அசாமில் இந்தியர்கள் யார்? - முதல் என்.ஆர்.சி., வெளியீடு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அசாமில் இந்தியர்கள் யார்?
முதல் என்.ஆர்.சி., வெளியீடு

கவுகாத்தி : அசாமில், 1.9 கோடி பேரை, சட்டபூர்வ இந்திய பிரஜைகளாக அங்கீகரித்து, என்.ஆர்.சி., எனப்படும், தேசிய பிரஜைகள் பதிவு ஆவணம் வெளியிடப்பட்டு உள்ளது.

அசாமில் இந்தியர்கள் யார்? - முதல் என்.ஆர்.சி., வெளியீடு


விண்ணப்பங்கள்


அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்த சோனவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கக் கோரும் விண்ணப்பங்களை, 3.29 கோடி பேர் சமர்ப்பித்து உள்ளனர்.

இவை, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 1.9 கோடி பேரை, இந்திய பிரஜைகளாக அங்கீகரித்து,

தேசிய பிரஜைகள் பதிவு ஆவணத்தின் முதல் பகுதி வெளியிடப்பட்டு உள்ளது.மீதமுள்ளவர்கள் தொடர்பாக, பல்வேறு நிலைகளில், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாக, இந்திய ரெஜிஸ்டிரார் ஜெனரல், சைலேஷ் கூறியுள்ளார்.

இது குறித்து, கவுகாத்தியில், நேற்று, நிருபர்களிடம் சைலேஷ் கூறியதாவது;அசாமில், அண்டை நாடான, வங்கதேசத்தில் இருந்து ஏராளமான மக்கள், சட்ட விரோதமாக குடிபெயர்ந்து உள்ளனர். எனவே, அசாமில் வசிப்பவர்கள், இந்தியர்கள் தானா என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதற்கான பணி நடக்கிறது.அசாம் முழுவதும், 68.27 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 3.29 கோடி பேர் தொடர்பான ஆவணங்கள்சரிபார்க்கப்படுகின்றன.

சந்தேகம்


இந்த பணிகளை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், 2017 டிச., 31க்குள், என்.ஆர்.சி., முதல் வரைவு ஆவணத்தை வெளியிட வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளது.

Advertisement

அதன்படி, தற்போது முதற்கட்டமாக, 1.9 கோடி பேர் அடங்கிய, என்.ஆர்.சி., வரைவு ஆவணம் வெளியிடப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும், சட்டபூர்வ இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

மீதமுள்ளவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள், பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்த பணிகள் அனைத்தும், இந்தாண்டு இறுதிக்குள் முடியும்.என்.ஆர்.சி., வரைவு ஆவணத்தில் சேர்ப்பதற்காக வந்துள்ள விண் ணப்பங்களில், 38 லட்சம் பேரின் ஆவணங்கள் சந்தேகத்துக்கு உரியவை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan - london,யுனைடெட் கிங்டம்
05-ஜன-201803:35:08 IST Report Abuse

maganஅஸ்ஸாமை விடுங்க இப்ப சென்னைல இருக்கிற எல்லா டீக்கடைகளையும் நடத்துறது கேரளாவில் இருந்து வந்த பங்களாதேஷிகள்

Rate this:
தியாகி கோட்சே நேசன் - புனே,இந்தியா
02-ஜன-201813:54:51 IST Report Abuse

தியாகி கோட்சே நேசன்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
02-ஜன-201812:20:29 IST Report Abuse

ganapati sbமதத்தின் பெயரால் தனிநாடு வேண்டும் என பிரிந்து சென்றவர்கள் மீண்டும் நம் நாட்டில் புகுந்து குழப்பம் விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அவர்களை நாடு கடத்தி நம் மக்களுக்கு மேலும் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்

Rate this:
VijaianC -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜன-201810:55:24 IST Report Abuse

VijaianCPakistan jaicha pattasu vedikaravangala

Rate this:
kuthubdeen - thiruvarur,இந்தியா
02-ஜன-201809:39:49 IST Report Abuse

kuthubdeenஎல்லா ஆவணங்களையும் பார்த்து கொண்டு நேரத்தை வீணடிக்காமல் முஸ்லீம் மக்கள் மீது தானே சந்தேகம் ..அவர்களின் பூர்விகம் ஆதாரம் முன்னோர்களின் பதிவு இவற்றை கொண்டு தீர்மானித்து விடலாமே ?சட்டவிரோதமாக குடியேறியவார்கள் என்றால் நடவடிக்கை எடுக்கட்டும் ..பழிவாங்கும் நடவடிக்கையா இதை செய்ய கூடாது ...முஸ்லீம் விரோத பிஜேபி ஆட்சி என்பதால் உண்மையான இந்தியர்களா இருந்தாலும் தேவை இல்லாமல் பழிவாங்க வாய்ப்பு இருக்கு .

Rate this:
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
02-ஜன-201812:20:01 IST Report Abuse

Narayanஇங்கிருக்கும் பிரச்சனை இல்லீகல் அகதிகள் அல்ல. போலி மதச்சார்பின்மை கட்சிகளும் உங்கள மாதிரி ஆட்களும் அவுங்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தான். பக்கத்து வீட்ல, பக்கத்து தெருல, ஐடி டாகுமெண்ட் ரெடி பண்ணி தர்றவன், சொந்த ஜமாத்தில ஒருத்தன் இருந்தாலும் அரசுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க....

Rate this:
02-ஜன-201822:32:36 IST Report Abuse

SathyanarayananSathyasekarenMr kudhdeen, BJP not against Muslims, against the Muslims who still supporting Pakistan, who dont what to sing national anthem, who dont what to say vande Matharam. change your mindset....

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-ஜன-201807:16:29 IST Report Abuse

Loganathan Kuttuvaமேற்கு வங்கத்திலும் பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-201804:25:12 IST Report Abuse

Kasimani Baskaranஇந்தியர் அல்லர் என்று உறுதி செய்யப்பட்டவர்களை பங்களாதேஷுக்கு திரும்ப அனுப்பவேண்டும்...

Rate this:
Anandan - chennai,இந்தியா
02-ஜன-201807:05:29 IST Report Abuse

Anandanஅவர்கள் இந்தியா முழுவதும் பரவி விட்டனர். திரும்ப அனுப்பும் வேலையை சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும்....

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
02-ஜன-201811:36:16 IST Report Abuse

pradeesh parthasarathyஅப்போ வெகு விரைவில் மியான்மரில் ரோகிங்கியா மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு இங்குள்ள இந்த மக்களுக்கு பிஜேபி யால் வரப்போகிறது என்பதை சொல்றீர்கள் ... உங்கள் வெறியை அடக்க சீக்கிரம் ஆரம்பியுங்கள் .......

Rate this:
GK Samy - Dubai,இந்தியா
02-ஜன-201818:01:03 IST Report Abuse

GK Samyநீ யாருன்னு மொதல்ல சொல்லு நீ பார்த்தசாரதி இல்லடா, அசிங்கமா திட்ட போறாங்க உன்னை பெயரை சொல்லவே உனக்கு தைரியம் இல்ல போடா போ வேலை இருந்தா பாரு இல்ல..........................

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement