முதல்வரை புறக்கணித்த தம்பிதுரை: நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரை புறக்கணித்த தம்பிதுரை: நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி

Added : ஜன 01, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூரில், முதல்வர் பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்காமல் புறக்கணித்தார்.

முதல்வர் பழனிசாமி, நேற்று காலை ஊட்டியில் இருந்து கோவை, கரூர் வழியாக திண்டுக்கல்லுக்கு சென்றார். கரூர் திருகாம்புலியூர் ரவுண்டானாவில், போக்குவரத்துத் துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில், அக்கட்சியினர், முதல்வருக்கு வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்காமல் புறக்கணித்தார். முன்னதாக, நேற்று காலை, 10:30 மணிக்கு, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, துப்புரவு பணியாளர்களுக்கு உடை வழங்கும் விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருடன், தம்பிதுரை பங்கேற்றார். கரூருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த தம்பிதுரை, முதல்வருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, சசிகலா, தினகரன் குறித்து விமர்சனம் செய்யாமல், தம்பிதுரை மவுனம் காத்து வருகிறார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு, தினகரன் அணிக்கு தம்பிதுரை தாவி விடுவார் என்ற தகவல் உலவி வருகிறது. இந்நிலையில், முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல், தம்பிதுரை புறக்கணித்த சம்பவம், பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X