ரஜினியின் அரசியல் அறிவிப்பால் கட்சிகள் அதிருது! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 ரஜினிகாந்த்,Rajinikanth, ரஜினி அரசியல்,Rajini politics, ஜெயலலிதா , Jayalalitha, கருணாநிதி,Karunanidhi, ஆன்மிக அரசியல்,spiritual politics, அ.தி.மு.க.,AIADMK, ரஜினி, Rajini, கன்னடர், 
Kannada,மராட்டியர்,Marathi, பா.ஜ., BJP,Kollywood,

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பால், தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அக்கட்சிகளின் தலைவர்கள், தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 ரஜினிகாந்த்,Rajinikanth, ரஜினி அரசியல்,Rajini politics, ஜெயலலிதா , Jayalalitha, கருணாநிதி,Karunanidhi, ஆன்மிக அரசியல்,spiritual politics, அ.தி.மு.க.,AIADMK, ரஜினி, Rajini, கன்னடர், 
Kannada,மராட்டியர்,Marathi, பா.ஜ., BJP,Kollywood,

ரஜினிக்கு துவக்கம் முதலே எதிர்ப்பாக இருந்து வரும் சில, லெட்டர்பேடு கட்சிகளை உசுப்பேற்றி விடவும், 'ரஜினி தமிழர் அல்ல; கன்னடர், மராட்டியர்' என, பிரசாரம் செய்ய,அவர்களை ரகசியமாக துாண்டி விடவும், கட்சித் தலைவர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தை, 50 ஆண்டு களாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது கட்சி உருவாகவில்லை.இந்த சூழலில், 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக, தமிழக அரசியலில் இரு பெரும் சக்திகளாக, எதிரெதிர் துருவங்களாக செயல்பட்ட ஜெயலலிதா மறைவும், கருணாநிதியின் உடல் நலக்குறைவும், வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வில், தனக்கு அடுத்து யார் என ஜெ., அறிவிக்காததாலும், கருணாநிதி அளவிற்கு, ஸ்டாலினுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லாததாலும், வெற்றிடத்தை யார் நிரப்புவர் என்பது, இதுவரை தெரியவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனுக்கு கிடைத்த வெற்றிக்கு, இந்த இரு கட்சிகள் மீதான வெறுப்பும் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

எதிர்பார்ப்புஅடுத்த பொது தேர்தலில், தினகரன் எனும் நீர்க்குமிழி காணாமல் போகக் கூடும். இந்த சூழல், 'நான் எப்ப வரணுமோ அப்போ வருவேன்...' என, வசனம் பேசிய ரஜினிக்கு, சாதகமாக தெரிந்துள்ளது.அதனால், யாரும் எதிர்பாராத வகையில், புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்து, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

'அரசியல் முடிவு குறித்து அறிவிப்பேன்' என, அவர் கூறியதும், 'வழக்கம் போல், பூச்சாண்டி காட்டுகிறார்; ஏதாவது அமைப்பு, இயக்கம்

துவங்கி, அமைதியாகி விடுவார்' என, கட்சிகள் நினைத்தன. ஆனால், 'புதுக்கட்சி துவங்குவேன்' என, பிடரியில் அடித்தது போன்ற அறிவிப்பால், அவை, கதிகலங்கி விட்டன.

கருணாநிதியுடன், ஸ்டாலினை ஒப்பிட்டு பார்க்க முடியாத மற்றும் கட்சி பதவி கிடைக்காத, சில தி.மு.க.,வினர், ரஜினி பக்கம் தாவக்கூடும். அது போல, சினிமா ரசிகர்கள் ஆதரவால் உருவான, அ.தி.மு.க.,வில், அதன் தொண்டர்கள், எம்.ஜி.ஆர்., - ஜெ., இருந்த இடத்தில், நடிகர் ரஜினியை வைத்து பார்க்கக்கூடும்.

எனவே, கணிசமானோர்,ரஜினி பக்கம் தாவும் வாய்ப்பு உண்டு. இதனால், தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., நிலை மேலும் பரிதாபமாகியுள்ளது.அன்புமணி, 'ஓவியாவிற்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை எனக்கு போட்டிருந்தால், தமிழகத்தை காப்பாற்றி இருப்பேன்' என, புலம்பினார்.அவரிடம், ரஜினியின் வரவை பற்றி கேட்கவா வேண்டும்!

ரஜினியின், 'ஆன்மிக அரசியல்' அறிவிப்பால், பா.ஜ., மட்டுமே எதிர்ப்பு காட்டவில்லை.இந்நிலையில், தங்களுக்கு, பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள ரஜினியை, இன அடையாளத்தை வைத்து, வீழ்த்த, சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதனால், சில, 'லெட்டர்பேடு' கட்சிகளை உசுப்பேற்றி, 'ரஜினி தமிழர் இல்லை; கன்னடர், மராட்டியர்' என அறிக்கை வெளியிட்டு, பேட்டிகள் தந்து, மக்கள் மனதை மாற்ற திட்டமிட்டுள்ளன.

பூர்வீக கிராமம்


'தமிழர் அல்லாத ஒருவர் எங்களை ஆள தகுதி அற்றவர்' என, நாம் தமிழர் கட்சித் தலைவர், சீமான் பேச துவங்கி விட்டார். அந்த வரிசையில், இயக்குனர், கவுதமன் போன்றோர் சேர்ந்துள்ளனர். இவர்களை போல, வேல்முருகன், அமீர் போன்றோர் மற்றும் தமிழ் தேசியவாதிகளும், ரஜினியின் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். எனினும், இந்த இருமுனை ஆயுதம், அவருக்கு சாதகமாக மாறவும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, ரஜினியின் பூர்வீக கிராமமான, கிருஷ்ணகிரி, நாச்சிக்குப்பம் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், ரசிகர் மன்றங்கள் வேகமாக துவங்கப்பட்டு வருவது, அரசியல் கட்சிகளை கலங்க வைத்துள்ளது.

Advertisementஅதனால், தங்கள், தொண்டர்களை, தக்க வைக்க, கட்சிகள் தீவிரமான ஆலோசிக்க துவங்கியுள்ளன. பொங்கலன்று, கட்சி சின்னத்தை ரஜினி வெளியிடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மொத்தத்தில், ரஜினியின் வருகை, தமிழக அரசியல் களத்தை புரட்டிப்போட்டுள்ளது.

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து


ஆங்கில புத்தாண்டை ஒட்டி, நேற்று காலை, தன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு, ரஜினி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார்.அனைவரும், ரஜினி துவங்கப்போகும் அரசியல் கட்சிக்கு வாழ்த்தும், ஆதரவையும் தெரிவித்தனர்.அத்துடன், 'ரசிகர் மன்றங்களை வீதியெங்கும் துவக்கி, தொண்டர்கள் பலத்தை அதிகரிப்போம்' என, ரஜினியிடம் ரசிகர்கள் உறுதி அளித்தனர்.

'மொபைல் ஆப்' துவக்கம்

'ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைப்பது மாபெரும் பணி' என, கூறியிருந்த ரஜினி, அப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.ரஜினி, தனக்கு ஆதரவு தருபவர்களை ஒன்றிணைக்கும் வகையில், rajinimandram.org என்ற, 'மொபைல் ஆப்' மற்றும் இணையதளத்தை நேற்று துவக்கினார்.அது குறித்து, டுவிட்டரில், வீடியோ பதிவில் பேசிய அவர், 'பதிவு செய்த, செய்யாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள், தங்கள் மன்ற விபரத்துடனும், தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும், தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை, இணையதளம், ஆப்பிலும், பதிவு செய்து உறுப்பினராகலாம்' என, தெரிவித்தார்.இதையடுத்து, ஒரே நேரத்தில் ஏராளமானோர் முயற்சித்ததால், இணையதளம் வேகமிழந்தது.


கமல், 'ஷாக்!'

இயக்குனர், கே.பாலசந்தரால் முதலில் பிரபலமானவர் கமல். பின், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி, கமலை படிப்படியாக வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தார்.அது போல, அரசியலுக்கு, இந்த ஆண்டு வரப்போவதாக, கமல் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான பணிகள் துவங்கவிருந்த நிலையில், ரஜினி, திடீர் அறிவிப்பை வெளியிட்டு, அவருக்கு, 'ஷாக்' தந்துள்ளார். இதனால், கமலின் அரசியல் பிரவேசம் தாமதம் ஆக்ககூடும் என, தெரிகிறது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (330)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Tamilmani Chinnasamy - chinnasalem. villupuram,இந்தியா
08-ஜன-201822:20:32 IST Report Abuse

Tamilmani Chinnasamyஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆனானப்பட்ட, திமுக வாக்குகளையே, பெற முடியும் போது ரஜினி ர்சிகர்களின் வாக்குகளை பெறுவது மிக எளிது.

Rate this:
Tamilmani Chinnasamy - chinnasalem. villupuram,இந்தியா
08-ஜன-201822:03:13 IST Report Abuse

Tamilmani Chinnasamyவெரும் பத்து. ரூபாய் கூட செலவு செய்ய மனம் வராத ரஜினியைக்கண்டு, பயப்படுவது முட்டாள் தனம், ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் யாரும் ,பிரபலமான பெரிய மனிதர்கள் அல்ல தேர்தல் வேலைகளைப்பற்றி அறியாதவர்கள்,,மக்களிடம் அறீமுகம் இல்லாதவர்கள் ஆவார்கள், இவர்கள் எதுவும் , செய்ய இயலாத்வர்க்ள், ஆவார்கள். பெரும் செல்வந்தர்களும் அல்ல. இவர்களுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.

Rate this:
Brijesh - Chennai,இந்தியா
08-ஜன-201812:11:10 IST Report Abuse

Brijeshதமிழை தமிழ் நாட்டை கேவலமாக பேசுபவர்களின் பின் புலம் கட்டாயம் டெல்லி யாக இருக்கும்

Rate this:
agalavan - kolumbu,இலங்கை
08-ஜன-201810:46:33 IST Report Abuse

agalavanரஜினி ஒரு இந்தியர் இதில் தமிழன் கன்னடியன் என்று எங்கிருந்து வந்தது , பிரித்தாளும் ஆளுமை தமிழனுக்கு மட்டும் வந்ததற்கு காரணம் திராவிட கட்சிகளே

Rate this:
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
08-ஜன-201812:32:22 IST Report Abuse

Rajavelu E.ஆமாம் நாங்கள் அப்படித்தான். இந்தியா முழுவதும் ஹிந்தியை கட்டாயமாக்க ஹிந்திக்காரர்கள் பாடுபடும் பொது தமிழன் ஏன் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற உரிமையை விட்டு கொடுக்க வேண்டும். நாங்கள் இப்படித்தான்....

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
08-ஜன-201810:07:56 IST Report Abuse

Sahayamரஜினி ரசிகரிகளில் சிலரும் பிஜேபி மக்களும் தான் இதை கொண்டாடுகிறார்கள்

Rate this:
பாலமேடு பால்பாண்டி - பாலமேடு ,இந்தியா
08-ஜன-201810:00:29 IST Report Abuse

பாலமேடு பால்பாண்டிவரும்.................. ஆனா வாராது .............. 1996 இல் இருந்து சொல்லுது சாமி வரும் அது வெறும் காத்து ..... வராது சினிமாத்துறையில் நல்ல பெயர் அத கெடுக்க விரும்பாது இது ஒரு பூச்சாண்டி வேலை. மக்கள் வீணாக வேண்டாம்

Rate this:
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
06-ஜன-201822:14:43 IST Report Abuse

samuelmuthiahrajமுதலில் அவரது மனைவி நடத்தும் பள்ளி கடடடத்திற்கு உரிய வாடகை பாக்கியை செலுத்தவேண்டும் பின்பு மருமகன் தனுஷ் விடயமாக பெற்றோர் என்று சொல்லுவோர் எழுப்பும் குரலுக்கு செவி சாய்த்து உண்மை ஆராயவேண்டும் அவரது அனைத்து வருமானங்களுக்கும் வரி செலுத்தியிருக்க வேண்டும் பிறகு அரசியல் பற்றி பேசிடவும் அரசு அமைக்கவும் விரும்பிடலாம்

Rate this:
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
08-ஜன-201805:32:56 IST Report Abuse

Ramasami Venkatesanஇவை எல்லாவற்றையும் இன்றைய அரசியல்வாதிகள் செய்திருக்கிறார்களா அல்லது செய்கிறார்களா - ஒரு சிலரை தவிர....

