அ.தி.மு.க., வெற்றியை தடுக்க யாரும் பிறக்க போவதில்லை : முதல்வர் பழனிசாமி பதில்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வெற்றியை தடுக்க யாரும் பிறக்க போவதில்லை : முதல்வர் பழனிசாமி பதில்

Added : ஜன 01, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: ''அ.தி.மு.க., வெற்றியை யாரும் தடுக்க முடியாது. அதற்காக, இனி யாரும் பிறக்கப் போவதில்லை,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். நடிகர் ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்த, அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை. படித்த பிறகே, அது குறித்து கருத்து கூற முடியும். சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து, ரஜினிகாந்த் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்து. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க.,வின்
வெற்றியை தடுக்க யாரும் பிறக்கவில்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
 எச்.ராஜா, பா.ஜ., தேசிய செயலர்: தமிழகம் என்றுமே
ஆன்மீக பூமிதான். ஆழ்வார்களும் நாயன்மார்களும்
அவதரித்த மண். இடைப்பட்ட காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து. ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது.
 துரைமுருகன், தி.மு.க., முதன்மை செயலர்: ரஜினி அரசியலுக்கு வருவதால் தி.மு.க.,வுக்கு ஒன்றும் இல்லை. அரசியல் என்பது பெரிய களம். அதில் நின்று எதையும் எதிர் கொள்ளும் தைரியம்
தி.மு.க., வுக்கு உள்ளது.
 தமிழருவி மணியன், காந்திய
மக்கள் இயக்கம்: ஆன்மிக அரசியல் என்பது காந்தி முன்னெடுத்த அரசியல். ஆன்மிகம், மதம் என்பது வேறு. தமிழகத்தில் ஆன்மிகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். ஆன்மிக அரசியலில் ஊழல், தவறு, குற்றங்களுக்கு இடமில்லை.
 சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் : தமிழகத்தை, தமிழ் மண்ணை சேர்ந்தவர்கள்தான் ஆள வேண்டும். யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் நடிக்கலாம். ஆனால், தலைவனாக, முதல்வனாக தமிழகத்தை ஆளக்கூடாது. இது மன்னர் ஆட்சி முறை அல்ல. நாங்கள் அடிமையாக இருக்க முடியாது. ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். இவரது அரசியல் வருகை ஒரு மாற்றத்தையும் உருவாக்காது.
 கவிஞர் வைரமுத்து: அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியை,
நண்பர் என்ற முறையில்
வரவேற்கிறேன்.
 நடிகர் கமல் வாழ்த்து: தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல், டுவிட்டரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "புது வருடம்
கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பொது உணர்வும் பொது நலமும் நம்
மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம்
பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் கமல், "சகோதரர் ரஜினியின்
சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக" என
குறிப்பிட்டிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
13-மார்-201818:35:32 IST Report Abuse
r.sundaram இந்த மாதிரியே சொல்லிக்கொண்டிருங்கள். அதிமுகவை கவிழ்க்க வெளியிலிருந்து ஆட்கள் வர வேண்டாம். நீங்கள் அடிக்கும் கமிஷன் உங்களை கவிழ்க்கும்.
Rate this:
Share this comment
Cancel
M Ragh - Kanchi,இந்தியா
01-ஜன-201810:30:16 IST Report Abuse
M Ragh Ippo irukkira Minister podum .idukku vera alu venuma
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X