'டிபாசிட்' போனதால் அதிரடி தி.மு.க.,வில் 140 பேர் பதவி பறிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'டிபாசிட்' போனதால் அதிரடி
தி.மு.க.,வில் 140 பேர் பதவி பறிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்' பறிபோனதால், தேர்தல் பணியாற்றாமல், 'டிமிக்கி' கொடுத்த, 140 நிர்வாகிகளின் பதவிகளை, தி.மு.க., தலைமை பறித்துள்ளது.

 'டிபாசிட்', போனதால்,அதிரடி,தி.மு.க.,வில்,140 பேர் ,பதவி பறிப்பு


சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், 'டிபாசிட்' இழந்தார்.இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, சட்டசபை கொறடா, சக்கரபாணி தலைமையில், மூன்று பேர் குழுவை நியமித்தது.


இக்குழு, ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஆர்.கே.நகர் கிழக்கு, மேற்கு பகுதி நிர்வாகிகள், 14 வட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியது.அதில், பெரும்பாலான நிர்வாகிகள், சரியாக தேர்தல் பணியாற்றாமல், 'டிமிக்கி'

கொடுத்து, தினகரனுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்தது தெரியவந்தது.


மாவட்ட முக்கிய நிர்வாகியின் செயல்பாடுகள் மீதும், பகுதி, வட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.இதுகுறித்த விரிவானஅறிக்கையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம்,
விசாரணைக்குழு நேற்று சமர்ப்பித்தது. இதை அடுத்து, முதல்கட்டமாக, ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய, 14 வட்டங்களின் நிர்வாகங்களும் கலைக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


இதனால், ஒரு வட்டத் திற்கு வட்ட செயலர், துணை செயலர், பொருளாளர், பகுதி பிரதிநிதிகள் என, மொத்தம், 1௦ பேர் வீதம், 14 வட்டங்களின், 14௦ நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இவர்களை தொடர்ந்து, மாவட்ட, பகுதி நிர்வாகி களின் பதவி பறிப்புகளும், அதிரடியாக தொடரும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.


உள்ளாட்சிமறுவரையறை:அவகாசம் தர கோரிக்கை


மாநில தேர்தல் கமிஷன் தலைவருக்கு, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள கடிதம்:உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தற்போது, அவசர அவசரமாக, வார்டுகளின் எல்லைகள்

Advertisement

மறுவரையறை செய்யப்பட்டு, சில மாவட்டங்களில், குளறுபடியான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து மற்ற அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


இதில், ஆட்சேபனை இருந்தால், டிச., 2ல், கருத்து தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இது, தி.மு.க., ஓட்டு வங்கியை அழிக்கும் முயற்சி. எனவே, மறுவரையறை பட்டியல் குளறுபடி தொடர்பாக, அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கருத்துகளை தெரிவிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜன-201822:38:16 IST Report Abuse

Ramesh Rayen ஜெய்த்தால் முறுக்கு தின்பார் தோற்றால் இஞ்சி தின்பார்

Rate this:
s t rajan - chennai,இந்தியா
01-ஜன-201821:26:29 IST Report Abuse

s t rajanவெற்றி பெற்றால் மாலை ஸ்டாலினுக்கு, டெபாசிட் போன தொண்டர்களுக்கு கல்தா? என்ன த்ராவிட பாரம்பர்யம், பகுத்தறிவு ? இந்த தில்லு முல்லுக்கார கலகத்தை (திமுக) வேரோடு பிடிக்கிற எறியும் காலம் நெருங்கி விட்டது.

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
01-ஜன-201820:14:12 IST Report Abuse

madhavan rajanவெற்றி பெற்றால் சிறந்த ராஜதந்திரி என்று தன்னைத் தானே பாராட்டிக்கொள்ளும் தலைவர்களுக்கு தோல்வி ஏற்பட்டாலோ அல்லது டெபாசிட் கூட வாங்க முடியவில்லையென்றால் சிறிதும் பொறுப்பே கிடையாது என்பது எப்படி சரி? தோல்விக்கு பிறரைக் காரணம் கூறும் இவர்கள் தேர்தலுக்குமுன் சரியாக பணியாற்றுகிறார்களா என்று ஏன் கண்காணிக்கவில்லை. நடந்தது ஒரே ஒரு தொகுதி இடைத்தேர்தல் தானே. அதைக்கூட செய்ய முடியாத தலைவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாதா?

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
01-ஜன-201818:24:41 IST Report Abuse

சூரிய புத்திரன்தமிழகத்தில் 89 எம்எல்ஏ உள்ள பிரதான எதிர்கட்சி எல்லா தகிடுதத்தம் செய்தும் 24500 வாக்கு வாங்கி டெபாசிட் காலியாகிடுச்சு. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வளவாக அறிமுகமில்லாத பாஜக நோட்டாவை விட குறைஞ்ச வாக்கு வாங்கியதை தீராவிட அடிமைகள் நக்கலடிச்சுட்டு இருக்குது. 24500 வாங்கின உனக்கும் டெபாசிட். காலி, 1500 வாங்கின பாஜக வுக்கும் டெப்பாசிட் காலி. பணபட்டுவாடாவால் திராவிடம் தோற்றது என்றால் அதே பணபட்டுவாடா பாஜகவையும் பாதித்திருக்கும்.... திராவிட அடிவருடிகள் இப்படி நக்கலடிச்சு தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறதுகள்...

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
01-ஜன-201820:17:31 IST Report Abuse

madhavan rajanடில்லி தேர்தலில் காங்கிரஸ் பிஜேபி ஐ நான்கே தொகுதிகளில் ஜெயித்ததற்காக கிண்டலடித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் பூஜ்யம். தான் ஜீரோ வாங்கினாலும் எதிராளி பெயில் ஆனதில் காங்கிரசுக்கு மிகவும் சந்தோசம். அதுபோலத்தான் இதுவும்....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-ஜன-201816:21:55 IST Report Abuse

Pugazh Vநீக்கப்பட்டவர்கள் மீது எதிர்க்கட்சியினர் பாச மழை பொழியும் நேரம். கமான் ஸ்டார்ட். இதுவே நோட்டாவை விட கம்மியா வோட்டு வாங்கின பிஜேபி யில் நடப்பதாக செய்தி வந்தால், சூப்பர் தூள், அப்படித் தான் களையெடுக்க வேண்டும் ஆ ஊ என்று கூவியிருப்பார்கள்.

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
02-ஜன-201800:04:01 IST Report Abuse

Thiyagarajanஅண்ணன் சொன்ன மாதிரி இனி எல்லாம் தோல்வி மாயம் தான்...

Rate this:
deepak - chennai,இந்தியா
01-ஜன-201816:10:30 IST Report Abuse

deepakஅந்த 140 பேரோடு, நம்ம செயல் தலைவர், துரைமுருகன், பாரதி இவங்களையும் நீக்கிட்டாதான் கட்சி உருப்படும்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஜன-201813:34:57 IST Report Abuse

தமிழ்வேல் தீவெட்டிக்கு அங்க ஆள் தேவைபடுதோ...

Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
01-ஜன-201812:34:24 IST Report Abuse

Bebeto""நம்ம ஜெயித்து என்ன லாபம்?? 89 - 90 ஆக போவுது. இதே தினகரன் ஜெயித்தால், ஆட்சி கலையலாம், பொது தேர்தல் வரலாம், அதில் நாம் ஜெயித்து ஆட்சியை கை பற்றலாம்" என்று கணக்கு போட்ட செயல் தலைவர் மீது என்ன நடவடிக்கை?

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
01-ஜன-201811:57:44 IST Report Abuse

சூரிய புத்திரன்அடேய் .. சோனமுத்தா... கட்சில 140 ஓட்டு போச்சா.... ஏற்கனவே 24500 வாக்கு வாங்கியும் டெப்பாசிட் கீலி... இப்போ 24500 - 140 = 24360 ஒரு வேளை டெப்பாசிட் கிடைச்சிடுமோ?

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
01-ஜன-201820:19:40 IST Report Abuse

madhavan rajan240 தனியா போகுமா? குடும்பத்து ஓட்டெல்லாம் கூட சேர்ந்து போகும். ஏதோ அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் கணிசமாக தொகை கிடைத்திருக்கும். அந்த வகையில் சோகம் குறைவு....

Rate this:
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
01-ஜன-201811:16:57 IST Report Abuse

Sathiamoorthy.Vஸ்டாலின் கூட்டாளிகளை களை எடுக்க வேண்டும். குறிப்பாக அந்த குன்றத்தூர் யோக்கியனை துரத்த வேண்டும்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement