ஹேப்பி நியூ இயர் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்| Dinamalar

ஹேப்பி நியூ இயர் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்

Added : டிச 31, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஹேப்பி நியூ இயர் - ஸ்ரத்தா ஸ்ரீநாத்

திரையில் பார்த்தாலே பிடித்துப் போகும் தமிழ் சினிமாவின் புதுமுகம்... 'விக்ரம் வேதா', 'ரிச்சி' படத்திற்கு பின் இவருக்கு வெற்றிமுகம்... என, நடிப்பை நேசித்து கொண்டாடும் அழகிய தேவதை நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகிறார்...
* இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையா இருப்பதில்...முதலில் மலையாளத்தில் அறிமுகம் ஆனேன், அடுத்து கன்னடத்தில் 'யூ டர்ன்' படத்தில் நடித்தேன். அப்படியே இயக்குனர் மணிரத்னம் படம் கிடைத்து. இப்போ 'விக்ரம் வேதா' வெற்றியை கொண்டாடுகிறேன். இதில் நடித்த பின் தான் நான் அறியப்பட்டேன், நல்ல பெயர் கிடைத்தது. அதனால், 2017 எனக்கு நிஜமாகவே 'ஹேப்பி நியூ இயர்' ஆக இருந்தது.
* உங்கள் குடும்பம் ?அம்மா பள்ளி ஆசிரியை, அப்பா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, அப்புறம் என் செல்லமான அக்கா...
* உங்கள் நடிப்பில் அடுத்து ?தெலுங்கில் ரெண்டு படங்கள். அப்புறம் தமிழில் விஷாலுடன் ஒரு படம் நடிக்கிறேன்.
* நிவின்பாலியுடன் நடித்த அனுபவம்?தமிழில் என் முதல் படம் 'ரிச்சி' தான், அப்போ நான் புதுமுகம். ஆனாலும், எனக்கு உதவியா இருந்தார். செட்ல கொஞ்சம் அமைதியானவர். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளை பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்.
* மாதவன், விஜய் சேதுபதி ?மாதவன், விஜய் சேதுபதி கூட நடித்தது பெரிய அனுபவம். விஜய் சேதுபதி கடின உழைப்பாளி, கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார். மாதவனுக்கு பெரிய ரசிகை நான். இவங்க ரெண்டு பேருமே நடிப்பில் புலி தான்.
* உங்கள் ரோல் மாடல் ?நடிகைகளை பொறுத்தவரை சில ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் வரை பேர், புகழ், பணம் எல்லாம் கிடைத்து செட்டில் ஆகிடுவாங்க. ஆனால், நயன்தாரா இதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றவர். நடிப்புக்கு வயது ஒரு காரணம் இல்லை என்று நிரூபித்தவர். மொத்த படத்தையும் ஒரு ஹீரோயினால் நகர்த்தி கொண்டு செல்ல முடியும் என 'அறம்' படத்தில் நிரூபித்தவர், அவங்க தான் என் ரோல் மாடல்.
* நடிக்க விரும்பும் கேரக்டர்கள் ?நான் பண்ணும் ரோல் மக்களை போய் சேரணும். என் படங்களை பார்த்து நான் நிறைய தைரியமான ரோலில் நடிப்பதாக சொல்கின்றனர். எனக்கு வரும் படங்கள் எனக்கு பிடிக்கணும் அவ்ளோ தான்...

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X