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
06-ஜன-201819:25:32 IST Report Abuse

venkateshஇவருக்கு கோவில் காட்டுவோம்.

Rate this:
rauf thaseem - mawanella,இலங்கை
03-ஜன-201811:45:55 IST Report Abuse

rauf thaseemதமிழனை இன்னும் மடையனாக்கும் திட்டத்தை ஒரு கட்சியும், ஒரு ஊடகக் குழுவும் கையில் எடுத்துள்ளது, இவர்கள் யாரும் தமிழ் மண்ணுக்கு சொந்தமில்லை. இதன் பின்னால் போனவன் தமிழனுமில்லை, தமிழனும் தமிழ் நாடும் பல பிரச்சினைகளை எதிர் நோக்கிய போது இவர்கள் எங்கு இருந்தார்கள்

Rate this:
Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
03-ஜன-201821:21:33 IST Report Abuse

Hindustaniபெயரில் கூட தமிழ் இல்லாதவர்கள் உடை தமிழர் உடை இல்லை. மதம் கடவுள் தமிழ் சார்ந்து இல்லை .. வீட்டில் பேசும் மொழியும் தமிழ் இல்லை.. கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாச்சாரம் இல்லை.. எந்த விதத்திலும் தமிழ் மற்றும் தமிழனை பற்றி பேச அருகதை இல்லை.....

Rate this:
Azhagan Azhagan - Chennai,இந்தியா
04-ஜன-201811:36:48 IST Report Abuse

Azhagan Azhaganஇதுவரை நீங்கள் ஆட்சியில் அமர்த்தியவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள். புதியதை வரவேற்கவேண்டும். தமிழ்நாட்டிற்கு இபோது அரசியல் மாற்றம் அவசியம் தேவை. இவர் பதவிகோ பணத்திற்கோ ஆசைப்பட்டு வருவதாக தோன்றவில்லை. எங்கள் ஆதரவு இவருக்குத்தான். நல்லது செய்வதற்கு மனது இருந்தால் போதும் மதமோ ஜாதியோ தேவை இல்லை நண்பரே...

Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-ஜன-201823:39:06 IST Report Abuse

Matt Pமுன் பின் தெரியாதவர்கள் அரசியலுக்கு வருவதை விட,மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் வரட்டும் . அவர்கள் திரை துறையை சார்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை ..எழுத்தாளர்கள் ,சமூக சேவகர்கள் ,ஆபத்துலகலாம் போன்ற விஞ்சானிகள் ,,இப்படியானவர்கள் ...முயற்சிக்கலாம் ...முன்னாள் ias ips அதிகாரிகள் இவர்களும் தான் ...சுயேட்சையாக போட்டியிட தயங்குவதில்லை ...குட்டையில் நீந்துவது மாதிரி .....கட்சி தொடங்குவது ..கடலில் நீந்துவது மாதிரி ..அவர்களுக்கு தயக்கத்தை கொடுக்கும்போது ...துணிந்தவனுக்கு துக்கமில்லை ...என்று ரஜினி போன்றவர்கள் வருவதை வரவேற்போம். ...யார் வந்தாலும் முடிவு மக்கள் கையில் தான் ...எம்ஜிஆர் ...துணிந்து ...அன்றைய திமுக வை எதிர்த்தார் ..வூழல்களை வெளிப்படுத்தினார் ..வெற்றி பெற்றார் ...அவர் நண்பர் இவர் நண்பர் என்று சமூக துரோகிகளை தூற்ற தயங்கினால்...அரசியல் வாழ்க்கையில் அழிவு தான் ...எம்ஜி ஆர் மீது கத்திகள் வீசப்பட்டது ..அதை எல்லாம் தாண்டி உயிரை பணயம் வைத்து வெற்றி பெற்றார் ...தியாக மனப்பான்மை வேண்டும் ...ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதும் உயிர் தியாகம் தான் ...அப்படி எல்லாம் நடக்க கூடாது தான் ...இன்னும் கற்கால மனிதர்களோடு வாழும்போது எதுவும் நடக்கும் .

Rate this:
மேலும் 316 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement