இவாங்கா மாநாட்டில் மதுரைக்காரர்| Dinamalar

இவாங்கா மாநாட்டில் மதுரைக்காரர்

Added : டிச 31, 2017
Advertisement
இவாங்கா மாநாட்டில் மதுரைக்காரர்

நவ.28ம் தேதி, ஐதராபாத் நகரமே அல்லோகலப்பட்டது. அமெரிக்காவின் 'முதல் மகள்' (First Daughter) வருகிறார் என்றால் சும்மாவா? அமெரிக்க அதிபரே வந்தால் என்ன மதிப்பும், மரியாதையும் கிடைக்குமோ, அதே மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் இவாங்கா.

இவரும் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட ஐதராபாத் உலக தொழில் முனைவோர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது மத்திய அரசின் 'நிடி ஆயோக்' அமைப்பு. மற்ற மாநாடுகளுக்கும் இதற்கும் இருந்த முக்கிய வித்தியாசம், புதிய சிந்தனை, புதிய முனைப்பும் கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது தான். கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள், தங்கள் சிந்தனை, திட்டத்துடன் 'நிடி ஆயோக்'கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை பரிசீலித்து, இந்தியாவில் இருந்து 500 பேரை மட்டுமே அழைக்க முடிவு செய்தனர். அவர்களில் ஒருவராக அழைக்கப்பட்டவர் மதுரையை சேர்ந்த இளைஞர் சக்தி பிரனேஷ், 30. மங்கையர்க்கரசி கல்லுாரியின் நிர்வாகி. பி.இ., மற்றும் லண்டனில் எம்.பி.ஏ., படித்தவர். 'நிடி ஆயோக்'கிற்கு இவர் அளித்த திட்ட அறிக்கை தான், இவர் தேர்வு செய்யப்பட காரணம்.
இது பற்றி அவரே கூறுகிறார்: பெண்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் தருகிறார் இவாங்கா. நான் சமர்ப்பித்த திட்டமும் பெண்களை உள்ளடக்கியது தான். கல்லுாரி படிப்பை முடித்து, வேலை இல்லாமல் இருக்கும் பெண்களை விவசாயத்தின் பக்கம் திருப்புவதே திட்டம்.

இயற்கை வேளாண்மை, புதிய தொழில்நுட்பம், ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு மருந்து போன்றவற்றை கலந்து சொட்டு நீர்ப்பாசனம், ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் வயல்களை கண்காணித்து எங்கெங்கு நோய் தாக்கி உள்ளது, எங்கு நீர் பாயாமல் உள்ளது போன்றவற்றை கண்காணிப்பது... பயிர்களுக்கு எல்.இ.டி., விளக்கு மூலம் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, தேவையான அளவு மட்டுமே தருவது என வேளாண்மையை நவீனமாக்கி அதில் பெண்களுக்கு பயிற்சி தருவது... இதன் மூலம் பயன்படாமல் இருக்கும் நிலத்தைக் கூட பலன் தருவதாக ஆக்குவது... இது தான் திட்டத்தின் சாராம்சம்.

இத்திட்டம் பற்றி, மாநாட்டில் பலர் விவாதித்தனர். இத்திட்டத்தில் முதலீடு செய்யவும் சிலர் முன் வந்துள்ளனர். விரைவில், இத்திட்டத்தை செயல்படுத்தும் பணியை துவக்க உள்ளோம். இதன்மூலம் கிராம பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.தொடர்புக்கு 90038 55556.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை