லோக்சபா தேர்தலுக்கு முன், 2018ல் பா.ஜ.,வுக்கு கடும் சவால்: 8 மாநில சட்டசபை தேர்தலில் மோடி - ஷா மேஜிக் எடுபடுமா? Dinamalar
பதிவு செய்த நாள் :
சவால்!
லோக்சபா தேர்தலுக்கு முன், 2018ல் பா.ஜ.,வுக்கு கடும்...
8 மாநில சட்டசபை தேர்தலில் மோடி - ஷா மேஜிக் எடுபடுமா?

கடந்த, 2017ம் ஆண்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது; பல மாநில சட்டசபை தேர்தல்களில் வென்றது. ஆனால், வரும், 2019ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த ஆண்டு நடக்க உள்ள, எட்டு மாநில சட்டசபை தேர்தல்கள் மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

B.J.P,BJP,Bharatiya Janata Party,Modi,Narendra modi,நரேந்திர மோடி,பா.ஜ,மோடி

இந்த சட்டசபை தேர்தல்களில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் மேஜிக் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சி அமைந்தது. பிரதமர் மோடியின் தலைமை, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவின் தேர்தல் திட்டமிடல், வியூகங்கள் கைகொடுக்க, கடந்த மூன்று ஆண்டுகளில், பா.ஜ., மிகப்பெரிய அளவில் வெற்றிகளை குவித்தது.

சமீபத்தில் நடந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் வென்றதன் மூலம், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி, 19 மாநிலங்களுக்குவிரிவடைந்துள்ளது.இலக்குஇந்நிலையில், 2019 லோக்சபா தேர்தலை இலக்காக வைத்து, பா.ஜ., செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், எட்டு மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இது, பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் என, கணிக்கப்படுகிறது.

குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், கடந்த தேர்தலில், 115 தொகுதிகளில் வென்ற பா.ஜ., தற்போது, 99 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தற்போதைய நிலையில், நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 77 சதவீத பகுதிகளும், 68 சதவீத மக்கள் தொகையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியின் கீழ் உள்ளன.

'ஒரு நாடு, ஒரே தலைவர்' என்று மோடியை முன்னிறுத்தும் அமித் ஷாவின் கோஷம் விரிவுபடுத்தப்படுமா என்பது, இந்த ஆண்டில் நடக்க உள்ள, எட்டு மாநில சட்டசபை தேர்தல்களே முடிவு செய்ய உள்ளன.நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் பதவிக்காலம், மார்ச் மாதம் முடிகிறது. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் பதவிக் காலம், மே மாதத்தில் முடிய உள்ளது. ஆண்டு இறுதியில், மிசோரம் சட்டசபையின் காலம் முடிகிறது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றின் பதவிக்காலம், 2019 ஜனவரி துவக்கத்தில் முடிகிறது. அதனால், இந்த நான்கு மாநிலங்களுக்கு, டிசம்பரில் தேர்தலில் நடத்தப்படும்.சமாளிக்குமா?


இந்த, எட்டு மாநிலங்களில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பா.ஜ., ஆட்சியும், நாகாலாந்தில் அதன் கூட்டணி கட்சி ஆட்சியும் அமைந்துள்ளன. கர்நாடகா, மேகாலயா, மிசோரமில் காங்கிரஸ் அரசும், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும் அமைந்துள்ளன.

தென் மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி புரிந்த ஒரே மாநிலமான கர்நாடகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலுவாக உள்ள திரிபுராவில் வெற்றி பெறுவது என்பதை விட, தான் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும் வீசிய மோடி அலை, அமித் ஷாவின் மேஜிக், இந்த எட்டு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்குமா?

அடுத்த லோக்சபா தேர்தலுக்கு அடித்தளமாக இந்த மாநிலங்கள், பா.ஜ.,வுக்கு அமையுமா என்பதை தேர்தல் நெருங்கும்போது தான் கணிக்க முடியும்.கிராமப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தி, விவசாயிகளின் போராட்டங்கள், வேலைவாய்ப்பு அதிகரிக்காதது போன்றவை, 2019 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல...

இந்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல்களில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற சவால்களை, மோடி - ஷா மேஜிக் சமாளிக்குமா?

வாய்ப்புகள் எப்படி?இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., எதிர்நோக்க வேண்டிய பிரச்னைகள்:
l ராஜஸ்தான்: 200 தொகுதிகள் கொண்ட, பா.ஜ., ஆளும் ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு முந்தைய தேர்தல்களைப் போல சுலபமாக இருக்காது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், இடஒதுக்கீடு பிரச்னைகள், அரசு அதிகாரிகள் இடையே அமைதியின்மை, இளைஞர்கள் - விவசாயிகளின் கொந்தளிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, அவருக்கு எதிராக அமையலாம்.

குஜராத்தைப் போல் அல்லாமல், ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சியில் குறிப்பிடக்கூடிய தலைவர்கள் உள்ளனர். இளம் தலைமுறையைச் சேர்ந்த சச்சின் பைலட், பழுத்த அனுபவசாலியான அசோக் கெலாட் ஆகியோர் அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய பலம்.
l மத்திய பிரதேசம்: 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்திலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. நான்காவது முறையாக முதல்வராகும்முயற்சியில் சவுகான் உள்ளார்.

Advertisement

இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பிரச்னை, அதிக அளவு மூத்த தலைவர்கள் உள்ளது தான். திக்விஜய் சிங், கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் ஆகியோர், முதல்வர் வேட்பாளரை அறிவித்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். சவால்கள் இருந்தாலும், குஜராத்தைப் போலவே, தோல்வியில் இருந்து தப்பிக்க பா.ஜ.,வுக்கு வாய்ப்பு உள்ளது.

l சத்தீஸ்கர்: 90 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்திலும், நான்காவது முறையாக முதல்வராகும் எண்ணத்தில் பா.ஜ.,வின் ரமண் சிங் உள்ளார். தொடர்ந்து, 14 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்திலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தாலும், பா.ஜ.,வுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கலாம்.

l மேகாலயா: 60 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில், சமீபத்தில், எட்டு எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கட்சியிலிருந்து விலகியது, ஆளும் காங்., கட்சிக்கு பெரும் சரிவாகும்.

l திரிபுரா: 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐந்தாவது முறையும், முதல்வர் மாணிக் சர்க்கார் நான்காவது முறையும் ஆட்சி அமைப்பதை தடுக்க, பா.ஜ., தீவிரமாக உள்ளது. ஆனால், அது அவ்வளவு சுலபமானதல்ல.

l கர்நாடகா: கடந்த, 2007 முதல், 2012 வரை ஆட்சியில் இருந்த பா.ஜ., 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், அந்தக் கட்சிக்கும், இது முக்கியமான கவுரவப் பிரச்னை தேர்தல் என்பதால், கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.

l நாகாலாந்து: 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில், நாகாலாந்து மக்கள் கட்சி அரசு அமைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அந்தக் கட்சிமிகவும் வலுவாக உள்ளது.

l மிசோரம்: 40 தொகுதிகள் கொண்ட மிசோரம், காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு ஆறுதலாக அமைவது தவிர்க்க முடியாது.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
03-ஜன-201800:26:33 IST Report Abuse

MilirvanEVM ஐயே பிச்சிப்போட்டு விளக்கிய பின்னும் ஏன் இப்படி..? ஏதாவது பேச வேண்டும் என்று பேசுவது..

Rate this:
rajan - kerala,இந்தியா
02-ஜன-201820:14:45 IST Report Abuse

rajanதமிழ்நாட்டை பொறுத்த வரை இனி குக்கரின் டோக்கன் டெக்னீக் தான் கை கொடுக்கும். ஏன்னா பெரும்பான்மை மக்கள் ஊழலுக்காகவே உழைக்க துவங்கி விட்டார்கள். காசு பணத்துக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்கள் கோர்ட் கேசு எல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம் என மன உறுதியுடன் செயல் படுகிறார்கள். எனவே கொடும் தண்டனை ஓன்று தான் இனி மக்களை ஊழல்வாதிகளை திருத்த முடியும். ஆனால் அந்த தில் நம் ஜனநாயக பார்வையில் உள்ளதா என்பதே கேள்வி.

Rate this:
venkat - ,
02-ஜன-201822:29:38 IST Report Abuse

venkatwho stood against cooker ! K kamaraj? Kakkan ? Netaji Bose or or C N A .? Political parties made tons tons of corruption money for past 60 years . Thirumangalam formula only . apparantly Cooker could have shared his spoils . others did not .tender dear tender ....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஜன-201816:05:29 IST Report Abuse

Endrum Indianஇன்னும் 364 நாட்கள் இருக்கின்றது, மக்கள் மனநிலை எப்படி வேண்டுமானலும் மாறலாம். இதற்கு ஆர்.கே நகர் தொகுதி ஒரு சரியான முன்னுதாரணம். இது மட்டும் அகில இந்தியாவில் பரவிவிடின் பணத்துக்கு ஓட்டு அவ்வளுவு தான் கட்சியாவது கொள்கையாவது மண்ணாவது. நாசமாப்போன முட்டாள்தனமான "இலவசம்" டெங்கு போல மிக நன்றாக பரவியிருக்கிறது அகில இந்திய அரசியலில். ஆகவே இந்த துட்டுக்கு ஓட்டும் பரவினால் இந்தியா சுத்தமாக நாசமடைந்து விடும். இது தான் திராவிட கட்சிகளின் சாதனை.

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
02-ஜன-201815:47:30 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..ராஜஸ்தான் ஊத்திக்கொள்ளும், கர்நாடக மிகவும் சிரமப்படவேண்டும் சமீபத்திய தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு சாதகமில்லை, மத்திய பிரதேஷ் என்னதான் வியாபம் ஊழல் என்றாலும் மக்கள் பிஜேபி பக்கமே, சட்டிஷ்க்கார் கடந்த முறையே தப்பித்தான் பிழைத்தார்கள் குஜராத் போல சில பகுதிகள் மட்டும் மொத்தமாக ஜெயித்து தான் ஆட்சியை பிடித்தார்கள் ஓகோ என்றெல்லாம் இல்லை, ஆகையால் இம்முறை கர்நாடக மற்றும் சாத்திஸ்கர் கடும்போட்டி தான்.

Rate this:
Naren - Chennai,இந்தியா
02-ஜன-201814:27:59 IST Report Abuse

Narenபடிச்சவன் கூட EVM மை குறை சொல்றான். ஏதோ EVM எப்படி ஒர்க் பண்ணுதுனு A to Z தெரிஞ்ச மாதிரி அல்லது கூட இருந்து பார்த்த மாதிரி பதிவு போடுறான். EVM மை புரிந்து கொள்வரத்துக்கு முன்னாடி, ROM பற்றி தெரிந்து கொள்ளவும். பிறகு சுஜாதா EVM மை பற்றி எழுதிய கட்டுரைகள் படிக்கவும்.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
02-ஜன-201814:27:15 IST Report Abuse

Pasupathi Subbianவடக்கே பி ஜெ பி வளர்கிறது. தெற்க்கே அதற்குண்டான சந்தர்ப்பமே இல்லை. இன்னமும் மக்கள் ஜாதி மத வேற்றுமைகளில் இருந்து விடுபடவே இல்லை.

Rate this:
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
02-ஜன-201815:31:18 IST Report Abuse

முருகவேல் சண்முகம்..ஒங்களுக்கு அரசியலோ, புவியியலோ தெரியல. வடக்கே தான் ஜாதி மதம் என்று மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள்,இங்கே அது மிக குறைவு. குறிப்பாக இங்கே தமிழகத்தில் தனது ஜாதி அடையாளத்தை காண்பிப்பார்கள் மிக மிக குறைவு, இப்போ சிலர் தங்களை உயர்ந்த ஜாதி என்பதை சொல்ல ஜாதி பேரை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள், ஆனால் இது தமிழகத்திற்கு வெளியே மிக அதிகம், ஆந்திர , கர்நாட என்று வெளியே அணைத்து மாநிலங்களிலும் அதிகம்....

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
02-ஜன-201811:59:25 IST Report Abuse

ganapati sbநமது 75 ம் சுதந்திரதின ஆண்டான 2022 இல் பாரதத்தை வளர்ந்த நாடாக வளர்ச்சி பெற செய்ய லட்சியம் கொண்டு உறுதியோடு அயராது பல மாற்றங்கள் கொண்டு வந்து உழைக்கும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும்தொடர்ந்து வெல்லட்டும்

Rate this:
Mariappa T - INDORE,இந்தியா
02-ஜன-201810:32:58 IST Report Abuse

Mariappa Tபிஜேபி கு EVM இருக்க பயமேன் குஜராத் ல 16 தொகுதியில் வாக்காளர்களை விட 10 % வாக்கு அதிகமா போச்சி எப்படி?

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
02-ஜன-201810:31:40 IST Report Abuse

ஜெயந்தன்மோடி மாஜிக் எல்லாம் காலி ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டது...இப்போ அவர்களுக்கு EVM மாஜிக் தான் கை கொடுக்கும்...வழக்கம் போல...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
02-ஜன-201810:25:19 IST Report Abuse

balakrishnanமாநிலங்களில் போட்டி எப்படி இருந்தாலும், அதை சமாளிப்பது எளிது, கண்காணிக்கவும், கவனிக்கவும் மிகவும் எளிதாக இருக்கும், அகில இந்திய அளவில் பொது தேர்தல் நடக்கும்போது, அப்போது தான் மாஜிக் தேவைப்படும், கடும் போட்டி நிச்சயம் இருக்கும்,

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement