அம்மா தி.மு.க.: தினகரன் முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அம்மா தி.மு.க.:
தினகரன் முடிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, சசிகலா அக்கா மகன், தினகரன், 'அம்மா தி.மு.க.,' என்ற கட்சியை துவங்க முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.


Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க.,வை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட்ட, தினகரன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வினரின் உள்ளடி வேலைகளே, தினகரன் வெற்றிக்கு காரணம் என, கூறப்படுகிறது.இதனால், தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர், அ.தி.முக.,வில் இருந்து, அதிரடியாக நீக்கப்பட்டனர்.அவர்களுக்கு, பதவிகள் வழங்க வேண்டிய நெருக்கடி, தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நடிகர் ரஜினி, நேற்று முன்தினம், தனிக்கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால், பிரதான கட்சிகளில் இருந்து, முக்கிய பிரமுகர்கள் ஓட்டம் பிடிக்க தயாராகி உள்ளனர்.

அம்மா தி.மு.க.அந்த வரிசையில், தன் ஆதரவாளர்களும் இடம் பெற்று விடக் கூடாது என்ற கவலையும்

, பயமும் தினகரனுக்கு உருவாகி உள்ளது. எனவே, தனிக்கட்சி துவங்கும் முடிவை, தினகரன் எடுத்துள்ளார்.இது குறித்து, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: கர்நாடகா, புதுச்சேரி,

கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும், தினகரனுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.எனவே, அனைத்திந்திய அ.தி.மு.க.,வை போல, 'அனைத்திந்திய அம்மா தி.மு.க.,' என்ற பெயரில், புதுக்கட்சியை துவக்கி, அதை பதிவு செய்ய, ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி கொடியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவத்தை பொறிப்பது என்றும், அடுத்து வரும் தேர்தல்களில், 'குக்கர்' சின்னத்தையே பயன்படுத்துவது என்றும் தீர்மானித்து உள்ளார்.


'அ.தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் தான், தன் செல்வாக்கு உயரும். அ.தி.மு.க.,வில் சேர்ந்தால், ஆட்சி, அதிகாரத்திற்காக ஆசைப்பட்டதாக, பொதுமக்கள் கருதுவர். இது, தன் வளர்ச்சியை பாதிக்கும்' என்றும், தினகரன் நினைக்கிறார்.அத்துடன், ரஜினியின் அரசியல் பிரவேசம், மற்ற கட்சிகளைமட்டுமின்றி, தன்னையும் சேர்த்து பாதிக்கும் என்ற பயமும், அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ரஜினிக்கு முன், அம்மா தி.மு.க.,வை

Advertisement

துவக்க, தினகரன் திட்டமிட்டு உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


பழைய கணக்கு சரிப்படுமாஎம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கிய ஓராண்டில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில், மாயத்தேவர் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க., மூன்றாமிடமும், எதிர்க்கட்சியாக இருந்த, காங்., இரண்டாம் இடத்திற்கும் தள்ளப்பட்டன. அதன்பின், காங்., கரைந்து போனது. பின், அண்ணாதுரையை மையப்படுத்தி, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
தற்போது, ஆர்.கே.நகர் தேர்தலில், அ.தி.மு.க., இரண்டாம் இடமும், தி.மு.க., மூன்றாவது இடமும் சென்றுள்ளதால், எதிர்காலத்தில், ஜெயலலிதாவை மையப்படுத்தி தான், அ.தி.மு.க., - தினகரன் கட்சி இடையே போட்டியிருக்கும். தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது என, தினகரன் தரப்பினர்
கணக்கு போடுகின்றனர்.- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
04-ஜன-201820:42:31 IST Report Abuse

Somiah Mஅம்மா தி மு க என்றால் சின்ன அம்மா தி மு காவா அல்லது பெரிய அம்மா தி மு காவா ?

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
02-ஜன-201823:04:41 IST Report Abuse

Sivaப.திமுக(பணம்)டதிமுக(டப்பு)பிதிமுக(பிராடு)லதிமுக(லஞ்சம்)கொதிமுக(கொ__.கொள்__). ஊரை அடித்து . _______நடத்துங்க______

Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
02-ஜன-201821:04:32 IST Report Abuse

Thirumuruganஇது கற்பனையே.....

Rate this:
திராவிடன் - chennai ,இந்தியா
02-ஜன-201821:03:14 IST Report Abuse

திராவிடன்20 ரூபாய் நோட்டுடேன் நிறையபேர் அலைகிறார்கள் ராதாகிருஷ்ணன் நகரில்(R.K.NAGAR) கோடுக்கும் குணம் மன்னார்குடி திரு தினகரன் க்கு இல்லை, லஞ்சம் நல்லது சொல்றிங்களா ...

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
02-ஜன-201820:40:32 IST Report Abuse

Devanatha Jagannathanபணம் வைத்திருப்பவன் பின்னால் பத்துபேர். பைத்தியக்காரன் பின்னால் பத்துபேர் என்னும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

Rate this:
G SEETHARAMAN - KOLLAM,இந்தியா
02-ஜன-201820:12:33 IST Report Abuse

G SEETHARAMANஎல்லா கட்சிகளுக்கும் முதல்வர் வேட்பாளர் இருக்கிறார். தினகரன் பன்னீர்செல்வம் எடப்பாடி ஸ்டாலின் விஜயகாந்த் சீமான் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் ரஜனிகாந்த். யோசித்தால் இன்னும் பல பேர் உள்ளனர். எப்படி தினகரன் மாத்திரம் ஸ்பெஷல். ஒன்றும் புரியவில்லை. ஆனால் எல்லா தலைவர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்போது உள்ள ஆட்சிக்கு வேண்டிய மெம்பர்கள் எண்ணிக்கை இல்லை. ஆனால் கோர்ட்டில் தீர்ப்புகள் வந்தால் தான் கவர்னருக்கு ஏதாவது செய்ய முடியும். சட்டசபை கூடவுள்ளது. அப்போது என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். அதுவரை குழம்ப வேண்டாம்.

Rate this:
Prem - chennai,இந்தியா
02-ஜன-201818:14:13 IST Report Abuse

Premeathuku endha veen vilambaram ellam velangama poidum kavalapadatha

Rate this:
நிலா - மதுரை,இந்தியா
02-ஜன-201816:57:42 IST Report Abuse

நிலாஅம்மா திமுக அய்யா திமுக தளபதி திமுக அஞ்சா நெஞ்சர் திமுக கனி திமுக ராசா திமுக இப்படியே வளரும் போல் திமுக நிஜ திமுக அழியும் நிலையில்

Rate this:
ram - chennai,இந்தியா
02-ஜன-201816:46:46 IST Report Abuse

ramDhinakaran comedy kku oru limit illama pochu.. chinnamma name la katchi thodanga vendiya thana TTV..???

Rate this:
mangaibagan - bangalore,இந்தியா
02-ஜன-201816:42:55 IST Report Abuse

mangaibaganதினகரன் அரசியலில் நீடிப்பார் என நம்பலாம்.

Rate this:
மேலும் 74 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement