சமையல், 'காஸ்' சிலிண்டர் விலை ரூ.5.50 குறைவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சமையல், 'காஸ்' சிலிண்டர்
விலை ரூ.5.50 குறைவு

சென்னையில், வீட்டு சமையல், 'காஸ்' சிலிண்டர் விலை, 5.50 ரூபாய் குறைந்துள்ளது.

சமையல், 'காஸ்' சிலிண்டர் விலை ரூ.5.50 குறைவு

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள், வீடு, 14.20 கிலோ; வணிக பயன்பாடு, 19 கிலோ என, இரு வகையான சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.

சரிந்துள்ளதுஇந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில்,

கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.அதன்படி, சென்னையில், 2017 டிசம்பரில், வீட்டு சிலிண்டர், 756ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதம், இதன் விலை, 5.50 ரூபாய் குறைந்து, 750.50 ரூபாயாக சரிந்துள்ளது.இதே காலத்தில், வணிக சிலிண்டர் விலை, 9.50 ரூபாய் சரிவடைந்து, 1,399 ரூபாயில் இருந்து, 1,389.50 ரூபாயாகக் குறைந்துள்ளது.

எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக சந்தையில், மானியம் அல்லாத சிலிண்டர் மட்டுமே விற்கப்படுகிறது. மத்திய அரசு,சிலிண்டருக்கு வழங்கும் மானிய தொகை எவ்வளவு என்றவிபரத்தை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள, மானிய சிலிண்டர்; மானியம் அல்லாத சிலிண்டர் என்ற பெயரில், அவற்றின் விலை தெரிவிக்கப்படுகிறது.

Advertisement


அதன்படி, இம்மாதம், மானிய சிலிண்டர் விலை, மாறுதல் இன்றி, 483 ரூபாயாக உள்ளது. மானியம் அல்லாத சிலிண்டர், 750.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த விலைக்கு, வாடிக்கையாளர் சிலிண்டர் வாங்க வேண்டும். அவரின் வங்கிக் கணக்கில், அதற்கான மானியமாக, 266.79 ரூபாய் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
02-ஜன-201814:08:21 IST Report Abuse

N.Kaliraj இது ஓகே.....கடந்த வருடம் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி 869 ருபாய்...இந்த வருடம் 821 + 74 + 74 =969 காரணம் GST 74 + SGST 74 =148 ஆக மோடி கொள்ளை 148 ரூபாய்...இது எப்படி இருக்கு...

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
02-ஜன-201814:29:34 IST Report Abuse

பலராமன்வருஷா வருஷம் சம்பள உயர்வு மட்டும் கேட்கிறீர்கள்? வரி ஏறினால் மட்டும் மோடி கொள்ளை?...

Rate this:
skv - Bangalore,இந்தியா
03-ஜன-201801:16:26 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இப்போது காஸ் விலை கேட்டாலே அழுகைதான் வரது .இன்டெக்ஸான் அடுப்பு இருக்கு ஆனால் கரெண்ட்?...

Rate this:
mthahir - Kuwait,குவைத்
02-ஜன-201811:48:35 IST Report Abuse

mthahirபெட்ரோல், டீசல் போன்று ஆரம்பத்தில் மிக அதிக விலை ஏற்றம், Rs 250 ஏற்றிவிட்டு தற்போது Rs 1, 2 , 3 என்று குறைபாடு மக்கள் காதில் பூசுற்றுவது போலுள்ளது.

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
02-ஜன-201810:50:18 IST Report Abuse

narayanan iyerவிலை குறைந்து வரும் நேரத்தில் ஏன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறிக்கொண்டே போகிறது?யாரும் கேள்வி கேக்கவில்லையோ?

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
02-ஜன-201814:57:50 IST Report Abuse

பலராமன்சம்பளமும் வருஷ வருஷம் ஏறி கொண்டே போகிறதே அதை பற்றி ஏன் பேசுவதில்லை?...

Rate this:
skv - Bangalore,இந்தியா
03-ஜன-201801:17:35 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இப்போதெல்லாம் பியூன் கூட பல்லாயிரம் சம்பளம் வாங்குறானுங்கோ அரசாங்கத்துலேயே...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X