்சிகள் இவருக்கு வழி விட்டு அரசியல் துறவறம் அறிவிக்கலாம் எதிராளி இளிச்ச வாயனாயிருந்தால் தம்பி சண்டப் ப்ரசண்டன்னு ஒரு சொலவடை உண்டே
Rate this:
Share this comment
Cancel
Raja USA - Newyork,யூ.எஸ்.ஏ
02-ஜன-201803:48:11 IST Report Abuse
Raja USA முக்காலமும் உணர்ந்த மூதறிஞர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு அவரது உரிமை. ஆனால் பொதுமக்களுக்கு அவர் எப்படி தொண்டாற்ற உள்ளார் என்பதற்கான திட்டவரைவு அறிக்கையை முதலில் வெளியிட வேண்டும். பொதுமக்களின் தலையாய பிரச்சினை லஞ்சம். ஏழையோ பணக்காரனோ ஐந்தாயிரம் எடுத்து வைத்தால்தான் பிணம் தகனமேடை ஏறும். அந்த சோகத்தோட போய் இறப்புச்சான்று வேணும்னு கேட்டா ஒரு ஆயிரம் வெட்டணும். செத்தவனோட வாரிசு சான்று வேணுமா ஒரு ஐயாயிரம் கொடுத்துட்டு விஏஒ, ஆர்ஐ, தாசில்தாரனு ஒருவாரம் அலையனும். அப்படி செத்தவன் பேர்ல இருக்கற ஓலைக்குடிசையை வாரிசு பேருக்கு மாத்தணும்னா, இன்னொரு ஐயாயிரம் வெட்டணும். இப்படி செத்தவன்கிட்டயே வாய்க்கரிசி கேட்கற வருவாய் துறை அதிகாரிகள கேட்டா அவுங்க சொல்ற பதில் "உங்ககிட்ட வாங்கற பணத்துல நாங்க ஆர்டிஓ, சப்-கலெக்டர், கலெக்டர், துறை சார்ந்த அமைச்சர், சின்னம்மா, பெரியம்மா (அல்லது தளபதி, தானை தலைவர்) எல்லோருக்கும் கப்பம் கட்டுறோம்" அப்படிம்பாங்க. மேற்சொன்ன உதாரணம் கோடியில் ஒன்று. சுடுகாட்டில் ஆரம்பித்து சென்னை கோட்டை வரை லஞ்சம் லஞ்சம் எதிலும் லஞ்சம். இப்படி புரையோடிய லஞ்சத்துக்கு ரஜினியின் தீர்வு என்ன, திட்டம் என்ன? புரையோடிய அரசு அலுவலர்களையும், காவல்துறையையும் எப்படி மீட்டு எடுக்க போகிறார்? அவருடைய மனைவியையும், மகள்களையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அவர், அவருடைய அரசியல் வாரிசுகளை/வட்டம்/மாவட்டங்களை எப்படி கட்டுப்படுத்த போகிறார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை