பாக்.,கிற்கு நிதி கிடையாது! டிரம்ப் அதிரடி அறிவிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
பாக்.,கிற்கு நிதி கிடையாது!
டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன் : "பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளன. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பொய் சொல்லி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது," என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

டோனால்ட் டிரம்ப்,Donald Trump, பாகிஸ்தான், Pakistan, பயங்கரவாதம், Terrorism,ஆப்கானிஸ்தான்,Afghanistan, ராணுவத் தளவாடங்கள், அமெரிக்க அதிபர்  டிரம்ப்,US President Trump,

'நாட்டோ' அமைப்பில் இல்லாத மிக முக்கியமான கூட்டாளி என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்து வந்தது.

ராணுவத் தளவாடங்கள், தொழில்நுட்பங்களை அளித்து வந்தது.அமெரிக்க அதிபராக கடந்தாண்டு ஜனவரியில், டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான உறவில் மாற்றம் ஏற்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்காததை அமெரிக்கா கண்டித்து வந்தது.பாகிஸ்தானுக்கு, கடந்த, 2016ல், 7,022 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதில், 1,436 கோடி ரூபாயை, டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.இந்த நிலையில், 'டுவிட்டர்' சமூகதளத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, கடந்த, 15 ஆண்டுகளில், 2.10 லட்சம் கோடி ரூபாயை நிதி உதவியை முட்டாள்தனமாக வழங்கி வந்துள்ளது.

Advertisement

அமெரிக்க தலைவர்களை முட்டாள்கள் என்று நினைத்துள்ள பாகிஸ்தான், அதற்கு பிரதிபலனாக பொய் மற்றும் ஏமாற்றத்தையே அளித்து வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் நமது நடவடிக்கைகளுக்கு எந்த உதவியும் செய்யாமல், அவர்களுக்கு புகலிடம் அளித்து வருகிறது. பாக்.,கிற்கு இனி நிதியுதவி கிடைக்காது. இவ்வாறு, செய்தியில் டிரம்ப் கூறியுள்ளார்.பாகிஸ்தானுக்கு இனி நிதிஉதவி கிடையாது என்பதை, மிகவும் கடுமையான வார்த்தைகளில் டிரம்ப் கூறியுள்ளது, புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan - london,யுனைடெட் கிங்டம்
02-ஜன-201823:17:53 IST Report Abuse

maganநாட்டாமை தீர்ப்பை மாத்திடாத இன்னும் நெறய எதிர் பார்க்கிரோம்

Rate this:
NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்
02-ஜன-201817:10:31 IST Report Abuse

NVRAMANANBelated decision, still it is very crucial to terrorist freindly country.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஜன-201816:09:58 IST Report Abuse

Endrum Indianஅப்போ இவ்வளவு நாள் இந்தியா சொல்லும் போது அமெரிக்காவின் புத்தி எங்கே இருந்தது? இப்போ தான் தெளிவு பிறந்ததா?

Rate this:
02-ஜன-201814:34:23 IST Report Abuse

NaushadBabjohnகாசிமணி பேசாம ஊசிமணி வித்துட்டு போகலாம் எத்தனை நாளைக்கு உங்க பொய் நிலைக்குதுன்னு பார்க்கலாம் பிஜேபி காத்து பட்டாலே தானா பொய் தான் செய்துட்டு வேற யாராவது ஏமாந்தவன் பேர்ல போடுறது .இதெல்லாம் தானா வந்துடும் போல.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
02-ஜன-201810:46:27 IST Report Abuse

ganapati sbஉண்மையை உணர்ந்த ட்ரும்பிற்கு வாழ்த்துக்கள் இனியாவது திருந்த பாக் முயலுமா இல்லையேல் பலூச்சை பிரித்து திருந்த வைக்க வேண்டுமா

Rate this:
Subash - Thanjai,இந்தியா
02-ஜன-201814:54:52 IST Report Abuse

Subashபக்கிகள் திருந்தப்போவது இல்லை. அவன் உடம்பில் ஓடுவது தீவிரவாதம், பயங்கரவாதம் என்னும் ரத்தம்தான். சீனாக்காரன் நன்றாக காலூன்றிவிட்டான்...இனிமேல் பக்கிகள் சீனாக்காரனின் ஆதிக்கத்தில்தான். டிராகன் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிவிடும்....

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
02-ஜன-201810:15:07 IST Report Abuse

N.Purushothamanபாக்கிகளின லட்சணம் ஏக மனதாக பொய்யுரைத்து உலகத்தை ஏமாற்றுவது ,ராணுவத்தின் துணையோடு இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தீவிரவாதிகளை அனுப்பி நாச வேலையில் ஈடுபடுவது ,எவனாவது தீவிரவாதி தப்பி தவறி மாட்டிகிட்டான்னா எங்க நாட்டை சேர்ந்தவன் இல்லை என முழு பூசணிக்காயை சோத்தில் மறைப்பது போல் மறைப்பது இன்னும் பல தில்லாலங்கடி செய்வது தான் அவனுங்க முழு நேர வேலை ..

Rate this:
jagan - Chennai,இந்தியா
02-ஜன-201805:44:01 IST Report Abuse

jaganஅமெரிக்காவில் ஆயத தயாரிப்பு நிறுவங்களின் லாபி ரொம்ப ஸ்ட்ராங்....ஆய்தம் விற்பதை இவரால் தடுக்க முடியாது....பாக்கலாம்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-201804:22:57 IST Report Abuse

Kasimani Baskaranஇதுவரை கொடுத்த நிதியை வைத்து உலகநாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தீரவிரவாதம் பரவ அத்தனை வேலைகளையும் பாக்கிகள் செய்தார்கள்... இன்னும் அவர்கள் பாடம் படிக்கவில்லை... பாகிஸ்தான் அழிந்தாலன்றி தீவிரவாதம் குறையாது... அவர்களே தீவிரவாதத்தை விடவேண்டும் என்று நினைத்தாலும் நம்மூர் காங்கிரஸ் பன்றிகள் வீட்டில் விருந்து வைத்து இருக்கும் பணத்தை கொடுத்து தீவிரவாதம் வளர்க்க உதவுவார்கள்.. காங்கிரசை ஒழித்துக்கட்டினால் தீவிரவாதத்தின் உக்கிரம் குறையும் என்று நம்பலாம்...

Rate this:
parthiban - doha,கத்தார்
02-ஜன-201811:58:52 IST Report Abuse

parthibanஆஹா.. அருமையான கற்பனை பாஸ்கர், எல்லாத்துக்கும் காங்கிரஸ் ஆஹா......

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
02-ஜன-201804:14:36 IST Report Abuse

Pannadai Pandianபொய் பேச, துரோகம் இழைக்க, கடவுளுக்கு எதிராக நடக்க குர்ஆனில் வழிமுறை இருக்கு. குரானின் மேற்காட்டுதல்படி பாகிஸ்தான் நடக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல் பாகிஸ்தானை நம்புவது அமெரிக்காவின் குற்றம். ஹபீஸ் சையத் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு காத்திருக்கு. அவன் என்ன உயிருக்கு பயந்தா திரியிறான்....பாகிஸ்தான் ராணுவத்தோடு அழகாக வளம் வருகிறான். இந்த பரிசு ஒரு கேள்வி குறி. அமெரிக்கா உண்மையிலேயே தீவிரவாத ஒழிப்பில் அக்கறை கொண்டிருந்தால் இந்த விஷ பூச்சியை என்றோ கொன்றிருக்கும். அதை இதுவரை செய்யவில்லை, ஏன் ??? சீக்கிரம் அங்க ஒரு பெரிய ட்ரொனை அனுப்புங்க, ஜெய்ஜிந்தபுரத்துக்கு சின்ன ட்ரொனை அனுப்புங்க.

Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
02-ஜன-201803:12:56 IST Report Abuse

Milirvanஇராக், ஆப்கான் போல அங்கும் உதை விழுந்தால், நம் எல்லைகளை மிக கவனமாக, உள்ளூர் கேன்சர் செல்களை மிக மிக கவனமாக கண்காணிக்கவேண்டும்.. இதுதான் சாக்கு என்று யூரோப்புக்குள் புகுந்ததைப்போல இங்கே புகப்பாப்பான்கள்.. ஏற்கனவே கிழக்கு மாநிலங்களில் ரோஹிங்கிய கொசுத்தொல்லை வேறு..

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement