தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை... ரூ.2 லட்சம் கோடி! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக அரசின் தற்போதைய
கடன் சுமை... ரூ.2 லட்சம் கோடி!

தமிழக அரசின் கடன் சுமை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது, அனைத்து தரப்பினரிடமும், கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடனுக்கு செலுத்த வேண்டிய அதிக வட்டி காரணமாக, அரசு நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். எனவே, இலவச திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக,அரசின்,தற்போதைய,கடன் சுமை, ரூ.2 லட்சம் கோடி!


தமிழக அரசு, நிதி பற்றாக்குறையால், தவித்து வருகிறது. ஆண்டுதோறும் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. 1984 - 85ம் நிதிஆண்டில்,

2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. பின், 2015 - 16ல், அரசின் கடன் சுமை, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 95 கோடியே, 65 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, தமிழக அரசுக்கு வருவாய் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.


சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், நர்மதா நந்தகுமார், தமிழகத்தில், காங்., ஆட்சியிலிருந்த காலம் முதல், 2017 வரை, ஒவ்வொரு நிதியாண்டிலும், தமிழக அரசின் கடன் சுமை எவ்வளவு என்ற விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டார்.


நிதித்துறை சார்பு செயலர், ராமநாதன், அதற்கு பதில் அனுப்பி உள்ளார். அதில், '1984 - 85ல் இருந்து, 2015 - 16 நிதியாண்டு வரை, ஒவ்வொரு ஆண்டிலும், தமிழக அரசுக்கு, எவ்வளவு கடன் இருந்தது' என்ற, விபரத்தை தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒவ்வொரு

Advertisement

ஆண்டும், தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. ஒருமுறை கூட, கடன் சுமை குறையவில்லை.
1984ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். அவருக்கு பின், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,
கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.


இரு கட்சி ஆட்சியிலும், போட்டி போட்டு கடன் பெற்றுள்ளனர். கடன் சுமையை குறைக்க, இரண்டு கட்சிகளும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், 2016 - 17க்கான கணக்குகள், இதுவரை இறுதி செய்யப்பட வில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தற்போதைய நிலவரப்படி, தமிழக அரசின் கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயுடன் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகரித்தபடி உள்ளது. இதனால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலவச திட்டங் களால் தான், இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ள தாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆட்சியிலிருப்போர், கடன் சுமையை குறைக்க, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-201812:12:16 IST Report Abuse

Niranjanமன்னார்குடு மாபியா, சிவகங்கை செட்டியார் வகையறாவிடம் சொத்துக்கள் பறிமுதல் செய்தால் இவற்றில் பாதியை அடைக்கலாம் மீதியை OPS EPS கும்பலிடம் இருந்து எடுக்கலாம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஜன-201816:08:05 IST Report Abuse

Endrum Indianஅப்போ இந்த அசிங்கமான ஆட்சி டாஸ்மாக் நாட்டில் முடியும் தருவாயில் 4 .2 லட்சம் கோடி கடன் சுமை விட்டுச்செல்லும் என்று மிக நன்றாகத்தெரிகின்றது.

Rate this:
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
01-ஜன-201822:53:55 IST Report Abuse

Nalanvirumbiஅனைத்து அமைச்சர்களும் இதை பகிர்ந்து கொள்ளவேண்டியதுதான்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-ஜன-201819:52:31 IST Report Abuse

Nallavan Nallavanஅசல் 176000 கோடி க்கு வட்டியோட சேர்த்துப் போட்டா ரெண்டு லட்சம் கோடியைத் தாண்டிடுமே ?

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
01-ஜன-201818:01:44 IST Report Abuse

Devanatha Jagannathanகோபாலபுரம் மன்னார்குடி கழகங்கள் கொள்ளையை பிடித்தால் 10 லட்சம் கோடி கிடைக்கும்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஜன-201816:55:46 IST Report Abuse

Endrum Indianடாஸ்மாக்கில்- குடியில் - ரூ 45,000 கோடி வருமானம் டாஸ்மாக் நாட்டு அரசுக்கு. அடுத்து கள்ளக்கடத்தல், கஞ்சா, அபின் எல்லாம் அரசு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். செய்யவேண்டியது 1) ஆன்மீக அரசியல் அதாவது மணல் கொள்ளை, ரியல் எஸ்டெட் கொள்ளை இதை நிப்பாட்டவேண்டும். இதில் அரசு வருமானம் குறைந்தது ரூ. 12,000 கோடி அதிகமாகும். 2) 55% கமிஷன் வாங்குவதை நிறுத்தினால் அங்கு தொழில் செய்ய் பலர் வருவர், அதனால் குறைந்தது ரூ.50,000 கோடி அதிகமாகும். 3) கல்வியில் கவனம் கொண்டு வந்தால் அசிங்க அரசியல்வாதிகளுக்கு கல்வி நிறுவனம் நடத்த தடை கொண்டு வந்து அதை அரசாங்கமே நடத்தினால் அதில் ரூ.8,000 கோடி வருமானம் அரசுக்கு அதிகாமகும். இப்படி பல விதத்தில் ஆன்மீக அரசியல் நடத்தினால் (ரஜினி பீலா விடுவது போல அல்ல) நிச்ச்யம் நமது டாஸ்மாக் நாடு நல்லதொரு வழியில் பிரவேசிக்கும். இதே திராவிட ஆட்சி அரசியல் தான் செய்வேன் என்றால் B.P.L. ஜனத்தொகை தான் அதிகரிக்கும். வேறு எந்தவொரு மாற்றமும் இருக்காது. .

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
01-ஜன-201816:43:07 IST Report Abuse

dandyஎங்கள் சாராய வருட வருமானம் 30 ,0000 கோடி ரூபாய்கள் ... ஐரோப்பிய நாடுகள் கூட போட்டி போட முடியாது

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
01-ஜன-201823:20:42 IST Report Abuse

Thiyagarajanதிருட்டு முன்னேற்ற கழகம் 4 கோடி என்று சொல்லியது வெறும் 2 கோடிதான், மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது...

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
01-ஜன-201816:15:16 IST Report Abuse

தமிழர்நீதி கடனை வாங்கி வெட்டிய குளத்தை வெட்டியதாக , போட்ட சாலையை போட்டதாக காட்டி கொள்ளையடித்த கும்பலில் சிலது மாட்டிகிட்டு பார்ப்பன அக்கரகாரம் சிறைக்குள் , முக்கிய குற்றவாளி மெரினாவில் , இன்னும் 90 % பேரு குக்கரை தூக்கிகிட்டு , பழனி பன்னீர் என்று பேரை வைத்துக்கொண்டு இன்னும் பலர் அமைச்சராக இருக்கிறார்கள் . மக்கள் எழுச்சிதான் இந்த பணத்தை இவர்களிடமிருந்து புடுங்கி கடனை அடைக்கமுடியும் . இல்லாவிட்டால் மோடிக்கு கொடுப்பதை கொடுத்து தப்பிவிடுவார்கள் . மக்கள் எழுச்சி இவர்களை கூறுபோடும் வேகம் குறைக்கத்தான் இந்த வயசான காலத்தில் ரஜினி ஆன்மீக அரசியலுக்கு இழுத்து வரப்படுகிறார் .

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜன-201815:37:24 IST Report Abuse

Lion Drsekarஇவைகள் அனைத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் சார்ந்த வியாபாரங்களில் முதலீடாக இருக்கிறன, நீ எதை எடுத்து வந்தாய் எடுத்து செல்வதற்கு என்ற சொல்லிற்கு பொருத்தமாக எங்கிருந்து எடுத்தார்களோ அங்கேயே இருக்கிறது, அவைகள் அனைத்தும் இன்று யாருடையதோ அது நாளை வேறு ஒருவனுடையது, வந்தே மாதரம்

Rate this:
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
01-ஜன-201814:20:43 IST Report Abuse

நந்தினி திவ்ய பாரதிவாங்கிட்டேயிருக்குராங்கலமா.

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement