கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரானவருக்கு முதல்வர் கனவு போலாம் ரைட்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 கண்டக்டர்,Conductor, சூப்பர் ஸ்டார், superstar, முதல்வர் கனவு , chief minister dream, நடிகர் ரஜினிகாந்த், actor Rajinikanth,தமிழக சட்டசபை தேர்தல், Tamil Nadu assembly election, தனிக்கட்சி, உள்ளாட்சி தேர்தல் , ஜனநாயகம், democracy,

சென்னை:கண்டக்டராக இருந்து, திரையுலகத்திற்கு வந்து, சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்திற்கு, முதல்வர் கனவு வந்துள்ளது. இதற்கு அச்சாரமாக, ரசிகர்கள் சந்திப்பின் நிறைவு நாளான நேற்று, தனிக்கட்சி துவக்கப்போவதாக அறிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், 'சொன்னதை செய்யாவிட்டால், மூன்றாண்டு களில் விலக தயார்' எனவும் அறிவித்துள்ளார். இதனால், அரசியலுக்கு அவர் வருவாரா என, 20 ஆண்டுகளாக நீடித்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 கண்டக்டர்,Conductor, சூப்பர் ஸ்டார், superstar, முதல்வர் கனவு , chief minister dream, நடிகர் ரஜினிகாந்த், actor Rajinikanth,தமிழக சட்டசபை தேர்தல், Tamil Nadu assembly election, தனிக்கட்சி, உள்ளாட்சி தேர்தல் , ஜனநாயகம், democracy,


கண்டக்டராக வாழ்க்கையை துவக்கி, சினிமாவில் கால் பதித்து, சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர், நடிகர் ரஜினிகாந்த், 67. 'புலி வருது' கதையாக, அரசியலுக்கு வரப் போகிறார் என, 20 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவரோ, அமைதி காத்து வந்தார்.சூசகம்
சில மாதங்களுக்கு முன், ரசிகர்கள் சந்திப்பை துவக்கிய அவர், 'தமிழகத்தில், 'சிஸ்டம்' கெட்டு
விட்டது; மாற்ற வேண்டும்' என பேசியது, அரசியலுக்கு வர உள்ளதை, சூசகமாக உணர்த்தியது.


இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில், ரசிகர்களுடனான இரண்டாம் கட்ட சந்திப்பை, ரஜினிகாந்த் நடத்தினார். முதல் நாள் சந்திப்பின் போதே, 'அரசியல் பிரவேசம் குறித்து, டிச., 31ல் அறிவிப்பேன்' என கூறி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்; அரசியல்வாதிகளை யோசிக்க வைத்தார்.

ரசிகர்கள் சந்திப்பின், நிறைவு நாள் நேற்று என்பதால், ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பிலும் இருந்தது.எதிர்பார்த்தபடியே, அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை, ரஜினி நேற்று வெளியிட்டார்.ரசிகர்களிடம் அவர் பேசியதாவது:ரசிகர்களை எப்படி பாராட்டுவது

என, தெரிய வில்லை. இவ்வளவு கட்டுப்பாட் டோடு, நீங்கள் இருந்ததில் மகிழ்ச்சி.இந்த கட்டுப்பாடு, ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதும்; நாம், என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். ரொம்ப, 'பில்டப்' ஆகிடுச்சுல்ல... இந்த பில்டப்பை, நான் கொடுக்கவில்லை; தானா வந்து விட்டது.


எனக்கு அரசியல் பயம் இல்லை; மீடியாவை பார்த்து தான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியாவை பார்த்து பயப்படுறாங்க; நான் வெறும் குழந்தை. நான் ஏதாவது சொன்னா, விவாதமாகி விடுகிறது. மறைந்த நண்பர் சோ, 'மீடியா கிட்ட எச்சரிக் கையா இரு'ன்னு,சொல்லி இருக்கார். இந்த நேரத்துல அவர், என்னுடன் இருந்தால், 10 யானை பலம் இருந்திருக்கும். ஆனாலும், அவரது ஆன்மா என்னுடன் இருக்கும்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன். குருஷேத்திரத் தில், கண்ணன், 'உன் கடமையை செய்; மற்றதை நான் பார்த்துக்கிறேன். யுத்தம் செய்; ஜெயிச்சா நாடாளுவாய்; யுத்தம் செய்யாமல்போனால், உன்னை கோழைன்னு சொல்வாங்க...'ன்னு, அர்ஜுனன் கிட்ட சொன்னார். அதனால, எல்லாத்தையும் செஞ்சு முடிச்சாச்சு; இனி, அம்பு விடறது தான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி; இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலில், தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.


அதற்கு முன், உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதற்கு, குறைந்த நாட்களே இருப்பதால், போட்டியிடப் போவதில்லை. லோக்சபா தேர்தல் பற்றி,அந்த நேரத்தில் முடிவுஎடுப்பேன். பணம், பெயர், புகழுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. நான் கனவுல கூட நினைக்காத அளவுக்கு, அதை, ஆயிரம் மடங்கு கொடுத்திருக்கிறீர்கள்.


ஆன்மிக அரசியல்பதவி ஆசை இருந்திருந்தா, 1996லேயே தேடி வந்த நாற்காலியை வேண்டாம் என, சொல்லி

Advertisement

இருக்க மாட்டேன். 45 வயதிலேயே, எனக்கு பதவி ஆசை இல்லை; 68 வயதில் வருமா?வந்தா, பைத்தியக்காரன் என்றல்லவா சொல்வர்!அரசியல் ரொம்ப கெட்டு விட்டது; ஜனநாயகம் சீர்கெட்டு போய்விட்டது. ஓராண்டில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள், தமிழக மக்களை தலைகுனிய வைத்து விட்டன. மற்ற மாநில மக்கள், நம்மை பார்த்து சிரிக்கின்றனர்.


இந்த நேரத்தில், நான், இந்த முடிவை எடுக்க வில்லை என்றால், அந்த குற்ற உணர்ச்சி, என்னை சாகிற வரைக்கும் துன்புறுத்தும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட் டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான; வெளிப்படையான; ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மிக அரசியலை ஏற்படுத்த வேண்டும்.அது தான் என் நோக்கம். ஆட்சி, கட்சி இதெல்லாம் தனி மனிதனான என்னால் மட்டும்முடியாது.


தமிழக மக்கள் என்னுடன் இருக்கின்றனர்.இது, சாதாரண விஷயமில்லை என, எனக்கு தெரியும். ஆண்டவன் அருள், மக்களின் நம்பிக்கை, அன்பு, ஒத்துழைப்பு இருந்தால் தான், இதை சாதிக்க முடியும்.அது எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.பழைய காலத்தில், ராஜாக்கள், இன்னொரு நாட்டுடன் யுத்தம் தொடங்கி ஜெயித்தால், அந்த அரண்மனை கஜானாவை கொள்ளையடிப்பர். ஜெயிச்ச படை வீரர்கள், எதிரி நாட்டு மக்களிடம் கொள்ளையடிப்பர். ஆனால், ஜனநாயகத்தில், சொந்த நாட்டிலேயே, பல விதத்துல கொள்ளை அடிக்கின்றனர்; இதை மாற்ற வேண்டும்.


இதற்கு, எனக்கு தொண்டர்கள் வேண்டாம்; காவலர்கள் தான் தேவை. அவங்க உழைப்பால ஆட்சி அமைக்கணும். அடிதட்டு மக்களுக்கு சேர வேண்டிய உரிமைகள், சலுகைகளை சேர விடாமல் தடுக்கிறவர்களை கண்டுபிடிக்கிற காவலர்கள் வேண்டும்.சுயநலத்துக்காக, எம்.பி., கிட்டேயோ, அமைச்சரிடமோ, நிற்காத காவலர்கள் வேண்டும். யார் தவறு செய்தாலும், தட்டி கேட்கும் காவலர்கள் வேண்டும்.அந்த காவலர்களை கண்காணிக்கிற பிரதிநிதி மட்டுமே நான். முதலில் காவலர்கள் படை வேண்டும்; அதை, நாம் உருவாக்க வேண்டும். ரசிகர் மன்றங்கள், கிராமத்தில் இருந்து, நகரங்கள் வரை, ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றை, ஒருங்கிணைக்க வேண்டும்.


முதல் பணிசுற்றி இருப்பவர்களை மன்றத்திற்குள் வர வைக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும், நம் மன்றங்கள் இருக்க வேண்டும். இது தான், நான் கொடுக்கிற முதல் பணி. அது வரை, நாம் அரசியல் பேச வேண்டாம்; யாரையும் குறை கூற வேண்டாம்; போராட்டம் வேண்டாம். அதை செய்ய நிறைய பேர் இருக்கின்றனர்!நமக்கு நீந்த தெரியும். குளத்துல இறங்கின பின் நீந்தலாம். சட்டசபை தேர்தல் எப்போது வருகிறதோ, அப்போது, கட்சி ஆரம்பித்து, என்ன செய்ய போறோம் என்பதை, எடுத்து சொல்வோம்.சொன்னதை செய்ய வில்லை என்றால், மூன்று ஆண்டுகளில், ராஜினாமா செய்வோம் எனக்கூறி, மக்கள் மத்தியில் போவோம்.

நம் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. நம் கொள்கை, நல்லதை நினைப்போம், நல்லதை பேசுவோம், நல்லதை செய்வோம், நல்லதே நடக்கும்!வரும் சட்டசபை தேர்தலில், நம் ஜனநாயக படையும் இருக்கும்.இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.இந்த அறிவிப்பால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என, 20 ஆண்டுகளாக நீடித்த யூகத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (182)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
04-ஜன-201809:15:31 IST Report Abuse

Muthukrishnan,Ramரஜினி அரசியலுக்கு வருவது அவரது சொந்த விஷயம். சம்பாதிப்பதும், சிலவு செய்வதும் அவரது விருப்பம். ஆனால் அரசியலில் குதித்தது தமிழனை முட்டாள் என நினைப்பதும், முட்டாலாக்க முயல்வதும், இனி முடியாது. என் தெரியுமா ? கர்நாடகா தண்ணீர் தரமறுத்தபோது அப்போது இருந்த ரஜினிகாந்த் வாயை திறக்காமல் மௌன விரதம் இருந்தார். அதே கர்நாடகாவிற்கு மின்சாரம் விநியோகத்ததை நிறுத்த வேண்டும் என்ற போராட்டம் எழுந்த போது மின்சாரத்தை நிறுத்ததுவது பற்றி மறு பரிசியிலனை செய்ய சொன்னதும் அந்த ரஜினிகாந்த் தான் ஆனால் இன்று அரசியலில் குதிக்க போகும் இந்த ரஜினிகாந்த் தமிழனுக்கு சகாயம் செய்யப்போவதாக பாட்டி வடை சுட்ட கதையை மீண்டும் சொல்கிறார். ரஜினியை ஒரு நடிகனாக மட்டுமே ஏற்று கொள்ள முடியும். அடுத்த சினிமாக்காரன்(ர்) நாட்டை ஆள நினைப்பது. பகல் கனவே ஒரு ஜெயலலிதாவே போதும் அப்பா போதும்.

Rate this:
Prakash JP - Chennai,இந்தியா
02-ஜன-201818:07:31 IST Report Abuse

Prakash JPதேர்தல் அரசியல் சாதாரணமானது அல்ல... ரஜினியைவிட சாதாரண & கிராமப்புற மக்களிடம் செல்வாக்கு கொண்ட, அதிகளவு ரசிகர்களை கொண்ட, அந்நேரத்தில் உச்சபட்ச மார்கெட் வேல்யு & அரசியல் அறிவும், ஓரளவு பேச்சு திறமையும் கொண்ட விஜயகாந்த், சொந்தமாக தனி கட்சி துவங்கி, முதன் முதலாக தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்ட 2006 ஆம் ஆண்டில், ஜெயித்து ஆட்சியை பிடித்தது திமுக தான்.. நடிகர்கள் பிரிப்பது அதிமுக ஓட்டுக்களைத்தான்.. திமுகவுடையதை அல்ல.. இப்போ, விஜயகாந்தோட செல்வாக்கு எல்லோருக்கும் தெரிந்த்தது தானே.. அரசியல் கட்சி துவக்கிய சிவாஜி கணேசனின் கதி எல்லோரும் அறிந்தது.. MGR மறைந்ததால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புகிறேன் என வந்தவர்.. இத்தனைக்கும் சிவாஜி மன்றங்களும், காங்கிரஸ்சில் பல ஆண்டுகளாக இருந்த அனுபவமும், சொந்த சாதி செல்வாக்கும் இருந்தும், சிவாஜி படுதோல்வியடைந்தார். சரி, பக்கத்து மாநில ஆந்திரா மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அரசியல் பயணம் தெரியும் தானே.. CBI வழக்குகள், ஜெயில் தண்டனை என ஊழல்வாதி பட்டம் இருந்தாலும் காங்கிரஸ்ல இருந்து தனி கட்சி தொடங்குன ஜெகன் மோகன் ரெட்டி அங்கே வலிமையான தலைவரா, எதிர் கட்சியா இருக்காரு.. ஆனா, மெகாஸ்டார் சிரஞ்சீவி, துண்டை காணோம் துணிய காணோம் என அரசியல் விட்டு ஓடிவிட்டார்... தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறானது....

Rate this:
Prakash JP - Chennai,இந்தியா
02-ஜன-201818:05:18 IST Report Abuse

Prakash JPஆன்மீக அரசியல் புதுவரவு.. சோ ராமசாமிதான் ரஜினியின் அரசியல் வழிகாட்டியாம், குருவாம்.... சாகும்வரை ஈழ விடுதலையை, ஈழ போராளிகளை, தமிழ் மொழியின் வளர்ச்சியை கடுமையாக எதிர்த்தவர்தான் சோ.. திருக்குறளை சொல்லி ஆரம்பிக்காமல் பகவத்கீதையை சமத்கிருத்ததில் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பிப்பது ஏன்? இதுதான் ஆன்மீக அரசியலின் ஆரம்பமா?

Rate this:
karupanasamy - chennai,இந்தியா
03-ஜன-201813:58:30 IST Report Abuse

karupanasamyதிருக்குறளை ஒருபோதும் ஏற்காத அதே சமயம் அல்லலாஹு அக்குபர் என்பதை எங்கும் உங்களைபோன்றோர்கள் சொல்லும் வழக்கமான நொண்டி சாக்கு தமிழ், தமிழன் இந உணர்வு மொழி உணர்வு என்பது தற்போதைய சந்ததியினருக்கு நன்றாக தெரியும்....

Rate this:
mscdocument - chennai ,இந்தியா
07-ஜன-201811:06:29 IST Report Abuse

mscdocumentதிருக்குறளில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. அவற்றை முஸ்லிம்கள் நல்ல கருத்து என்ற அடிப்படையில் ஏற்கிறோம்....

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
02-ஜன-201810:33:12 IST Report Abuse

ganapati sbபோலி பகுத்தறி நாத்திகம் பேசி ஊழல் செய்து நாட்டை சுரண்டி தன குடும்பம் சொத்து வளர்க்கும் அந்நிய நாட்டு அடிவருடிகளாக திராவிட கட்சிகளுக்கு சரியான மாற்று ரஜினியின் ஆன்மிக அரசியலே . வாருங்கள் ரஜினி வரவேற்கிறோம் .

Rate this:
babu - tiruchi,இந்தியா
01-ஜன-201823:39:25 IST Report Abuse

babuTea prime minister Conductor chief minister Nothing wrong. Get the vote from poor and work for the rich. Cine stars if keep the discipline like MGR even in the films, can come to the public judgement. When people called rajini sir ,he refused that he was an actor. Now he is requesting people I am ready to rule TN. Any how even he is from other other whatever it may be definitely he is from India. From tamilnadu people only some one elected from each place 234. Or 40. If Tamil leaders are keeping anti hindu motive. No one is going to support them.

Rate this:
ராம.ராசு - கரூர்,இந்தியா
01-ஜன-201822:44:33 IST Report Abuse

ராம.ராசு ஆன்மிகம் என்ற பெயரில் எதையும் சொல்லுபவர் திரு.ரஜினிகாந்த். புகைப் பிடிப்பதை, மது குடிப்பதை இளைய சமுதாயத்திற்கு ஒரு ஸ்டைலாக அடையாளப்படுத்தியவர். உண்மையில் அப்போதே அவர் சொல்லுகின்ற "சிஸ்டம்" கெட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். போதுமான அளவிற்கு அதுபோன்ற "சிஸ்டத்தை" உருவாக்கிவிட்டு "ஆன்மிகத்தை" போர்த்திக்கொண்டார். அவர் மனிதர்களை பெருமையாகப் பேசுவதைவிட சித்தர்கள் என்றும் ஆண்டவன் என்றும் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார். மனிதர்களை மிஞ்சிய, மனிதர்களின் அற்புதத்தைக் குறை சொல்லி, கற்பனை சித்தர்களுக்கு, ஆண்டவனுக்கு அர்த்தத்தை சொல்லிக்கொண்டு இருப்பவர். இந்த கட்சியின் ஆட்சி, இந்த அரசியல் தலைவரின் ஆட்சி சரியில்லை என்று சொல்லாமல், பொத்தாம் பொதுவாக "சிஸ்டம்' சரியில்லை என்று சொல்லி, தனது ரசிகர்களிடம் கைதட்டி வாங்கி பெருமைப்பட்டுக்கொள்வார். மக்களாட்சி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் "மதச் சார்பின்மை"யின் படி எழுதப்பட்டது. பல மதங்களைப் பின்பற்றும் மக்களைக் கொண்டுள்ள நாட்டிற்கு அதுதான் சரியானதாக இருக்க முடியும் என்று அதுபோன்ற சிறப்பான சட்ட அமைப்பை உருவாக்கினார். அதற்க்கான விளக்கம் எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பது. ஆனால் அதை இவரைப்போன்ற ஆன்மீகப் (?) பற்றாளர்கள் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பது என்று சொல்லிக்கொண்டு, பெரும்பான்மையை மட்டும் உயர்த்திச் சொல்லுவது என்றாகிப் போய்விட்டது. ஆன்மீக அரசியல் என்பதே அப்பட்டமான கவர்ச்சி வார்த்தை. மக்கள் அதை நம்பினால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமல்ல, உண்மையான கடவுள் நம்பிக்கை இருப்புவர்களும் ஏமாந்துதான் போவார்கள். ஆனால் தமிழ் நாட்டில் அது அவ்வளவு எளிதல்ல.

Rate this:
Indiya Tamilan - Doha,கத்தார்
01-ஜன-201822:43:18 IST Report Abuse

Indiya Tamilanரஜினியிடம் கொள்கை என்னவென்று கேட்டால் தலை சுற்றுகிறதாம் மீடியாவை பற்றி கூறுகிறார் சின்ன பசங்க ஏதோ கேட்கிறார்களாம்.இப்படி இவர் கூறியதை ஏன் எந்த ஊடகமும் கண்டிக்கவில்லை? இதனையே விஜய காந்த் கூறியிருந்தால் ஊடகங்கள் ஒரு வாரம் விவாதம் நடத்துவார்கள்.ரஜினி கூறியதை கண்டு கொள்ளவே இல்லையே ஏன் பிஜேபியை பகைத்துக்கொள்ள பயம்.பிஜேபியின் கட்டளையால்தான் ஊடகங்கள் கண் மூடித்தனமாக இவரின் அரசியல் வருகைக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் வேறு என்ன?

Rate this:
elango - trichy,இந்தியா
01-ஜன-201821:33:54 IST Report Abuse

elangoதன் தாய் தந்தையை நேசிப்பது நம் தமிழா்களை நேசிப்போம் கெட்டவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறாா்களா அவனவனுக்கு தந்தைதான் குடும்ப தலைவன் என்பது உண்மையானால் தமிழனே இங்கு தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜன-201820:18:50 IST Report Abuse

Bhaskaran1996 பொது தேர்தலில் மூப்பனாருக்கும் கருணாநிதிக்கும் இணைப்பு பாலமாக செயல் பட்ட சோ அவர்களை கருணாநிதி ,வீரமணி கும்பலின் ஆலோசனையால் கண்டுகொள்ளவேயில்லை

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
01-ஜன-201819:52:34 IST Report Abuse

venkateshகுடும்பத்தையே காப்பாத்த முடியாத இவர் நாட்டை காப்பாற்ற போறாராம் . எல்லாம் சேர்த்த சொத்தை காப்பாற்றத்தான். மண்டைய போட்டால் மெரினாவில் இடம் கிடைக்கும் என்று ஆசை இருக்கும் போல.

Rate this:
மேலும் 170 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement