ஆன்மிக அரசியல் அறிவிப்பு திராவிட கட்சிகள் கலக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆன்மிக அரசியல் அறிவிப்பு
திராவிட கட்சிகள் கலக்கம்

அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ள, நடிகர் ரஜினிகாந்த், 'ஆன்மிக அரசியல் தான் என் பாதை' என அறிவித்து இருப்பது, திராவிட கட்சிகளுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ஆன்மிக,அரசியல்,அறிவிப்பு,திராவிட,கட்சிகள்,கலக்கம்


தமிழகத்தில், முதல் அரசியல் கட்சியாக, 1916ல் தியாகராய செட்டியாரால், நீதிக்கட்சி துவக்கப்
பட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்த, ஈ.வெ.ராமசாமி, இட ஒதுக்கீடு கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த கட்சியிலிருந்து விலகி, நீதிக்கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி தலைவராக, 1944ல் பொறுப்பேற்றார்.


பின், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என, பெயர் மாற்றப்பட்டது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அண்ணாதுரை, தி.மு.க.,வை துவக்கி னார். 1967 சட்டசபை தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடித்தது. தி.மு.க.,விலிருந்து பிரிந்த, எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கினார். 1977 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.


மாறி மாறி ஆட்சி:

தமிழகத்தில், 1967ல்

இருந்து, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளே மாறி, மாறி வந்த படி உள்ளன. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., கம்யூனிஸ்ட்டுகள், தமிழகத்தில் காலுான்ற முடியவில்லை.


திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை, அக்கட்சிகளுக்கு உள்ளது.திராவிட அரசியல் வழி வந்தவர்கள், தங்களை மத சார்பற்றவர்கள் என கூறி, மத அரசியல் செய்வதும், ஜாதிக்கு அப்பாற் பட்டவர்கள் என கூறி, ஜாதி அரசியல் செய்வதும், தொடர் கதையாக உள்ளது.


தெய்வ நம்பிக்கை உள்ள தலைவர்களும், வெளிப்படையாக கோவிலுக்கு செல்லாமல், ரகசியமாக சென்று வரும் நிலை, தமிழகத்தில் உள்ளது.இந்து மதத்தை வெறுப்பது மட்டுமே மதச்சார்பின்மை என்ற கருத்தில், பல அரசியல் தலைவர்கள் வலம் வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், புதிய அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளார். முதன் முறையாக, தமிழக அரசியலில், 'ஆன்மிக அரசியலே என் அரசியல் பாதை' என, வெளிப்படையாக அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்பு, ஆன்மிக வாதிகளிடம் வரவேற்பைபெற்றுள்ளது.


அரசியலில் உள்ளவர்கள், மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தினால், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என, அரசியல் தலைவர்கள் நம்பி வரும் சூழலில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை கையில் எடுத்துள்ளார்.திராவிட கட்சிகளின் ஆட்சியில்,

Advertisement

அனைத்து மட்டங்களிலும், ஊழல் கரை புரண்டோடுகிறது. அரசியல் கட்சியினர், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, அனைவரும் கறைபடிந்தவர்களாக உள்ளனர். இதைத்தான் ரஜினி, 'சிஸ்டம் கெட்டு போயுள்ளது; சிஸ்டத்தை மாற்ற வேண்டும்' எனக் கூறுகிறார்.


நம்பிக்கைஒழுக்கம், நேர்மை ஆகியவற்றையே ஆன்மிகம் போதிக்கிறது; நல்லதை மட்டுமே செய்ய கூறுகிறது. ஆன்மிகத்தை புறம் தள்ளியவர்களுக்கு மத்தியில், ரஜினி அறிவித்துள்ள ஆன்மிக அரசியல், சமுதாயத் தில், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையை, மக்களிடம் விதைத்து உள்ளது.ரஜினி அறிவிப்புக்கு, மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு, திராவிட அரசியல் எனக்கூறி, காலம் தள்ளியோருக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
08-ஜன-201820:58:13 IST Report Abuse

Ravichandranஉண்மைதான் திருட்டு கழங்கங்களுக்கும், திருமா, சீமான், டாக்டர் ஐயா இன்னும் பல ஜாதி கட்சிகள், அரண்டு இருப்பது உண்மைதான். ரஜினிக்கு மக்களின் ஆதரவூ கொஞ்சம் இருக்கும் அதை அதிகப்படுத்துவது மட்டுமே அவரது எண்ணம் வெற்றி பெற வைக்கும். ரஜினி குடும்பம் மொத்தமும் தமிழ் குடும்பம்தான்,

Rate this:
muttam Chinnapathas - Chennai,இந்தியா
01-ஜன-201821:38:57 IST Report Abuse

muttam Chinnapathasமுதலில் தமிழகத்தில் ஆனமிகத்துக்கு என்ன பிரச்சனை?. கடவுள் நம்பிக்கை உள்ளவரும் இல்லாதவரும் முழ சுதந்திரத்துடன் இருக்கிறாங்க.. தமிழகத்தின் பிரச்னையே வளர்ச்சி இல்லை இந்த ஆட்சியில் பின் ஊழல்... தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் துரும்பையும் கிள்ளி போடாதவர்தான் இந்த ரஜினி..ரஜினி என்ன ஊழல் கரைபடியாதவர்தான்...எந்த மாநிலத்திலாவது பிற மாநிலத்தை சேர்ந்தவர் முதல்வராக முடியுமா... இன்னைக்கு ரஜினி வேனும்னு சொல்வர் எல்லாம் சோனியாவை வேண்டாம் என்று சொனரனவர்தான்... ஏன் இந்த முரண்பாடு... உலகை ஆண்ட இனம் என் தமிழினம்.. இன்று போறவன் வரவன் எல்லாம் நம்மை ஆள துடிக்கிறான் ...

Rate this:
gopi - chennai,இந்தியா
01-பிப்-201814:40:17 IST Report Abuse

gopiசோனியா வேண்டாம் என்று எந்த தமிழன் கூறினான் நண்பரே? சும்மா பொய் சொல்லி திரிய வேண்டாம்...

Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
01-ஜன-201820:31:26 IST Report Abuse

Krishnamurthy Venkatesanதிராவிடம் என்று சொல்லி சொல்லியே நாட்டை குட்டி சுவராக்கி விட்டார்கள். இவர்களால் அண்டை மாநிலத்திடமிருந்து காவேரி நீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற முடிவதில்லை. திராவிடம் என்று வீராப்பு. கடவுள் மறுப்பு கொள்கையில் படு தோல்வி. ஆனாலும் மீசை மீது மண் ஒட்டவில்லை. போராட்டங்களின்போது (ஹிந்தி எதிர்ப்பு போன்ற) தொண்டன்தான் தீ குளித்தான். அதில் தலைவர்கள் குளிர் காய்ந்தார்கள். எனவே ரஜினி வருகை வரவேற்கத் தக்கதே. அனைத்து மதமும் நல்வழிகளைத்தான் போதிக்கின்றன. நல்ல ஒரு ஆட்சி தருவது யாராக இருந்தாலும் வரவேற்போம்.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
01-ஜன-201823:30:44 IST Report Abuse

BoochiMarunthuஎன்னது திராவிடத்தால் தண்ணீர் வரவில்லையா ? என்ன ஒரு பொய் புரட்டு கட்டு கதை . சுப்ரமே கோர்ட் சொல்லியும் காவிரி tribunal அமைக்காது ஆன்மீக பிஜேபி கட்சி தானே ?...

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
01-ஜன-201820:03:12 IST Report Abuse

C.Elumalaiதிமுக மறைமுகமாக ஆலயத்துக்கு செல்வார்கள் அதிமுக தலைவர்கள் பகிரங்கமாக ஆலயத்தில் தரிசனம் செய்வார்கள் ஜெ உள்பட பயபடவேண்டியது அதிமுகஅல்ல

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-ஜன-201819:55:44 IST Report Abuse

Nallavan Nallavanஅரசியல் பத்தி அறிவிப்பு செஞ்சாலும் செஞ்சார் ...... நெறைய பேரைத் தலைமுடியைப் பிச்சுக்க வெச்சுட்டார் போலிருக்கே ..... இதுதான் அவருக்கும் வேணும் ..... கூடிய சீக்கிரம் வெளியாகப்போற படமாவது வசூலைக் குவிச்ச பிறகு நமக்கெல்லாம் பாபா முத்திரையைக் காமிச்சுட்டு "அமைதி" தேடி இமயமலைக்குப் போயிடப்போறாரு பாருங்க ....

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
01-ஜன-201819:26:15 IST Report Abuse

Tamilselvanகுடும்பத்தோடு கொள்ளை அடிக்கும் கும்பல்கள், மாபியாக்கள் துண்டை காணோம்,துணியை காணோம் ஏன் ஓடிஏ இருக்கிறார்கள். இனி மக்கள் சொத்துக்களை கொள்ளை அடித்து சுக வாழு நடத்தியவர்கள்,சிறைச்சாலைகளில் கம்பிகளை எண்ணும் நேரம் வந்து விட்டது.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
01-ஜன-201823:34:51 IST Report Abuse

BoochiMarunthuதமிழகத்தில் எந்த மாபியா குமபலும் வாடகை கூட தராமல் ஏமாற்றியது இல்லை , 1000 கோடி வியாபாரம் செய்தும் 25 வருஷமா வெறும் 3000 தான் வாடகை தருவேன் என்பவர் என்ன நல்ல ஆட்சி கொடுக்க போறார் ? இவர் எல்லாம் ஒத்த ருபாய் கூட வரி கட்டியிருக்க மாட்டார் . ஆன்மீகம் என்று சொன்னவுடன் பிஜேபி யினர் கிளம்பி விட்டனர். அவர் உங்களுக்கும் நாமம் போட்டு விட்டு போவார் பாருங்கள்...

Rate this:
POORMAN - ERODE,இந்தியா
01-ஜன-201817:19:08 IST Report Abuse

POORMANவெளிப்படையாக தி.மு.க வின் ஓட்டுகள் தான் ரஜினிக்கு போகக்கூடும்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஜன-201816:40:03 IST Report Abuse

Endrum Indianஊழல் என்னும் விஷம் 8.2 கோடி மக்கள் குருதியில் கலந்து அதிலிருந்து விடுபட முடியாத மன நிலையில் இருக்கின்றது. திருமங்கலம் ஃபார்முலா முதல் ஆர்.கே நகர் ரூ.20 ஃபார்முலா வரை பணம் தான் ஓட்டின் மறுபக்கம் என்று இருக்கின்றது. இதிலிருந்து விடுபட ஒரு வழியும் இல்லை மரணத்தை தவிர. இல்லை ஒரு ஸ்வாமி விவேகானந்தர் போன்றவர்கள் அரசியல் தலைவர்கள் ஆக வேண்டும். ரஜினியும் இதற்கு லாயக்கில்லை.அவரது கட்சியில் வேறு கட்சியிலிருந்து வந்து சேரும் பலர் அதே ஊழல் மனப்பான்மையில் தானிருப்பர் (கொஞ்சம் கண்மூடி மறைத்து இருக்கும் கண்ணில் தென்படாமல்). இந்த கட்சியாவது உருப்பட்டால் என்னைபோன்ற சாதாரண மக்கள் தமிழ் நாடு ஆனதே என்று மிகுந்த மன மகிழ்ச்சியடைவர். .

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
01-ஜன-201823:36:11 IST Report Abuse

BoochiMarunthuதமிழ்நாட்டில் உள்ள ஊழல் மணல் கொள்ளையை ஏன் பிஜேபியால தடுக்க முடியல ?...

Rate this:
Tamilan - Chennai,இந்தியா
01-ஜன-201814:55:15 IST Report Abuse

Tamilanஆனா ரஜினி பேரை சொன்னா சும்மா அதிருது இல்ல எம்ஜிஆர் ஆட்சி செய்தார் செல்வி ஜெ ஆட்சி செய்தார் விஜயகாந்த் அரசியலில் பெயர் சொல்லும் அளவுக்கு வந்தார் அதற்க்கு மேல் அவருக்கு உடல் நிலை சரிப்படவில்லை இதை எல்லாம் ஏற்றுக்கொண்ட சில கட்சிகள் ரஜினி பேரை சொன்னவுடன் பேய் அறைந்தது போல ஆகி விட்டார்கள். இப்போ தான் புரியுது இவர்களுக்கு மொழியோ மதமோ பிரச்சினை இல்லை மக்கள் மனம் கவர்ந்தவர்கள் அரசியலுக்கு வர கூடாது. வந்தால் பண நாயகம் தோத்து விடுகிறது. இது தான் இப்போதைய பிரச்சினை. சீமான் அலறுவதை பார்த்தால் பேயை கண்டவர் போல இருக்கு. ரஜினி அரசியலுக்கு வரணும் ஆட்சிக்கு வரணும். இல்லை என்றால் பாஜக ஆட்சிக்கு வந்து விடும். அதற்க்கு இவர் மேல். தமிழன் தான் ஆட்சி செய்யவேண்டும் என்றால் தமிழகம் அதாவது திமுக, பாமக, தேமுதிக, இவர்கள் வந்தால் விடுதலை சிறுத்தை, சீமான் போன்ற சின்ன சின்ன கட்சிகள் நாட்டாண்மை செய்து மக்களை சுரண்டுவார்கள். நம் அண்டை மாநிலங்களை விட தமிழகம் மிக மிக பின் தங்கி விடும். அதிமுக என்கிற கட்சி வராமல் இருந்திருந்தால் தமிழகம் எப்போதோ பீகார் ஆகி இருக்கும். துரதிஷ்ட வசமாக அதிமுக தலைமை இல்லாமல் போய் விட்டது. இப்போது நாத்திக வாதி அற்ற ஒரு கட்சி வேண்டும். இல்லை என்றால் இந்துக்கள் பெரும் துயரத்திற்கு போய் விடுவார்கள்.

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜன-201814:50:03 IST Report Abuse

மலரின் மகள்அரசியலும் ஆன்மீகமும் இரட்டுற மொழிதலே. உலகின் அனைத்து பேரரசுகளையும் ஆராய்ந்து பார்த்தால் ஆன்மிகம் தழைத்தோங்கிய அரசியலே வெற்றி பெற்றிருக்கும். ஆன்மீகத்தை ஒழித்து அரசியல் மட்டும் என்று சாத்தனாட்சிகள் சிலகாலம் இருந்தாலும் பின்னல் அது மறைந்து ஆன்மீகமே தழைத்தோங்கும். ஆன்மீகத்தை விட்டு ஒதுங்கிய அரசியல்வாதிகள், நீதி நேர்மை, இறைவனிடம் பயம் என்று எதுவும் இல்லாமல் தொடர்ந்து ஊழல் செய்து நாட்டை குட்டிசுவராக்கி விட்டிருக்கிறார்கள். எட்டு கோடி பேர் வாழும் தமிழகத்தில், இரண்டு லட்சம் கோடி அரசிற்கு கடனாம். அது தவிர போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளும் கடனில் மூழ்கி விட்டன. கடனை வாங்கி அதில் லஞ்சம் அடித்து அரசியல் வாதிகள் கொழுத்து பெருத்திருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு ஆன்மீக எண்ணமே இல்லாமல் போனது தான். ரஜினியின் கட்சி காலம் கடந்து துவக்கப்பட்டது என்று ஒதுக்க வேண்டாம். கடைசி நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொன்னாலும், அதற்காகவே காத்திருந்தது போல இறைவன் ஓடோடி வந்து உதவுவார் என்பதே நம்பிக்கை. அது தான் உண்மை. ஆகவே ரஜினியின் கட்சி காலம் கடந்தாலும் வளர்ந்து அரசு கட்டிலில் கோலோச்சும். மக்கள் ஆதரவு சிறுக சிறுக பெருகும். இன்றைய சூழலில் இருக்கும் கொழுத்த அரசியல் வாதிகள் இவர் கட்சியில் சேர்ந்து விடக்கூடாது. அதில் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் சேர்ந்தால் அவர்கள் நோக்கம் என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அமீனா ஆமை புகுந்தவீடு போல மாறிவிடும். இவருக்கு இருக்கின்ற முதல் சிக்கலே இவருக்கு அனைத்து அரசியல் வாதிகளும் வேண்டியவர்கள், அது மட்டுமல்ல, பெரியளவில் இவருக்கு அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள். அந்த நன்றிக்கடன், விசுவாசம் இவருக்கு இருக்கும். அதை தவிர்க்க தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு கட்சியின் உறுப்பினர் தகுதியில் சில மாற்றங்களை கொண்டு வரலாம். அதாவது ஏற்கனவே வேறு கட்சியில் இருந்தால் அந்த கட்சி காரர்கள் உடனடியாக இவரது கட்சியில் சேர்த்து கொள்ள மாட்டோம் என்றும் இரண்டாண்டுகள் கழித்து தான் அவர்கள் சேர்க்க படுவார்கள் என்று விதிகளை வகுக்கலாம். மற்ற காட்சிகளில் பதவிகளில் இருந்திருந்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர்கள் இவரது கட்சியில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து கொள்ளப்படமாட்டார்கள் என்று விதிக்கவேண்டும். மேலும் மற்ற கட்சிகளின் ஆட்சியில் மந்திரிப்பதவியில் இருந்திருந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இவர் கட்சியில் இடமில்லை என்று கொணரலாம். இது பெருச்சாளிகள் உள்ளே நுழையும் இடத்தை ஓட்டையை அடைப்பதாக இருக்கலாம். இதை கவனிக்காமல் விட்டால் கெஜ்ரிவால் கட்சிபோல ஊழல் பேர்வழிகள் உள்ளே நுழைந்து நோக்கத்தை அழித்து விடுவார்கள். இவரின் ரசிகர்கள் அனைவருமே நாற்பதை கடந்த சில வருடங்களுக்கு முன்பே கடந்து விட்டவர்கள். நிறைய ஆட்டோக்காரர்கள் ஓட்டுனர்கள் என்று அடித்தட்டு மக்கள் தான். அவர்களின் வாரிசுகள் அரசியல் கட்சி பக்கம் செல்லாமல் இருக்கிறார்கள். பேரவை என்பதையே இவரால் அன்று கொண்டுவரமுடியவில்லை. அவ்வளவு அழுத்தம் அந்த முதுபெரும் கிழவனாரின் சாணக்கியத்தால். அன்று பயந்தவர். ஆனால் இன்று நிலையே வேறு. பெரிய திறமையான நெட்ஒர்க்கை கட்டி ஆளும் சர்வ் அதிகார அரசியல் தலைவர்கள் இல்லை. எச்சமாக தொடரும் ஒரு தலைவருக்கோ, கோடானு கோடி க்கு பரவிய உலகளாவிய வியாபார நெட்ஒர்க்கை கவனிக்கவே முடியவில்லை. அந்த சொத்துக்களை எல்லாம் சட்ட ரீதியாக பாதுகாப்பதற்கே அரசியல் பதவி தேவை என்பதால் அவர் அதற்கே நேரம் செலவிட திணறுகிறார். ஆகையால் இது தான் சரியான தருணம். நல்லவர்களை கட்சியில் சேர்த்து பதவியில் இணைத்து கொள்ளுங்கள். அரசியல் வாதிகள் அமைச்சர்கள் ஏற்கனவே இருக்கும் ஊழல் அதிகாரிகளை தவிர்த்து விட்டு நல்ல அதிகாரிகளை, மக்களை ஒன்றிணையுங்கள். ஓய்வு பெற்றவர்களில் பலர் இன்று ஆன்மிகம் என்று சிறப்பாகத்தான் இருக்கிறார்கள். நல்ல ஓய்வூதியம், அல்ல வசதி என்று இருக்கும் அவர்கள் உண்மையிலேயே இந்த தேசத்திற்கு நல்லது செய்யவேண்டும் இளைய சமுதாயத்தை சீர்படுத்தி செம்மையாக்கி தரவேண்டும் அது தான் தங்கள் நோக்கம் அதன் பிறகுதான் வாழ்வின் இறுதி என்று நல்ல நோக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். அதை சிந்தனையில் கொண்டு அவர்களையும் இணைத்து வெற்றி பெறுங்கள். உங்களுக்கு புத்தாண்டில் வெற்றி வாழ்த்துக்கள். உங்கள் மூலம் தமிழ் நாடு சிறக்கட்டும். எத்துணை வயதானாலும் நீங்கள் எங்களுக்கு ரஜினி அங்கிள் தான். அன்புள்ள ரஜினிகாந்த் தான். ரஜினி காந்தம் நீங்கள். உங்கள் மீது அவ்வளவு பிரியம் எங்களுக்கு. நீங்கள் அரசியலில் புது கட்சி தொடங்க மாடீர்கள் வெறும் போக்கு காண்பித்து கொண்டே வருவீர்கள் என்ற எண்ணத்தில் தான் உங்களை நாங்கள் திட்டி தீர்த்தோம். அது நீங்களோ அரசியலுக்கு வந்து தலைமை ஏற்று நல்லவர்களை இணைத்து அவர்கள் வழி நாட்டிற்கு நல்லது நடக்கவேடனும் என்பதற்கான எண்ணத்தின் வெளிப்பாடு என்பதை உங்களுக்கு யாரும் சொல்லித்தெரிவேண்டிய வேண்டியதில்லை. வாருங்கள் ரஜினி அங்கிள். வாழ்த்துக்கள். TOGETHER WE UPLIFT TAMILNADU. தினமலர் உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். காஞ்சி காமாட்சி அருள் புரிவாள்.

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement