'ஸ்பெக்ட்ரம் காய்ச்சல்' மீண்டும் ஏற்றம்; ராஜாவின் புது வியூகத்தால் பரபரப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
'ஸ்பெக்ட்ரம் காய்ச்சல்' மீண்டும் ஏற்றம்
ராஜாவின் புது வியூகத்தால் பரபரப்பு

ஸ்பெக்ட்ரம் பிரச்னை குறித்து, அதிர வைக்கும் முக்கிய தகவல்களுடன், தன் புத்தகத்தை வெளியிட ராஜா தயாராகி விட்டதால், டில்லி வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது.

'ஸ்பெக்ட்ரம் காய்ச்சல்' மீண்டும் ஏற்றம்; ராஜாவின் புது வியூகத்தால் பரபரப்புநாட்டையே அதிர வைத்த, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கைது, சிறை, வழக்கு விசாரணை என, முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர், ராஜா, பலவாறு அலைந்து கொண்டிருந்த நிலையிலும், மூன்று ஆண்டுகளாக, புத்தகம் எழுதுவதிலும், சத்தமில்லாமல், அவர் தீவிரமாக இருந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

தீர்ப்பு எப்படி வந்தாலும், புத்தகம் மூலம் முக்கிய விபரங்களை, அரசியல், ஊடகம் உட்பட, பொது தளங்களில் அம்பலப்படுத்தும் நோக்கில், இதை வெளியிடு வதற்காக, தேசிய அளவில் பிரபலமான, பெங்குவின் பதிப்பகத்தை, ராஜா தரப்பு நாடியது.

பின்வாங்கியது


முதலில் ஒப்புக் கொண்ட அந்த பதிப்பகம், சரிபார்ப்புக்காக அனுப்பி வைக்கப்பட்ட நகல்களை பார்த்து, அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்து, கடைசி நேரத்தில் பின்வாங்கியது

.'2ஜி சாகா, அன்போல்ட்ஸ்' என, தலைப்பிட்ட அப்புத்தகத்தில், சுப்ரீம் கோர்ட், சி.ஏ.ஜி., என, நாட்டின் முக்கிய அதிகார அமைப்புகளை நோக்கி, ராஜா எழுப்பியிருக்கு கேள்விகளும், காங்., குறித்த பல்வேறு அணு குண்டு தகவல்களும் தான், இதற்கு காரணம்.

புத்தகத்தை வெளியிட்டால், வழக்குகள் பாயலாம்; கோர்ட் கண்டனத்திற்கு ஆளாகலாம் என்ற அச்சம் எழவே, அந்த பதிப்பகம்
மறுத்து விட்டது. இதையடுத்து, டில்லியைச் சேர்ந்த, 'ஹர் ஆனந்த்' என்ற பதிப்பகம், ராஜாவுக்கு கைகொடுக்க முன்வந்தது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர், நரேந்திர குமார், 'எமர்ஜன்சி' காலத்தில், அப்போதைய பிரதமர், இந்திராவையே எதிர்த்து நின்றவர்.கோர்ட், வழக்கு என, என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், தாம் பார்த்துக் கொள்வதாக கூறி, புத்தகத்தை தயாரிக்கும் பணிகளில், ஹர் ஆனந்த் பதிப்பகம் இறங்கியது.

வெளியீட்டு விழா


இப்போது எல்லாம் தயாராகி, பொங்கல் பண்டிகைக்கு பின், புத்தக வெளியீட்டு விழா, டில்லியில் நடக்க உள்ளது. ஆனாலும் தீர்ப்பு, தி.மு.க.,வுக்கு சாதகமாக வெளி வந்துள்ள நிலையில், 'புத்தகத்தை வெளியிட்டால், தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுமே' என, தி.மு.க., மேலிடம் தயக்கம் காட்டுகிறது.

ஆனால் இது குறித்து, ராஜா தரப்பு கூறியதாவது: சி.பி.ஐ., மேல்முறையீடு செய்வதற்கு முன், இவ்வழக்கின் முழு பரிமாணங்களையும் அம்பலப்படுத்த வேண்டும். அப்போது தான், பொது வெளியிலும், மேல் கோர்ட்டுகளிலும், நம் தரப்பு நியாயங்களை தெளிவாக்க முடியும்.

Advertisement

மேல்முறையீடு செய்த பின், புத்தகத்தை வெளியிட்டால், அது கோர்ட் அவமதிப்பாகிவிடும்; தடைகள் ஏற்படும். எனவே, புத்தகத்தை இப்போதே வெளியிட்டு, சி.பி.ஐ.,யை முந்திக் கொள்ள வேண்டும்.கீழ்கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டதை தாண்டி, மேலும் பல விபரங்கள் உள்ளன என்பதை ஆணித்தரமாக, தெரிய வைத்தால் மட்டுமே, மேல் கோர்ட்டுகளால், சைனியின் தீர்ப்பை தாண்டி யோசிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, புத்தகத்தை வெளியிடுவதே சரி.இவ்வாறு ராஜா தரப்பு கூறியது.

தள்ளுபடி சலுகை


புத்தகத்துக்கான, 'ஆன் லைன்' அறிமுகம் மற்றும் முன்பதிவு ஆகிய அனைத்துமே துவங்கி விட்டன. ஜன., 10க்குள், 'புக்' செய்தால், தள்ளுபடி சலுகை என்றெல்லாம் கூட அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆன் லைன் விற்பனைக்கான ஏற்பாடுகள், ஜெட் வேகத்தில் நடக்கின்றன.இதில், வெளிநாடுகளில் இருந்தும் அதிக, 'ஆர்டர்'கள் வருவதாக தகவல். இதனால், டில்லி அரசியல் வட்டாரங்களில், சற்றே இறங்கியிருந்த, 'ஸ்பெக்ட்ரம் காய்ச்சல்' மீண்டும் ஏறி வருகிறது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
03-ஜன-201800:08:18 IST Report Abuse

Milirvanஇந்த விஷயத்தில் மேலும் ராஜா அறிவுறுத்துவாரா என்று பார்க்கிறேன்.. வருங்காலத்தில் 'ட்விஸ்ட் டான்ஸ்' பாருங்கள்..

Rate this:
Karthik - Chennai,இந்தியா
02-ஜன-201822:47:25 IST Report Abuse

Karthikஒருவன் தன பொருளை விற்க ஏல முறை சிறந்ததா அல்லது முதலில் வருபவருக்கு விற்பது சிறந்ததா என்று கூறுங்கள் பாப்போம்? இதை தெரிந்து கொள்ள கணக்கு பயிலவேண்டிய அவசியமில்லை.. கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும்.. நமது பழைய பொருட்களை OLX இல் விற்ககூட நம்ம ஏல முறை தான் சிறந்தது.. நல்ல விலை கிடைக்கும்..அதை விட்டு எதோ பாமரனுக்கும் மொபைல் சேவை பெறவேண்டும் என்று பொது நோக்கத்தில் தியாகி போல பேசுவது .....

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
02-ஜன-201818:24:34 IST Report Abuse

Nakkal Nadhamuniஇந்த நூல் நெஞ்சுக்கு நீதியளவுக்கு உண்மையுடன் இருக்குமா???

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X